நீலம் புயல் மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. இதில் முக்கியமான ஒன்று உயிரிழப்புகள் எதுவுமில்லாதது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. இந்த முறையும் வானிலை மையம் "தானே" புயலைப்போல துல்லியமாக இந்த இடத்தில்தான் கடக்கப்போகிறது என்பதை தெள்ளத்தெளிவாக கணக்கிட்டுவிட்டது.
அரசாங்கமும், மக்களும் "தானே" புயலில் கற்றுக்கொண்டதை இந்த முறை நடைமுறை படுத்திவிட்டார்கள். பொருட்சேதம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை, இருந்தாலும் பொருட்சேதம் பற்றி அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை. எல்லா மாவட்டங்களும் தயார் நிலையில் இருந்ததை அறிய முடிகிறது. அரசு அதிகாரிகளுக்கு நமது பாராட்டுக்கள்.
இந்த நீலம் புயல் மற்றொரு விஷயத்தையும் நமக்கு உணர்த்தி இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் கூடங்குளம் பற்றிய கருத்து மாறுபடக்கூடும்.
தொடர்ந்து சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தது உண்மை. பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் கடக்க ஆறு மணிநேரம் ஆனதை வாகன ஓட்டிகள் மறக்கமாட்டார்கள். கோயம்பேடு அருகே எரிபோல ஆனதையும் மறக்கமாட்டோம். கோயம்பேடு பேருந்து நிறுத்தம் எதிரில் இருக்கும் சாலை அரை மணிநேர கனமைழையையே தாங்குவதில்லை. இதற்கு எந்த அரசும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமே.
அய்யா, அம்மா, யார் ஆட்சியில் இருந்தாலும் அப்பப்போ இந்த மாதிரி விஷயங்களிளும் சற்று கவனம் செலுத்துங்கள்.

தானே போல் பெரிய பாதிப்பில்லாமல் நீலம் கடந்து போனதில் எல்லோருக்கும் பெரிய நிம்மதி.
ReplyDelete"மாஷா அல்லாஹ்" உண்மை ரஹீம்.
ReplyDeleteநீலம் புயல் கரையைக் கடக்கும்போது 110 KM Speed இருக்கும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் நமது நல்லநேரம் 60 KM speed ஆகா குறைந்துள்ளது மனதுக்கு ஆறுதலாக இருந்தது, தானே புயல் அளவுக்கு பெரிய சேதம் இல்லை என்பதும் மனதுக்கு சந்தோஷமே!
ReplyDeleteநன்றி நண்பரே!
வருகைக்கு நன்றி ஆகாஷ்.
ReplyDeleteநீலத்திற்கு சல்யூட் .
ReplyDeleteபேரிடர் மேலாண்மையைப் பொறுத்தமட்டில், பொறுப்பிலுள்ளவர்களுடன், பொதுமக்களுக்கும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த நீலம் புயல் வலியுறுத்தியிருக்கிறது. கொண்டவைகளில் அதுவும் ஒன்று!
ReplyDeleteஎஸ்.ரா, சேட்டை வருகைக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
ReplyDeletehttp://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்