சூப்பர் சிங்கரில் வைல்ட் கார்ட் எனும் டுபாகூர்
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதல் ஐந்து பேரை தேர்வு செய்துவிட்டார்கள். இனிமேல் வேண்டப்பட்டவர், குனிஞ்சு நின்றவர், கும்மியடிச்சவர், தொலைக்காட்சிக்கு தொண்டுசெய்தவர் என்று ஒரு ஆளை உள்ளே கொண்டுவருவார்கள். அதற்கு வைல்ட் கார்ட் ரவுண்டு என்று பெயரிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களை கடைசிவரை கொண்டு வந்து அவரை விட சிறப்பாக செய்பவர்களின் எண்ணத்திலே மண்ணை போடுவார்கள்.
இந்த விதி, எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் உண்டு. ஆனால் இதில் வரும் பிரபலங்கள் நீதிபதியாக வருவது அவர்களின் மதிப்பை குறைக்க செய்கிறது.
பணம் பத்தும் செய்யும்.
தக்காளி இதை தான் எல்லா சேனல்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன, நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கூடங்குளம் போராட்டம்
கூடங்குளம்அணுமின் நிலையத்தின் உலைகளில் எரிபொருளை நிரப்பப் போகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமீ அறிவித்த பொழுதே தீவிர போராட்டத்தின் விதை விதைக்கப்பட்டு விட்டது.
போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெருவாரியான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்கள் அந்த போராட்டகக்குழுவின் தலைவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி போராட்டத்திற்கு வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. மத்தியரசு அமைத்த நிபுணர் குழுவின் விளக்கங்களை இந்த போராட்டக் குழுவின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதில் குறுக்கே பூந்து கும்மியடித்தது மாநில அரசு. உள்ளாட்சி தேர்தலின் பொழுது போராட்டக்காரர்களை உசுப்பிவிட்டு இப்பொழுது பம்முகிறார்கள்.
வினை விதைத்தவர்கள் வினையை அறுத்துதான் ஆகவேண்டும்.
ரசித்த கவிதை
எவர் சில்வர் ஏனம்
ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைப் பெண்களும் வேண்டும் என்று சொல்வர்-கணவர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்.
எவர் சில்வர் என்று கூவி
இல்லாதவரிடம் உலாவித்
தவறாமல் சொக்குபொடி தூவிக்-கேட்பான்
தட்டைக் கொடுத்து பட்டு சேலையைப் பாவி
சரிகைச் சேலையைச் சுரண்டித்
தரவருவான் சிறு கரண்டி
அரசே அத்திருடர்களை அண்டி- நீ
ஐந்தாருநாள் சிறைக்குப் போகத் தண்டி
.....................பாரதிதாசன்
பாரதிதாசன் ரொம்ப அனுபவித்திருப்பார் போல. இப்பொழுது அதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது.
இந்தவார ஜொள்ளு (கள்)
09/09/2012

13 comments:
//இதை தான் எல்லா சேனல்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன, நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//
அண்ணே அப்படி எல்லாம் உண்மையா ஒபினாக சொல்ல கூடாது அண்ணே
வருகைக்கு நன்றி ஹாரி.
பாஸ் இந்த விளம்பரங்கள் ரொம்ப தொல்லை பண்ணுதே உங்க தளத்தில் ..
பிரேம் விளம்பரங்களை தூக்கி விடுகிறேன்..
உங்கள் கருத்து மிக சரி. இதே போல் நீதிபதிகள் பற்றிய எனது இடுகையயும் நேரமிருந்தால் காண அழைக்கிறேன். http://muthuchitharalkal.blogspot.in/2012/09/i.html
http://muthuchitharalkal.blogspot.in/2012/09/ii.html
கும்மாச்சி அண்ணா...
பாரதிதாசன் கவிதை சூப்பர். ரொம்ப ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்பவும் படித்தாலும் சுவையாகத் தான் இருக்கிறது.
நன்றி.
தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.
முத்துகுமரன் வருகைக்கு நன்றி.
அருணா வருகைக்கு நன்றி.
கவிதை பகிர்வுக்கு நன்றி...
தனபாலன், எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
சூப்பர் சிங்கர் மட்டுமல்ல டிவி ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே டூபாக்கூர் தான்! இது பற்றி தனி பதிவே எழுதி உள்ளேன்! நல்ல பதிவு! நன்றி!
இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
சுரேஷ் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.