Pages

Sunday, 23 September 2012

அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம்

சென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ உடனடியாக திமுக விலகிவிடாது என்று அக்கட்சியின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

தலைவர் சொல்லாத பதில்: எவண்டா அவன் இவன அறிவாலயத்தில் விட்டது, கேள்வியே கேட்க தெரியவில்லை?. எவன் முதலீடு பண்ணா எங்களுக்குஎன்ன? எங்க கிட்டே இருப்பதை கேட்காமல் இருந்தால் சரி. ஏற்கனவே அஞ்சாநெஞ்சனும், தளபதியும் கேட்குற கேள்விக்கே எனக்கு பதில் தெரியவில்லை.

கேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?

தலைவர் சொல்லாத பதில்:  அந்த அம்மையார் என்ன அலைக்கற்றை வழக்கில் இருக்கிறார்களா? இல்லை நிலக்கரியில் தான் ஆட்டையைப் போட்டார்களா? அவர்கள் மத்திய அரசிலிருந்து விலகலாம். எங்களது கழகம் அண்ணா வழியிலே தோன்றி, பெரியார் போதித்த பகுத்தறிவு பயின்று வந்தவர்கள். மக்களுடைய நன்மை கருதி நாங்கள் இத்தாலி அம்மையார் வெளியேற்றும் வரையில் கூட்டணியில் இருந்து அத்துனை தமிழனின் மானங்களை சுத்தமாக விற்றுவிட்டு, அம்மையார் அடித்து துரத்தும் வரை அங்கேயே இருப்போம்.

கேள்வி: அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

தலைவர் சொல்லாத பதில்: காலி இடங்களை நிரப்புவது அன்னை சோனியாவின் வேலை, அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வழியில் வந்த நாங்கள் அம்மையார் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுத்தால் வாங்கமலா இருப்போம். .

கேள்வி: உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

தலைவர் சொல்லாத பதில்: இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து பின்னர் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

கேள்வி: இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?
யோவ் யாருயா அது என் படத்தை போட்டது?

தலைவர் சொல்லாத பதில்:  கழகம் என்றுமே ராஜபக்ஷேவை ஆதரித்தது இல்லை. சில பார்ப்பனீயஊடகங்கள்தான் அவரை ஆதரித்தன. ஆனால் அண்ணா வழியில் வந்த நாங்கள் மத்திய அரசு மாறி நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழனை கொத்து கொத்தாக போட்டு தள்ள சிங்கள அரசிற்கு உதவிய பொழுது நான் கண்ணீர் வடித்தேன், பின்னர் காலை எட்டுமணி தொட்டு பதினோரு மணி வரை எனது உடலை வருத்தி உண்ணா விரதமிருந்தேன். மற்றபடி பகுத்தறிவு பாசறையில் பயின்ற நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுகொடுக்க முடியாமல் தொடர்ந்து அரசு பதவி வகித்து இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கிறோம்.

ஆனால் ஒன்று நாங்கள் அவசரப்பட்டு , ஆத்திரப்பட்டு மத்திய அரசிலிருந்து விலகமாட்டோம். (தக்காளி எங்களுக்குத்தான் தெரியும் புலி வாலை பிடித்த கதை)

( பழக்கடை: எவன் அவன் தலைவரிடம் ஏடாகூடமா கேள்வி கேட்கிறது. )

12 comments:

  1. ஹா ஹா ஹா....ஆமா இந்த பதிவுக்கும் அந்த படத்துக்கும் இன்னா தொடர்பு ?ஹீ ஹீ..இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு பதிவு

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஹாஜா........

    ReplyDelete
  3. ஹீ ஹீ..இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு படம்

    ReplyDelete
  4. பிரேம்குமார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. காமெடியாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிற பதிவு

    ReplyDelete
  6. அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, செங்கல்பட்டு, அத்திப்பட்டுன்னு எம்புட்டுப் பட்டுப்பட்டுன்னு பதில் சொல்லியிருக்காரு தலீவரு! அவரை இப்புடியா நக்கல் பண்ணுவாக? :-)

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சேட்டை.

    ReplyDelete
  8. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. பதிவுக்கும் படத்துக்கும் என்னா சம்பந்தம்னு கண்டு பிடிச்சிட்டேன். .கேள்விக்கு கலைஞர் சொல்ற பதில் மாதிரி சம்பந்தமே இல்லாம இருக்குங்கறதை சிம்பாலிக்கா சொல்ல ரீன்களோ எப்பீடி..
    த.ம.6

    ReplyDelete
  10. வெயிட்டான பதிவு
    செம வெயிட்டான படம்..!ஹிஹி!

    ReplyDelete
  11. முரளிதரன், சுரேஸ்குமார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.