Pages

Monday, 3 September 2012

தமிழ் சினிமாவின் எதிர்காலம்-நாளைய இயக்குநர்

கலைஞர் டீ.வி யில் நாளைய இயக்குநர் இந்த வாரம் இறுதிப் போட்டி நடைபெற்றது. இயக்குநர் சிகரம், உலகநாயகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கடைசி கட்டப் போட்டியில் மூன்று குறும்படம் காண்பித்தார்கள். அவற்றில் இரண்டு படங்களை முழுதாக பார்க்க நேர்ந்தது.

என் மனைவி மூன்று படங்களையும் பார்த்து மிகவும் ரசித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாள். அவற்றில் இரண்டை நான் மறு ஒளிபரப்பில் காணமுடிந்தது. நான் பார்த்த இரண்டு படங்களுமே நன்றாக இருந்தது.

அதில் எனக்குப் பிடித்தது "அ" என்ற குறும்படம். ஒரு முடிதிருத்தும் தொழிலாளி தனது மகனை ஆங்கிலப் படிப்பு படிக்க வைக்க பட்டணத்திற்கு அழைத்து வருவதில் கதை தொடங்குகிறது. அந்த சிறுவனின் நடிப்பு அபாரம். அவன் கேட்கும் கேள்விகள் ரசிக்கக்கூடியவை. தந்தை தன் மகனிடம் நீ நல்லா ஆங்கிலம் படித்தால் தான் கடவுள் நமக்கு நிறைய காசு பணம் எல்லாம் தருவார் என்று சொல்லும் பொழுது, சிறுவன் "ஏம்பா கடவுளுக்கு தமிழ் தெரியாதா" சரியான நெத்தியடி.

மற்றொரு  படம் ஒருவரின் வயதான தாயார் கர்ப்பம் ஆகிவிடுவதை பற்றிய கதை. இது மிகவும் உருக்கமாக இருந்தது. "புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்". (காணொளி இணைக்கப் பட்டுள்ளது)

இந்த இயக்குனர்களின் திறமை வியக்க வைக்கிறது. இவர்கள் நாளைய தமிழ் சினிமாவை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

என்ன  தற்கால தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்களிடம் சிக்கி நடப்பதையும், குத்துபாட்டையும், வைத்து ஜல்லியடிப்பவர்களிடமும் வட இந்திய நடிகைகளின் தொடை, தொப்புள் ஜோதியிலும்  ஐக்கியமாகாமல் இருக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.



7 comments:

  1. //கதாநாயகர்களிடம் சிக்கி நடப்பதையும், குத்துபாட்டையும், வைத்து ஜல்லியடிப்பவர்களிடமும் வட இந்திய நடிகைகளின் தொடை, தொப்புள் ஜோதியிலும் ஐக்கியமாகாமல் இருக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்//

    சரியா சொன்னீங்க

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  3. எஸ்.ரா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. பல நல்ல இயக்குனர்களை அடையாளம் காட்டும் நல்லதொரு நிகழ்ச்சி...

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  6. குறை - எப்போதாவதுதான் இவர்கள் [இவர்களைப் போன்றவர்கள்] தோன்றுகிறார்கள் (குமுறல்)

    நிறை - எப்போதாவதாவது இவர்கள் [இவர்களைப் போன்றவர்கள்] தோன்றுகிறார்களே! (ஆறுதல்)

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.