Wednesday, 12 September 2012

உதயகுமாரும், கேஜ்ரிவாலும், கொடநாட்டு குந்தானியும், கோபாலபுரம் கோமாளியும்

கூடங்குளம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நேற்று போலீசிடம் சரணடைவேன் என்று சொன்ன பிறகு இப்பொழுது கூத்தங்குழியில் பதுங்கியிருப்பாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சரணடைய தயாராகும் பொழுது போராட்டக்காரர்கள் அவரை குண்டுக்கட்டாக கொண்டு சென்றதாக செய்திகள் கூறுகின்றன.  அப்படியென்றால் போராட்டக்காரர்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இதில் குறுக்கே பூந்து கும்மியடிக்க கேஜ்ரிவால் வந்து இறங்கியிருக்கிறார். அவர் உதயகுமார் இருப்பிடத்தில் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது. உதயகுமார் இருக்கும் கூத்தங்குழியில் போராட்டக்காரார்கள் காவல் துறையினர் நெருங்க முடியாதபடி வெடி குண்டுகளை மண்ணில் புதைத்திருப்பதாக ஒரு செய்தி அறிவிக்கிறது.

மெத்தப்படித்த  ஆத்தா, நிர்வாகத்தில் திறமையானவர் என்று சொல்லப்படும் முதலமைச்சர் இதை முதலில் இருந்தே சொதப்பினார் என்பது ஊரறிந்த உண்மை. அப்பொழுது அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பெரியதாக தெரிந்தது. ஆதலால் கூடங்குளத்தில் சென்று "நான் உங்களில் ஒருத்தி" என்று ஒட்டு வேட்டையாடி பின்னர் தனது கோர முகத்தை கட்டவிழ்த்திருக்கிறார்.

அதை  தான் இப்பொழுது கோபாலபுரம் கோமாளி நக்கல் செய்கிறார். அவருக்கு கூடங்குளமோ, தமிழினமோ, பற்றி கவலையில்லை.  அவருக்கு அம்மாவை தாக்க வேண்டும். அதற்கு இது ஒரு காரணம்.  மேலும் அவரது குடும்பத்தினர் எல்லா வழக்குகளிலும் சிக்கி சின்னபினாமாகிக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ், பி.ஜெ.பி. , அ.தி.மு.க, தி.மு.க  என்று எல்லோரும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள். அதில்  வேறுபாடு இல்லை. ஆனால் வெளியே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரி  போல் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில்  பா.ம.க, ம.தி.மு.க  குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கின்றன.  கேப்டன் எங்கே போனார்? என்று தெரியவில்லை. மேலும் இந்த விஷயத்தில் அவருக்கு அனுபவம் பத்தாது. ஆதலால் க்வார்ட்டர் அடித்து குப்புறப்படுப்பதே மேல்.

திருவாளர் பொதுஜனம் என்ன நடக்குமோ? என்று காத்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

18 comments:

கும்மாச்சி said...

//அம்மையாருக்கு முதலிலேயே தெரியும் இன்றைய தமிழ்நாட்டு மின்சார தட்டுப்பாட்டை நீக்க கூடங்குளம்தான் ஆபத்பாந்தவன் என்று.//

அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது பாமர மக்களுக்கே தெரியும். உங்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

விஜய் அவர்களின் கருத்து.

கும்மாச்சி said...

உங்களது கருத்து எர்க்கக்கூடியாதே. சிறுதுளி பெருவெள்ளம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்

Anonymous said...

உதயகுமாரின் நடவடிக்கைகள் பற்றி வரும் செய்திகள் சரியாவே இல்லை.மத்திய அரசு நடவடிக்கை அவர் மீது எடுத்தால் பாஜக பயன்பெறுமோ என்று தயங்குகிறது என்று நினைக்கிறேன்.

கும்மாச்சி said...

இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள்

Manimaran said...

ஆரம்பத்தில் மீடியாகாரர்களால் ஆதரவாகப்பேசப்பட்ட இவர்களது போராட்டம் தற்போது அதே மீடியாவால் வன்முறைக்கூட்டம் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தினமலம்.
தற்போது எந்த இடைதேர்தலும் இல்லாததால் கொடநாட்டு கோமாதாவின் உண்மை முகம் தெளிவாகத் தெரிகிறது....

”தளிர் சுரேஷ்” said...

மொத்தத்தில் இவர்களின் அரசியல் விளையாட்டில் பலிகடா அப்பாவி பொதுஜனங்கள்தான்!

இன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

கும்மாச்சி said...

மணிமாறன், சுரேஷ் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
.....

கும்மாச்சி said...

எஸ்.றா. வருகைக்கு நன்றி.

இருதயம் said...

திரு. உதயகுமாரின் உண்மை முகம் மக்களுக்கு தெயர்யா ஆரம்பித்து விட்டது .

கும்மாச்சி said...

இருதயம் வருகைக்கு நன்றி.

Anonymous said...

