தமிழ்நாட்டின் ஏன் ஏறக்குறைய இந்தியாவின் "ஒருகாலத்து" கனவுக்கன்னி நடித்த "இங்கிலீஷ் விங்கிலீஷ்" இன்று உலகெங்கும் வெளிவந்துள்ளது. அந்தப் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று தங்கமணி சொன்னதால் இன்று படம் பார்க்கப்போனோம்.
படத்தின் கதையை பஸ் டிக்கட்டில் எழுதிவிடலாம். லட்டு வியாபாரம் செய்யும் ஸ்ரீதேவி ஆங்கிலம் படிக்கவில்லை என்ற ஏக்கத்தையும், ஏளனங்களையும் சந்திக்கும் நடுத்தர குடும்பத்தின் மெழுகுவர்த்தி. அக்காவின் மகள் கல்யானத்திற்கு நியூயார்க் சென்று சுய முயற்சியில் நான்கு வாரத்தில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்கிறாள்.
ஸ்ரீதேவியின் அமைதியான நடிப்பில் படம் அழகாக செல்கிறது. படத்தை இயக்கியிருக்கும் கெளரி ஷிண்டே ஒழுங்காக ஷாட் பை ஷாட் எல்லாவற்றையும் எழுதிதான் கேமராவை கையில் எடுத்திருப்பது போல் தெரிகிறது.
படத்தில் நகைச்சுவைக்கு ஆங்கில வகுப்புகள். ஒரு பிரெஞ்சுக்காரர், மெக்சிகன் ஆயா, சீன அழகு நிலையப் பெண், பாகிஸ்தானி டாக்சி ஓட்டுனர், தமிழ் நாட்டு பொறியாளர், ஆப்ரிக்கன் என்று தங்கள் பகுதிக்கு வந்து கலக்குகிறார்கள்.
எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பிரெஞ்சுக்காரராக வரும் நடிகரை, முக பாவங்களில் அள்ளுகிறார்.
சத்தியமாக பார்க்க வேண்டிய படம்.
சரி தலைப்பிற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள் "இங்கிலீஷ் விங்கிலீஷில்" கும்மாச்சி எங்கு வருகிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

8 comments:
//"இங்கிலீஷ் விங்கிலீஷில்" கும்மாச்சி எங்கு வருகிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.//
தோளில் பை, வெள்ளை டி-ஷர்ட், கண்ணாடியுடன் ஸ்ரீதேவியுடன் இருக்கிறாரே (இந்தப் பதிவிலுள்ள ஒரு புகைப்படத்தில்.) அவர்தான் கும்மாச்சியா? :-))
குரு ரொம்ப சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.
பார்த்துடுவோம்...
வருகைக்கு நன்றி தனபாலன்.
கண்டிப்பா படம் பாத்துட்டு சொல்றேன் சார்.
முத்து குமரன் வருகைக்கு நன்றி.
சரி பாத்துருவோம்
முத்தரசு வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.