Pages

Thursday, 1 November 2012

கலக்கல் காக்டெயில் 91

எல்லாம் "அவன்" செயல்

கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையில் அம்மாவின் பேச்சுதான் ஹைலைட். எல்லாவற்றிற்கும் காரணம் மைனாரிட்டி தி.மு.க அரசுதான். மின்வெட்டா நாங்கள் என்ன செய்வோம். மைனாரிட்டி தி.மு.க அரசுதான் காரணம். மின் வழித்தடங்கள் சரி செய்யவில்லை. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடவில்லை, என்று அம்மா கூவ, அடிமைகள் பெஞ்ச் தட்டி ஆராவாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மா சொல்வதில் ஓரளவிற்கு உண்மை உண்டு. கடந்த 2001-2011 பத்து ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்களுமே தொலை நோக்கு பார்வையுடம் செயல்படவில்லை என்பதே உண்மை. பெருகிவரும் மின்சாரத்தேவைக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்காமல், வெறும் நானூற்றி சொச்ச மெகாவாட்டுகள் உற்பத்தி செய்யவே மின் நிலையங்களை அமைத்தார்கள்.

ஆத்தா வந்தவுடன், ஆறுமாதத்தில் சரி செய்துவிடுவேன் என்று வாய் பேசிவிட்டு, இப்பொழுது யார் மீது பழி போடலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல, அவர்களுக்கு உண்மை தெரியும், மொத்தத்தில் தமிழ்நாட்டை சீரழித்ததில் இரண்டு கழகங்களுக்கும் சமபங்கு உண்டு.

"நீலம்" செய்தது என்ன?

கடந்த சில நாட்களாகவே இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று அந்தமானிலிருந்து கிளம்பி மகாபலிபுரம் வழியாக ஆந்திரா சென்றது "நீலம்".  பேரழிவு ஒன்றும் நிகழவில்லை என்பதில் நமக்கு மகிழ்ச்சி. முக்கியமாக கல்பாக்கம் அனுமின்னிலையத்தில் முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்பட்டதால் எந்த வித அசம்பாவிதமும் நிகழவில்லை.

இத்தகைய மினிமம் கேரண்டீயை இடிந்த கரையிலும் எதிர்பார்க்கிறார்கள்.  அதை விளக்குவதற்கு மத்திய மாநில அரசுகளின் கௌரவம் தடுக்கிறது.

சரத்குமார் உதயகுமாரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்திருக்கிறார். ஒரு வேளை அவர் விளக்கமளிப்பாரோ.

ரசித்த கவிதை(கள்)

ஐய்யாவோ அம்மாவோ ஆட்சிக்கு வரட்டும்
திண்ணைக் கனவில் திடம் பெறுவோம்-வெண்திரைதான்
தீர்த்து வைக்கும் எல்லா பிரச்சினைகளையும் நல்ல
தியேட்டர்உன் ஊரில் திற.

வம்புகள் செய்கின்ற வாழ்வைப் பெறுவதற்கு
பம்பாய்க்கு  செல்வோம், வருவாயா?-நண்பா
உயிரைக் கொடுக்கக் கவலைப்பட் டாயேல்
ம.........ப் பிடுங்கிடப் போ!


ஜொள்ளு 

 



01/11/2012

5 comments:

  1. கலக்கல்... நல்ல வரிகள்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
  2. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. //ஐய்யாவோ அம்மாவோ ஆட்சிக்கு வரட்டும்// நாமும் ரசித்தோம்...

    ReplyDelete
  5. உண்மைதான் கழகங்கள் இரண்டும் தமிழகத்தை இருட்டில் தள்ளி விட்டது!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.