தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மின்சாரம் போகும்? என்ற நிலைமை மாறி எப்பொழுது மின்சாரம் வருமென்ற நிலைமையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் சரி பண்ணுகிறேன், ஒரு வருடத்தில் சரி செய்கிறேன் என்று உதார் விட்டு ஆட்சி பிடித்த கூட்டம் ஒன்றும் செய்யாமல் கைபிசைந்து நிற்கிறது.
இது இப்படியிருக்க சம்பா சாகுபடிக்கு கர்நாடகாவை எதிர்பார்த்து ஏமாற்றத்தையே பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டின் நிலைமை. யார் சொல்லியும் கேட்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும் கர்நாடகாவை நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களோ சும்மா ஒப்புக்கு பிரதமரிடம் முறையிட்டு சட்டை மாற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
ஆளும் கட்சி போன ஆட்சியை குறை சொல்லி பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர். புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் மக்கள் பத்து மணிக்கு மேல் தினமும் மின்வெட்டு என்பதால் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இது வெறும் முன்னோட்டம்தான். நிலைமை இப்படியே போனால் அங்கங்கே இது போன்ற போராட்டங்கள் தலை தூக்கும். எத்தனை நாட்கள்தான் காவல் துறையை வைத்து கட்டுப்படுத்த முடியும். மேலும் அவர்களுக்கு எதிர் கட்சி ஆட்களை வளைத்துப் பிடிக்கவே நேரம் பற்றவில்லை.
போன ஆட்சியில் அரசியலுக்கு வருவேன், ஆட்சியைப் பிடிப்பேன் என்று ஏதோ மக்களுக்காக பாடுபட போவதாக மேடையில் நடித்த நடிகர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அது சரி அவர்களுக்கு தங்கள் கல்லா நிரப்புவதிலேயே நேரம் சரியாக இருப்பதால் இதற்கெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை இல்லை அல்லது இஷ்டமில்லை.
அம்மா ஆட்சியில் இவர்களெல்லாம் பம்மிக்கொண்டிருப்பார்கள், அதற்கான காரணம் ஒன்றும் நமக்கு தெரியாததில்லை. அம்மாவை விமர்சித்தோ அல்லது அவரது ஆட்சியைக் குறை கூறி பேசினாலோ நில அபகரிப்பு வழக்கு பாயும் எனபது இவர்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆதலால் இப்பொழுது அரசியலுக்கு வருவேன் என்ற பாச்சா எல்லாம் பலிக்காது.
சும்மா ஒரே செய்தியை பார்த்து போரடிக்கிறது. அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்கள், தென்னாட்டு ஒபாமா, நாளைய முதல்வர், என்று ஒவ்வொரு பட ரிலீசுக்கும் முன்பு சீன் போடும் கதாநாயகர்களே வாங்க எல்லோரும் வாலாஜா ரோடு அரசினர் மாளிகை எதிரில் வந்து பிலிம் காட்டுங்க. தொலைக்காட்சிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

சத்தியமா நான் சொல்லித்தான் திறந்துவிட்டாங்க |

14 comments:
ரைட்டு
இங்கு மொத்தமே நான்கு மணி நேரம் தான்... 'மினி'சாரம்...
நாலுமணிநேரம்தானா கொடுமை.
ம்ம்ம்மம்மம்ம்ம்ம் .அது சரி படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?!ஹி ஹி
அது சரி நான் என்றைக்கு பதிவுக்கு சம்பந்தமா படம் போட்டிருக்கிறேன். ஹாஜா வருகைக்கு நன்றி.
இந்த மின்வெட்டு தமிழகத்தின் சமூகப் பொருளாதாரத்துக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அந்த அச்சத்தை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் செய்திகளும் வரத்தொடங்கியிருக்கின்றன. :-(
வேணு சார் எல்லாம் நம் நேரம்.
எல்லோரும் கலைஞர் ஆட்சியில்தான் நடுனிலை, புடலங்காய் என்று புலிப்பாய்ச்சல் பாய்வார்கள். ஜெயா என்றால் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்கள். இது வழக்கமான ஒண்ணுதான்
உண்மை தான் ரஹீம்.
ராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும்...!!
அருணா வருகைக்கு நன்றி.
உண்மையிலேயே இந்த பொண்ணு சொல்லித்தான் தண்ணி தொறந்துவிட்டாங்களா?
இங்க தூத்துக்குடியில் 5 மணி நேரம் மட்டுமே பவர் சப்ளை. மற்ற நேரங்களில் ஜாலி...ஜாலி...!
துரை டேனியல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.