இன்று உச்சநீதிமன்றம் சரித்திர புகழ்வாய்ந்த இரண்டு தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. முதலில் அந்த தீர்ப்புகளை பார்ப்போம். முதலாவது கூடங்குளம் அனுமின்நிலையம் பற்றிய வழக்கில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கூடங்குளம்
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது கூடங்குளம் அணு உலைக்கு தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அணு உலைக் கழிவால் கடல்வளத்துக்கு ஆபத்து என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார். ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜப்பானின் புகுஷிமாவை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது கூடங்குளம் அணு உலை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். அப்போது, கூடங்குளத்தில் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது? செலவு செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியம் அல்ல. கூடங்குளத்தில் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். கூடங்குளத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் அணு உலையை இழுத்து மூட வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கு
மற்றைய தீர்ப்பு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சசிகலா தரப்பிற்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
சசிகலாவின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகெய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவணங்களைப் பாவையிட அனுமதி கொடுத்தார். இதேபோல் தேவைப்பட்டால் இளவரசி, சுதாகரனும் ஆவணங்களைப் பார்வையிடலாம். அதே நேரத்தில் 21 நாட்களுக்குள் ஆவணங்களைப் பார்வையிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படியெல்லாம் இழுத்தடிப்போம்னு உங்களுக்கெல்லாம் தெரியாது என்கிறது சசிகலா தரப்பு!
இப்பொழுது இரு வழக்குகளின் உள்குத்துகளையும் பின் என்ன நடக்கும் என்பதை ஊகிப்போம்.
கூடங்குளம் வழக்கில் தமிழ் நாட்டு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பதிலை கேட்டிருக்கின்றனரே தவிர எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். உச்சநீதிமன்றம் தன் பங்கிற்கு அம்மா செய்த வேலையைத்தான் செய்திருக்கிறது போல் தோன்றுகிறது. இந்தப் போராட்டமோ அல்லது இந்த வழக்கோ, அரசின் பிடிவாதமோ இத்துடன் முடிந்துவிடும் என்று தோன்றவில்லை.
இரண்டாவது சொத்துகுவிப்பு வழக்கில் ஆவணங்களை கேட்பது, கொடுப்பது எல்லாம் கண் துடைப்பு வேலைகளே.
இந்த வழக்கில் அம்மா தப்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. மற்றவர்கள் கதை அம்பேல்தான்.