Monday, 19 November 2012

படிதாண்டா பத்தினியும், முற்றும் துறந்த முனிவரும்



கடந்த சில வாரங்களாகவே கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா டீவியும் ஆர்த்திராவ் பேட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆர்த்திராவ் சில ஆவணங்களை வைத்துக்கொண்டு அவ்வப்போது நித்தியின் மேல் குற்றசாற்றுகளை அடுக்கிக்கொண்டு போகிறார். இதை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு ஆர்த்திராவின் மேல் பச்சாதாபம் வர வாய்ப்பே இல்லை, மாறாக இவரது குற்றசாட்டுகளில் உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது. நித்தி ஒன்றும் யோக்கியர் அல்லதான்.

பிட்ஸ் பிலானியில் பொறியாளர் படிப்பை முடித்துவிட்டு பின்னர் அமெரிக்காவில் மேல் படிப்பை தொடர்ந்து அங்கேயே சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். தான் விரும்பியவரையே திருமணமும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திகொண்டிருந்தவர் விடுமுறைக்கு நாடு திரும்பிய பொழுது நித்தியை சந்தித்து பின்னர் ஆசிரமத்திலேயே ஐக்கியமாகி அவருக்கு பணிவிடைகள்?(மிகவும் அந்தரங்கமாக) செய்திருக்கிறார். அப்பொழுது அங்கே சேருமுன் அவர் கருவுற்று இருந்ததால் கடவுளை அடைய குழந்தை ஒரு தடையாய் இருக்குமென்று நித்தி சொன்னதால் கருவைக் கலைத்து கணவரிடம் பொய்யும் சொல்லியிருக்கிறார். பின்னர் நித்தியுடன் குஜாலாக (அறுபத்தைந்து முறையாம் எப்படி கணக்கு வைத்தார்களோ தெரிய வில்லை, சுவற்றில் கோடு போட்டிருப்பார்களோ?) இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருக்கு நித்தியின் குணம் தெரியவில்லையாம்.

பின்னர் ரஞ்சிதாவுடன் இருந்ததை படம் பிடித்தவுடந்தான் அவர் தன்னை ஏமாற்றியது தெரிந்ததாம். சக்களத்தி வந்துவிட்டதை பொறுக்காமல்தான் இப்பொழுது சேனல் சேனலாக புலம்பிக்கொண்டிருக்கிறார். அவர் கணவரிடம் சொல்லும்பொழுது ஏன் முதல் முறை குஜாலாக இருக்கும்பொழுது உனக்கு தெரியவில்லையா? என்றாராம். அதே கேள்விதான்  இந்த பேட்டியை காண்பவருக்கும் தோன்றுகிறது.

படித்தவர்கள், சிந்திக்க தெரிந்தவர்கள் இதுபோன்ற செயல்களை  செய்வார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். படித்து நல்ல வேலையில் இருந்துகொண்டு நல்ல கணவரையும் அடைந்து நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கை சின்னாபின்னமாகிவிட காரணமாக இருந்தது நித்தி மட்டுமல்ல ஆர்த்திராவும் கூடத்தான்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரையில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். என்று ஒரு படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன் சொல்லுவது போல் “one can be a cheat but not a fool”  ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.

அது ஆர்த்திராவுக்கும் பொருந்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

அருணா செல்வம் said...

இங்கே ஏமாற்றுவதோ.. ஏமாறுவதோ யாரும் இல்லைங்கண்ணா....
திமிர் பிடித்து இப்படி
தீயவழியில் போய் விட்டு பின்பு யார் மீதாவது
பழியைப் போடவது....யாருடைய குற்றம்?

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று - குறள் 208

முத்தரசு said...

//(அறுபத்தைந்து முறையாம் எப்படி கணக்கு//

பார்ரா....

JR Benedict II said...

//சுவற்றில் கோடு போட்டிருப்பார்களோ?//

ha ha super thala

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் பணம் செய்யும் மாயை...

tm2

semmalai akash said...

எல்லாம் பணத்துக்காக இருக்கும். இல்லை என்றால் இப்படி ஏமாற மாட்டார்கள். பணம் என்றால் பிணமும் வாயை திறக்குமாம், பெண் சும்மா இருப்பாளா என்ன???

மலரின் நினைவுகள் said...

பயபுள்ள நித்தி கிட்ட என்னதான் இருக்கோ?! சும்மா நறுக் நறுக்ன்னு வளைச்சுப் போடுறான்!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.