Pages

Friday, 7 September 2012

ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்..............



நாங்களும்  பாட்டு எழுதுவோமில்ல...............

கர்ணன்  பட "மரணத்தை என்னிகலங்கிடும் விஜயா" மெட்டில் முடிந்தால் சீர்காழி குரலில் பாடிக்கொள்ள(கொல்ல)வும்.

ஊழலை என்னி புலம்பிடும் மனிதா
ஊழலின் தன்மை சொல்வேன்
நாட்டினில் ஊழலுக்கு அழிவு கிடையாது
என்றென்றும் நிலைத்திருக்கும்
லஞ்சத்தை லஞ்சத்தை கொடுப்பாய்
ஊழலில் அதுவும் ஒன்று
நீ நிறுத்திவிட்டாலும் அந்த ஊழல்
இருந்துதான் தீர்ந்திடும் எந்நாளும்


கமிஷனை அறிவாய் எல்லா திட்டங்களிலும்
கையூட்டையும் அறிந்து கொள்வாய்
சட்டம், நீதி காப்பாற்றாதென்று
நம்பிக்கை  இழந்து விட்டாய்
நம்பிக்கை.....இழந்து விட்டாய்
நீதியிலும் ஊழல் சட்டத்திலும் ஊழல்
அரசு அங்கங்களில் அங்கங்கே ஊழல்
எங்கும்  ஊழல் எதிலும் ஊழல்
எங்கும்...........ஊழல்..................
நாம்  வாட ஆ.................................

ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்
அடுத்த ஆட்சி அவனுக்கே
கிடைக்கும் பெட்டிகளும்,கட்டுகளும், சொத்துகளும்
போகும்  அவனுக்கே
பின்னர் அவனே திட்டம் போடுவான்
அவனே...... ஒட்டும்...... வாங்குவான்
ஊழல்  நல் ஓங்குக
மற்றவர் அதை பார்க்க
நாமெல்லாம் நொந்துபோக 
ஆ...............ஆ.................ஆ..................

(பரித்ராநாய மெட்டில்)
காமன்வெல்த் என்பார், 2............. ஜி........... என்பார்
நிலக்கரி சுரங்க ஊழல்............... என்பார்......................
எல்லா வழக்குகளும் நீர்த்துப்போகம், நீர்த்துப்போகும்..................





22 comments:

  1. பாட்டு வரிகள் சூப்பர்.

    ReplyDelete
  2. ஜே வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. பாட்டோட லிங்கயும் கொடுத்து இருப்பிங்க என்றா என்னை போல அறியாப் பிள்ளைகளுக்கும் யூஸ்புல்லா இருந்து இருக்குமில்ல

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஹாரி.

    பாட்டுக்கு லிங்க் தேவையில்லை, எல்லோரும் அறிந்த பாட்டுதான்.

    ReplyDelete
  5. சப்பா........நமக்கு இந்த பாட்டே தெரியாதே...
    நாம பாட்டு விசயத்துல அவ்வளவு வீக்கா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சிட்டுக்குருவி.

    ReplyDelete
  7. நல்ல வரிகள்... உண்மைகள்...

    ReplyDelete
  8. தனபாலன் வருகைக்கும், த.ம.3ற்கும் நன்றி.

    ReplyDelete
  9. ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்
    அடுத்த ஆட்சி அவனுக்கே
    கிடைக்கும் பெட்டிகளும்,கட்டுகளும், சொத்துகளும்
    போகும் அவனுக்கே
    என்ன செய்வது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில்...

    ReplyDelete
  10. தமிழ் ராஜா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. புலவருக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி எஸ். ரா.

    உங்களது பதிவை படித்தேன், நன்றாக இருந்தது.

    ReplyDelete
  13. ஹ்ம்ம்....இப்படித்தானே இருக்கிறது நாட்டு நடப்பு ....

    ReplyDelete
  14. ஹாஜா மைதீன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. நலல்தொரு கவிதை! இன்றைய நடப்புக்கு தேவையான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
  16. சுரேஷ் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  17. சப்தம் போட்டே பாடிப்பார்த்துவிட்டேன்
    மிக மிக அருமையாக உள்ளதுபாடல் வரிகள்
    இதனை நிச்சயமாக ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர்
    தங்கள் இயக்கப் பாடலாகவே கொள்ளலாம்
    மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ரமணி ஸார் வருகைக்கும், கருத்திற்கும், மேலும் த.ம.7ற்கும் நன்றி.

    ReplyDelete
  19. (உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - மெட்டில்)

    ஊருக்குள் ஊழல் என்றும் ஒழியாதென்கிற
    உண்மையைப் புரிஞ்சுக்கடா-நீயும்
    உருப்படத் தெரிஞ்சுக்கடா!

    :-))

    ReplyDelete
  20. சேட்டை வாங்க குரு வணக்கம், எல்லாம் உங்களிடம் பயின்றதுதான்.

    ReplyDelete
  21. //ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்
    அடுத்த ஆட்சி அவனுக்கே//

    இது நெத்தியடி... பாடல் அருமை பாஸ்..

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி மணிமாறன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.