Thursday, 20 September 2012

கலக்கல் காக்டெயில்-86

பீஸ் பிடுங்கிட்டானுங்க

ஒரு வாரமா பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆணிபிடுங்க நடுக்கடலில் போனதால் பதிவு போடமுடியவில்லை.சரி அங்கே போய் போடலாம் என்றால் WIFI பீஸ் பிடுங்கிட்டானுங்க. மேலும் பதிவுலகம் பக்கம் ஓரிரு நாட்கள் போகமுடியவில்லை என்றால் டாஸ்மாக் மூடிய நாட்களில் நடுக்கம் வருவதுபோல் கைகால்கள் நடுங்குகிறது.

மேலும்  உலக நடப்பு எதுவும் தெரியவில்லை. அரசியல் நிகழ்ச்சிகள் ஒன்றும் தெரியவில்லை. எந்த சாமியார் யாருடன் இருக்கிறார்? ஒன்றும் தெரியாமல் ரொம்ப குஷ்டமப்பா.

இனி கரைக்கு வந்தாகிவிட்டது, மொக்கைகள் தொடர வேண்டியதுதான்.

லா.ச.ரா

லா.ச.ரா வின் எழுத்துக்களைப் பற்றி கேள்விப்பற்றி இருக்கிறேன். அவருடைய சிறுகதை தொகுப்புகளில் ஒன்றான "புற்று" கையில் கிடைத்தது.அவருடைய கதையை ஆழ்ந்து படிக்க வேண்டி இருக்கிறது. இது சத்தியமாக லைட் ரீடிங்கில் வராது.

"பாற்கடல்" கூட்டுக்குடும்பம் பற்றிய கதை. கணவனை பிரிந்திருக்கும் மனைவி கணவனுக்கு எழுதும் கடிதத்தில் மென்மையான உணர்ச்சிகளை நன்றாக "கேப்ச்சர்" செய்திருக்கிறார்.

ரசித்த  கவிதை 

மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே
மாமிசத்தாலும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தும்  சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காதுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகததும்
துருப்பிடிக்ககூடியதுமாகிய
இரும்பை எல்லாம் சேகரித்து
உப்புக்களியில்
குவித்து வைத்திருக்கிறார்கள்.
இருபோக மழையில்
துருவேறிக்கிடக்கிறது
கனவு
காடுகளில் சூரியன்
நந்திக்கடலில்
உருகி வீழ்கிறான்
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசி சொற்களை
அடைகாத்திருக்கிறது.

-------------------------------------------நிலாந்தன்

இந்த வார ஜொள்ளு 



20/09/2012




Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

HOTLINKSIN.com திரட்டி said...

//// ஒரு வாரமா பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆணிபிடுங்க நடுக்கடலில் போனதால் பதிவு போடமுடியவில்லை.சரி அங்கே போய் போடலாம் என்றால் WIFI பீஸ் பிடுங்கிட்டானுங்க. மேலும் பதிவுலகம் பக்கம் ஓரிரு நாட்கள் போகமுடியவில்லை என்றால் டாஸ்மாக் மூடிய நாட்களில் நடுக்கம் வருவதுபோல் கைகால்கள் நடுங்குகிறது. ///

இன்ட்ரஸ்டிங்கான வரிகள்...

கடைசியில படத்தைப் பார்த்ததும் கண்கள் நிலைகுத்திப் போய்விட்டது.

முத்தரசு said...

ஒங்க
லொல்லு
அதாங்க
ஜொள்ளு
ம்ம்
நடத்துங்ங

கும்மாச்சி said...

அண்ணே வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

Prem S said...

ஜொள்ளு ரொம்ப கூர்மைங்கோ

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் பதிவு! உண்மைதான் பதிவு போடா விட்டாலோ படிக்காவிட்டாலோ தூக்கம் பிடிக்க மாட்டேன் என்கிறது! நானும் மூணு நாளா பதிவு படிக்க வரலை!

கும்மாச்சி said...

பிரேம்குமார், சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா...
நிலாந்தன் கவிதைக்கான அர்த்தத்தையும்
போட்டு இருக்கலாம்.
நான் கொஞ்சம் மண்டு... புரியலை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.