நாளை மகாகவி சுப்பரமணிய பாரதியார் நினைவு நாள். தற்பொழுதெல்லாம் தேசியக்கவியின் பிறந்த நாளையோ, நினைவு நாளையோ கொண்டாடுவது வழக்கொழிந்து போய் விட்டது. அரசாங்கமே அதைப் பற்றி ஒன்றும் பெரியதாய் கண்டுகொள்வதில்லை.
ஆனால் அவருடைய கவிதையமுதை அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டிருக்கும் வாசகர்கள் என்றும் மறப்பதில்லை. அவருடைய கவிதை தொகுப்பு எத்துனை முறை படித்தாலும் புதியதாய் படிப்பது போல் தோன்றும். சில கவிதைகள் நம்முடைய தற்கால மனநிலைக்கேற்ப வெவ்வேறு பொருள் தரும். படிக்கும்பொழுது நாம் தவறவிட்டவை தன் அழகு முகத்தை பளீரென்று காட்டும். இவ்வாறு வார்த்தைகளில் ஜாலம் புரிந்து, மரபை தகர்த்து இன்று சமகால புலவர்கள் கையாள ஏதுவாக புதுக்கவிதையின் அறிமுகத்தை முழு வீச்சில் தந்தவர்.
சமீபத்தில் அவருடைய ஆத்திச்சூடியை படிக்கும் பொழுது அதன் கடவுள் வாழ்த்தை கவனித்தேன். ஆஹா மதநல்லிணக்கத்திற்கு சரியான பாட்டு. ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்தப் பாட்டை கடவுள் வாழ்த்தாக வைக்கலாம்.
முன்டாசுக்கவியின் நினைவு நாளில் அவருடைய கடவுள் வாழ்த்து பாட்டை நினைவு கொள்வோம்.
பரம்பொருள் வாழ்த்து
ஆத்திசூடி யின்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசை கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை யெனப் பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒலியுறு மறிவோம்;
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.

15 comments:
மாக கவியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .
மாகாகவியை நினைவு கூறும்
சிறப்புப்பதிவு மனம் தொட்டது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வழ்த்துக்கள்
tha.ma 2
மகாகவி பாரதி இன்ன்றும் நும்முள் உயிரோடு இருக்கிறார்... பகிர்வுக்கு நன்றி சார்
“தற்பொழுதெல்லாம் தேசியக்கவியின் பிறந்த நாளையோ, நினைவு நாளையோ கொண்டாடுவது வழக்கொழிந்து போய் விட்டது. அரசாங்கமே அதைப் பற்றி ஒன்றும் பெரியதாய் கண்டுகொள்வதில்லை.”
என்ன சொல்வது, இந்த அரசாங்கத்திற்கு இப்பொழுதெல்லாம் வேறு வேலைகள் நிறைய வந்துவிட்டது.
எனவே நம்மைப் போன்ற பதிவர்கள் தான் இனி இந்த வேலையைப் பார்க்க வேண்டும்
நண்பரே, நாங்கள் படித்த காலத்தில், பாரதியை ஒரு தெய்வக் கவிஞராக தமிழ் வாத்தியார்கள் கதை அளந்து வந்தனர். அதை நாங்கள் கண்மூடி நம்பி வந்தோம். ஆனால் இந்தக் கால இளைஞர்களுக்கு இந்த டுபாக்கூரைப் பற்றி ஓரளவு தெரியும். கதை அளக்கும் தமிழ் வாத்தியார்களை செருப்பைக் கழற்றி அடிப்பார்கள்.
பாரதியை விட, மிகப் பெரிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை வெளிச்சத்துக்கு வராமல் மறைத்து விட்டார்கள்.
பாரதி எழுதுவது ஒரு கவிதையே அல்ல; 16 வயசு முட்டாள் இளைஞர்கள் எழுதுவது போன்ற உணர்ச்சிக் கொப்பளிப்புகளே. பாரதி கவிதையில் இலக்கியமும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது.
உலக இலக்கியங்களைப் படிப்பவர்கள் பாரதியை சிறந்த கவி என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்தான், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பவர்கள்தான் பாரதியை சிறந்த கவிஞர் என்று புலம்பிக் கொண்டு அலைகிறார்கள்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
\\கதை அளக்கும் தமிழ் வாத்தியார்களை செருப்பைக் கழற்றி அடிப்பார்கள். //
ஆஹா விளங்கிடும். ஆசிரியர்களுக்கு இந்த மரியாதை கொடுக்கும் நபரிடமிருந்து வேறென்ன எதிர்பார்ப்பது?
சிறப்பான பகிர்வுக்கு நன்றி...
பாரதியை போற்றும் சிறப்பான பதிவு! இந்த பதிவில் வாலிபாள் இப்படி ஒரு பின்னூட்டம் அளித்தது வேதனை! பாரதியை பிடிக்காமல் போகலாம்! அவர் கவிஞரே அல்ல என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது!
இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
தனபாலன் வருகைக்கு நன்றி.
சுரேஷ் வருகைக்கு நன்றி.
பாரதியின் நினைவு நாளில்
அவரின் அழகிய கவிதையைப் படைத்தமைக்கு
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
(பாரதியை ஒழுங்காகப் படிக்காத “வாலிபாள்” தமிழர் பண்பாட்டையும் ஒழுங்காக கற்றவராக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்)
அருணா வருகைக்கு நன்றி. வாலிபால் கருத்தை புறம் தள்ளுவோம்.
மகாகவி பாரதியின் நினைவுப் பதிவு அருமை.
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
த.ம 4
முரளிதரன் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.