Saturday, 18 August 2012

பயணக்கட்டுரை—சுவிட்சர்லாந்து


நாங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்த நேரம் அந்த நாட்டின் தேசியநாள். ஆதலால் எங்களது சுற்றுலா  வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
டிடிலிஸ் மலை உச்சி--ஸ்விட்சர்லாந்து

காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு "டிட்லிஸ்" மலை உச்சிக்குப் பயணம். இதற்கு இரண்டு மூணு கேபிள் கார்களில் பயணம். இந்த மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இரண்டாவதாக நாங்கள் பயணித்த கேபிள் கார் சுற்றும் வசதி கொண்டது. இது போன்ற வசதி உலகில் வேறெங்கும் இல்லை என்று வழிகாட்டி சொன்னார். டிட்லிஸ் 3020 மீட்டர் உயரத்தில் உள்ளது. நாங்கள் சென்ற வேளை பனிப்பாறைகள் எங்களை சருக்க அழைத்தன. இந்த இடத்தைப் பார்த்தவுடன் வயதானவர்களுக்கும் இளமை திரும்பிவிடுகிறது. எங்களுடன் வந்த எழுபத்தியிரண்டு வயது தாத்தா பனிச்சறுக்கு விளையாட்டில் இறங்கி குதூகலிக்க ஆரம்பித்தார். அவரைப் பார்த்தவுடன் எங்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
லுசென் போர் நினைவுச்சின்னம்

பிறகு மலையிலிருந்து இறங்கி “லுசென்” என்ற பள்ளத்தாக்கு பிரதேசத்திற்கு சென்றோம். இங்கு உள்ள லுசென் ஏரி வெகு பிரசித்தம். சமீபத்தில் வந்த நிறைய தமிழ் படங்களில் இதை பார்க்கலாம். சுவிட்சர்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு. பெரிய ஏரிகள் மொத்தம் 56 உள்ளன. லுசென் ஏரி அந்த நாட்டின் ஐந்தாவது பெரிய ஏரியாகும். பரப்பளவு 114 சதுர கிலோமீட்டர். இதைத்தவிர ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான ஏரிகள் 207 உள்ளன. அன்று ஏரியில் அந்த எழுபத்தி இரண்டு வயது இளைஞருடன் பெடல் படகு சவாரி வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அனுபவம். கிட்டதட்ட ஒரு மணி நேரப்பயணத்தில் அவர் எனக்கு போதித்த அனுபவ அறிவுரை இந்த சுற்றுலாவின் ஒரு இனிய நிகழ்வு.
லுசென் ஏரி சுவிட்சர்லாந்தின் ஐந்தாவது பெரிய ஏரி

சுவிட்சர்லாந்தின் மொத்த ஜனத்தொகை 79 லட்சம் மட்டுமே. ஆதலால் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் உள்ள இடைவெளி குறைந்தது இரண்டு கிலோமீட்டர் ஆவது இருக்கும். இந்த நாடு மொத்தம் 26 “கேண்டன்”களை (மாகாணங்கள்) கொண்டது. லுசென் நகரில் உள்ள சிங்க நினைவு சின்னம் சரித்திரப் புகழ் வாய்ந்தது (இதைப் பற்றி ஒரு தனி பதிவு போடவேண்டும்).
பணி சூழ்ந்த ஜங்ஃப்ரோ மலை

அடுத்த நாள் காலை ஐரோப்பாவின் சிகரம் என்று அழைக்கப்படும்  ஜங்ஃப்ரோ (Jungfraujoch) நோக்கிப் பயணம். அதற்கு முன் ட்ரம்மேல்பக் என்கிற ஐரோப்பாவின் ஒரே Glacier Falls (பணி நீர்விழ்ச்சி) கண்டோம் இந்த நீர்வீழ்ச்சி மற்றைய நீர்வீழ்ச்சிகள் போல் திறந்த வெளியில் உள்ளது அல்ல. மலையைக் குடைந்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள். மலைகளுக்கு உள்ளே அமைந்த நீர் வீழ்ச்சி.
ட்ரம்மேல்பக் நீர்வீழ்ச்சி

ஜங்ஃப்ரோ செல்ல ஹார்டிர்க்ளம் (Harder Kulm) என்ற ரயில்வே ஸ்டேஷனில் வண்டி ஏறினோம். இது நம்ம ஊரு ஊட்டி ரயில் போல, பல்சக்கரம் (COGWHEEL)  கொண்டது. நங்கள் சென்ற நேரம் Jungfraubahn railways  தனது நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1893 ல் கருவாகி, பின்னர் அரசாங்கத்தின் அனுமதி பெற்று கிட்டதட்ட இருபது வருடங்கள் போராடி 9.3 கிலோமீட்டர் தொலைவு, 3454 மீட்டர உயரத்தில், மலையைக் குடைந்து  இருப்புப்பாதை போட்டு 1912 ல் தொடங்கிய ரயில்வேஸ் இது.
Jungfraubahn railways

ஜங்ஃப்ரோ அருமையான இடம் எங்கு பார்த்தாலும் பணிதான். இங்கு வரும் அதிக சுற்றுலா பயணிகள் இந்தியர்கள்தானாம். அதனால்தான் இங்கு உள்ள உணவு விடுதிகளில் “பாலிவூட்” உணவு விடுதி பிரபலம். எங்கு பார்த்தாலும் நாம் ஊரு திரைமுகங்கள்தான். விடுதியில் நுழைந்தவுடன் முதலில் தெரிவது நம்ம சூப்பர் ஸ்டாரின் “முத்து” போஸ்டர் தான்.

----------------------------பயணம் தொடரும்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்குங்க .

”தளிர் சுரேஷ்” said...

அருமையான தகவல்கள்! அழகிய படங்கள்! பயண அனுபவம் அருமை!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 18ஒ கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் படங்களோடு பதிவு அருமை... நன்றி... (TM 3)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ். ரா. ஸார்.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

இன்னும் நிறையவே அழகான இடங்கள் இங்கு உள்ளது சகோ .அதிலும் மிநியத்தூர் என்ற இடம் ஒரு குட்டி சுவிற்சர்லாந்து செயற்கையாய் செய்துள்ளனர் பார்பதற்கு பிரமிப்பாய் இருக்கும் .சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள் .வாழ்த்துக்கள் சகோ இது போன்ற
பயண அனுபவம் மேலும் தொடர .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Anonymous said...

சுவிட்சர்லாந்து சென்று வந்த அனுபவத்தை கட்டுரை எமக்கு கொடுத்தது...

கும்மாச்சி said...

அம்பாளடியாள் நன்றி.

SNR.தேவதாஸ் said...

போட்டோவைப் பார்த்தே எனக்கு குளிருதே!தாங்கள் அங்கே எப்படி சமாளித்தீர்கள்.டாஸ்மாக் எவ்வளவு செலவு ஆகிச்சு.
வாழ்க வளமுடன்.
கொச்சி தேவதாஸ்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி. டாஸ்மாக் சப்பளை ப்ரீ.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.