Pages

Tuesday, 4 September 2012

கலக்கல் காக்டெயில்-84

கல்யாண ராணி, திருமண மோகினி, நான் அவளில்லை

பெங்களூரில் பிடிபட்டு இப்பொழுது விசாரணையில் இருக்கும் ஷனாஸ் என்கிற சஹானா ஒரு ஐம்பது பேருக்கு அல்வா கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் நான்கு பேரைத்தான் திருமணம் செய்துகொண்டுள்ளாராம். சொல்லிவைத்தார் போல் எல்லோரிடமும் ஆட்டையைப் போட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் போலிஸ் வலயத்தினுள் பூந்து விளையாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்பொழுது சஹானா. ஜகஜாலக் கில்லாடிதான். இவங்க கொடுத்த அல்வாதான் "இருட்டுக்கடை" அல்வாவோ.

முதலில் அரசு வழக்கறிஞர், அடுத்தது நீதிபதி, பின்னர்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யா விலகினார், அடுத்தது நீதிபதி ஓய்வு பெருவதால் புதிய நீதிபதி நியமனம். அடுத்தது என்ன. நிரபராதி தீர்ப்புதான். நல்லாத்தான் வைக்கிறாய்ங்க நமக்கு பூ.

எல்லா ஊழல் வழக்குகளும் ஒரே பாதையில்தான் செல்லுது. இந்த வழக்குகளில் யாருக்கு லாபம் என்பது மக்களுக்கு நல்லாவே தெரியும். வாழ்க ஜனநாயகம்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புதானாம் ஆர்பாட்டம் இல்லையாம்

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு வெறும் எதிர்ப்போடு விட்டுவிடுவார்களாம், ஆர்பாட்டம் செய்யமாட்டார்களாம் சொல்லுகிறார் தமிழினத்தலைவர். அதுசரி எவ்வளவோ மேட்டர் தலையை தின்றுகொண்டிருக்கிறது தமிழாவது, தமிழினமாவது. முதலில் பேரனை காப்பாத்துங்க.

ரசித்த கவிதை


இவன் கனவில்

அடிக்கடி
ஒயில் பெண்கள்
நிறையதரம்
புதையல்
அபூர்வமாய் 
மழை
ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா
சிலசமயம்
மழை
எப்போதாவது
ராட்சஷன் 
நேற்று
நீலவானம்
முந்தாநாள்
நீ
ஒரே ஒரு தடவை
கடவுள்
----------------விக்ரமாதித்யன்

இந்தவார ஜொள்ளு 


04/09/2012


17 comments:

  1. // முதலில் பேரனை காப்பாத்துங்க//
    ஆமாம் ஆமாம் நட்ச்

    நல்லாவே தெரியும்.... வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  3. இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.. சாதாரணமப்பா

    ReplyDelete
  4. இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா ..

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி தனபாலன், சிங்கம்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சமுத்ரா.

    ReplyDelete
  7. ப்ளடி மேரி போல் இருக்கிறது காக்டெயில்

    ReplyDelete
  8. சொத்து குவிக்கணும், பேரனைப் பார்த்துக்கோணும் .... ஒவ்வொரு தமிழனுக்கும் நிறைய ஜோலி....நடுவே ஏன் இந்த ராஜபக்ஷே .... வேறு வேலை இல்லையா இந்த ஆளுக்கு!

    ReplyDelete
  9. சஹானா சாரல் தூவுதோ? :-))
    இந்த வார ஜொள்ளு அள்ளுது; பெயரையும் போட்டிருக்கலாமோ?

    ReplyDelete
  10. கவிதை சிறப்பு! அரசியல் கார்ப்பு! அருமையான பதிவு!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  11. சேட்டை ஸார் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. சாராதி அப்பப்போ கடைக்கு வந்து போங்க.

    ReplyDelete
  13. எஸ்.ரா வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.