Saturday, 6 October 2012

சூப்பர் சிங்கர்-----யாழினி

எல்லா தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை தந்து கொண்டிருக்கின்றன. அதில் சில மிகவும் பிரபலமாகின்றன பல மொக்கையாகின்றன. அழுவாச்சி மெகா தொடர்களிலிருந்து மக்களுக்கு உண்மையாகவே சற்று விடுதலைதான். ஆனால் அந்த ரியாலிட்டி ஷோக்களும் சில சமயம் அழுவாச்சி ஆவது வேறு விஷயம். சரி விஷயத்திற்கு வருவோம்.

விஜய் டி.வி நடத்திக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பற்றிதான் சமீபத்திய பேச்சு.வீட்டில் தொலைபேசி பிஸியாக இருந்தால் அம்மணி மற்றுமொரு அம்மனியுடன் யாழினி, பிரகதி, சுகன்யா, அகிலேஷ், கௌதம், ராஜகணபதி, ஆஜித் என்று அலசிக்கொண்டிருப்பார்கள், ஏதோ இவர்கள்தான் ஜுட்ஜுகள் போல.

முதல்  மூன்று இறுதி சுற்று போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார்கள். இப்பொழுது "காட்டான் அட்டை" (Wild Card) என்று ஒரு சுற்று வைத்திருக்கிறார்கள். இது எல்லா சூப்பர் சிங்கரிலும் நடக்கும் ஒரு கூத்து, பம்மாத்து வேலை. இங்குதான் எல்லா வெளி விசைகள்  (External forces) வீடு கட்டி ஆடும். இதற்கு ஏற்கனவே இருக்கும் சில நடுவர்களும் புதியதாக வந்த சில நடுவர்களும் பகடைக்காய்கள். இதில் ஸ்டாண்டிங் ஓவேஷன் என்று டுபாக்கூர் வேலை செய்து மக்களை திசை திருப்புவார்கள். ஆனால் கண்துடைப்பிற்கு மக்கள் ஒட்டு. இதுதான் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

முதல் சுற்றுகளில் நடந்த போட்டிகளிலேயே நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இப்பொழுது அதை மூன்றாக குறைத்து மறுபடியும் வேறு ஒருவரை உள்நுழைக்க செய்யும் வேலை. மேலும் இதை சித்துவேலை காட்டி டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றிக்கொள்ளலாம்.

ஆனால் தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை இதில் நியாயம், நேர்மை எல்லாம் வேலைக்கு ஆவாது.

லாஜிகலாக பார்த்தால் அந்த நான்காவது போட்டியாளர் "யாழினியே" மேலும் இந்த சுற்றிலும் நன்றாகவே பாடி வருகிறாள். காணொளியில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டு ஒரு சிறந்த உதாரணம். நெஞ்சம் உருகும் என்பதில் எந்த வித ஐய்யப்பாடும் இல்லை.

அடுத்த வாரம் தெரிந்துவிடும் அந்த போட்டியாளர் என்று.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விஜய் டிவி இன் செட் அப் வேலை தெரிந்ததே!

சகாதேவன் said...

அன்று நடந்த போட்டியில் 'ஆண்டவனே உன் காலடியில் நான்...' ஒளிவிளக்கு படப் பாடலை ரொம்ப நன்றாக பாடினார் யாழினி. 60 லட்சம் வீடு இன்னார்க்கு என்று முடிவெடித்துவிட்டாரகள். அநேகமாக பிரகதிக்குத்தான் என்று நினைக்கிறேன்.
சகாதேவன்

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்கவில்லை... (மின்சாரம் இருந்தால் தானே...!)

பகிர்வுக்கு நன்றி...

கும்மாச்சி said...

முரளிதரன், சகாதேவன், தனபாலன் வருகைக்கு நன்றி.

sarathy said...

மன்னிப்போம், மறப்போம், ஐயா! நாம் தமிழர்கள் அல்லவா!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.