அது என்னவோ தெரியவில்லை. அவாள் ஜாதி மனிதர்களும், அரசியல்வாதிகளும், இந்துத்வாவாதிகளும், தமிழ்நாட்டில் குடியேறி வாழும் மலையாளிகளும், தெலுங்கர்களும், வட இந்தியர்களும் கூடங்குளம் பிரச்சனையை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.
இன்று தினமணியில் முதல் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் செய்தியைப் போட்டிருக்கிறார்கள்.
“காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, திக, கம்யூனிஸ்ட் – என அனைத்துக் கட்சினரும் ஒரு திட்டத்தை ஆதரிக்கறாங்களே. அதுனாலத்தான், இது ஆபத்தானதோன்னு சந்தேகப்பட வேண்டியிருக்கு”.
போபர்ஸ் விஷவாயு விஷயத்திலும் இதுவரை நிவாரணம் வந்து சேரவில்லை. குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சரி, இவ்வளவு பேசும் கட்டுரை ஆசிரியரின் வீட்டின் மேல் அணு உலை கட்டலாமா? ஒவ்வொரு வீட்டினரும் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை, தங்கள் வீட்டின் மீது குட்டி அணு உலை அமைத்து தயாரித்துக் கொள்ள வேண்டும் – என அரசு சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?
நாங்கள் உதயகுமாரை பின்பற்றவில்லை. ஆனால் கூடங்குளம் ஆபத்து என சொல்கிறோம்.
இனிமேல் பதிவு எழுதும் போது, மனசாட்சியை தொட்டுப் பார்த்து எழுது தம்பீ. இந்துத்வா வாதி போல மதவாதத்தை திணிக்காதே.. இது மதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். கதிரியக்கம் இந்து முஸ்லீம் கிறிஸ்தவன் என பார்க்காது. ஊனம் என்பது எல்லோருக்கும்தான்.
அப்படியென்றால், கூடங்குளத்தைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சியின் தலைவி கிறிஸ்தவள்தானே?
நானும் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவள்தான்.
சிவகாசியில் நடந்த கோர விபத்தில் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியாத அரசா, கூடங்குள அணு உலையை பாதுகாக்கப் போகிறது?
அணு உலை வந்து விட்டதால் இனி அங்கு வாழ முடியாது என கருதி, எங்கள் குடும்பத்தினரோடு பெங்களூர் வந்து விட்டோம்.

bhuvalaxmi said...

plz publish same comment as my name

indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல்

கும்மாச்சி said...

\\அது என்னவோ தெரியவில்லை. அவாள் ஜாதி மனிதர்களும், அரசியல்வாதிகளும், இந்துத்வாவாதிகளும், தமிழ்நாட்டில் குடியேறி வாழும் மலையாளிகளும், தெலுங்கர்களும், வட இந்தியர்களும் கூடங்குளம் பிரச்சனையை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.//

ஒரு போராட்டம் என்றால் அதற்கு ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். இதில் ஜாதி எங்கே வந்தது?. ஒரு விவாதத்தில் ஜாதி சாயம் பூசாதீர்கள். புவலக்ஷ்மி பதிவை மற்றுமொரு முறை ஜாதி முகமூடியை கழற்றிவிட்டு படித்து பாருங்கள்.

கும்மாச்சி said...

\\indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல்//

வருகைக்கு நன்றி.

MANI said...

ஆளாளுக்கு கருத்து சொல்றாங்க என் கருத்து என்னான்னா!

கூடங்குளம் அணுமின் நிலையம் வேணுமா வேணாமான்னு யாருக்கும் தெளிவா சொல்ல தெரியலை.

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் அதனால் ஆபத்துன்னா இந்தியாவில் இருக்கிற மற்ற அணுமின் நிலையங்களையெல்லாம் மூடச்சொல்லி அல்லவா முதலில் போராட வேண்டும். ஏனெனில் கூடங்குளம் இனிமேல்தான் கதிரியக்கத்தை பரப்ப வேண்டும். ஆனால் ஏற்கனவே உள்ளவை அப்படியல்ல அவற்றின் பாதிப்புகள் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. எ.கா. கல்பாக்கம்

அணுமின் மின்சாரம் வேண்டாம் என்றால் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடச்சொல்லி அல்லவா போராட வேண்டும். அதற்கு நாடு தழுவிய அளவில் போராட்டம் நிகழ வேண்டும்.

சரி அணுமின் நிலையங்கள் இல்லாவிட்டால் இந்தியா வல்லரசு தகுதியை இழந்துவிடும் என்றும் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பது போன்றவை வெறும் யூகம் மற்றும் பய உணர்வினால் சிலருக்கு பயந்து பின்வாங்கி விடக்கூடாது என்றும் அரசாங்கம் நினைக்கிறது.

எனவே இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும்.

போராட்டம் எல்லாம் செய்தாலும் முடிவு என்னவோ அரசாங்கத்தின் கையில் அல்லவா இருக்கிறது. அறிவுள்ளவர்கள் கையில் அரசாங்கம் இருந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

எப்பூடி நம்ம கருத்து.

கும்மாச்சி said...

\\போராட்டம் எல்லாம் செய்தாலும் முடிவு என்னவோ அரசாங்கத்தின் கையில் அல்லவா இருக்கிறது. அறிவுள்ளவர்கள் கையில் அரசாங்கம் இருந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

எப்பூடி நம்ம கருத்து?.//


உங்கள் கருத்து சரியானதே.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.