"யோவ் முருகதாசு ஏன்டா துப்பாக்கி வெடிக்கல?"
என்று மாமா இருநூறு டெசிபலில் கேட்டது எங்களுக்கு எல்லாம் ஆச்சர்யம். மேலும் அங்கு கூடிய கூட்டம் மாமாவை ஏதோ நாய் கவ்வி போட்ட மேட்டர் போல நோக்கியது.
அண்ணா டாகுடர் பற்றி மேட்டர்னு உள்ளே வந்தவங்க எல்லாம் அப்படியே அபீட் ஆகி அடுத்த ப்லாகுக்கு போயிடுங்கணா.
இந்த மேட்டர் துப்பாக்கி ஏன் வெடிக்கவில்லை? என்று எங்கள் மாமா காண்டு ஆகி முருகடாசிடம் மல்லுக்கு நின்றது பற்றியது.
இந்த வருட தீபாவளிக்கும் நைனா வழக்கம்போல் பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கி ஏய் நீங்க எட்டு பேரும் சண்டை போடாம பங்கு போட்டுக்குங்க என்று கடா மார்க் கடை நோக்கி நகர்ந்து விட்டார்.
அவர் வாங்கியதில் பெரும்பாலும் கேப்புகளும், பாம்பு மாத்திரையும் ஊசி வெடிகளும்தான். தக்காளி இதில் என்ன பெரிய பங்கு. நாங்கள் வழக்கம் போல் தங்கைகளுக்கு போக்கு காட்டி எல்லாவற்றையும் அமுக்கிவிட்டோம். இதில் கேப்பு மட்டும் நாலு டஜன். இதை வருடா வருடம் கதவிடுக்கில் வைத்து வெடித்ததில் மஜா இல்லாது கதவின் கீல் உடைந்ததுதான் மிச்சம். ஆதலால் ஒரு துப்பாக்கி வாங்கிவிடுவது என்று ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று எல்லோரும் ஒரு மனதாக முடிவு செய்தோம்.
ஆனால் காசிற்கு எங்கேபோவது? அப்பொழுதுதான் ஓசி கறிசோறு உள்ளே இறக்க வந்த மாமா கண்ணில் பட்டார். அவர் அப்பொழுதுதான் சைக்கிள் கடையில் பதுக்கிய அரை பாட்டில் ப்ராந்தியை திறந்து மூடியை முகர்ந்து முழுசாக உள்ளிறக்கிய நேரம், எங்கள் கோரிக்கையை ஏற்று முருகதாசு "பிள்ளைங்களுக்கு ஒரு டுப்பாக்கி குது" என்று முன்மொழிந்தார்.
அவனோ "அட போ சார் நீ நிலையா இருக்க சொல்ல காசு கொடுக்கமாட்டே, இப்பவேற மப்புல கீற நவுரு" என்றான்.
இருந்தாலும் மல்லு கட்டி எப்படியோ ஒரு துப்பாக்கிய எங்கள் கையில் கொடுத்து "மருமவனுங்களா பேஜார் பண்ணாம வெடிங்க" என்று கொடுத்தார்.
அதைவாங்கி வந்து வீட்டில் உள்ள நாலு டஜன் கேப்பில் ஒரு இரண்டு டப்பாக்கள் வெடித்தோம். அது வரை பிரச்சினை இல்லை.
மாமா புல் மப்பில் வந்து "மருமவன்களா இன்னாடா சுடுறீங்க" என்று எங்கள் கையிலிருந்து பிடுங்கி ஒரு இரண்டு கேப் வெடிக்க சொல்ல அதில் உள்ள ஸ்ப்ரிங் தெறித்து காவாயில் விழுந்தது. அப்பால அது வெடிக்கவே இல்லை.
மாமா காண்டு ஆயிட்டார்.
மவன முருகதாசு என்று கடை நோக்கி ஆடிகிட்டே போயிதான் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

12 comments:
அது சரி
காஜலின் முதல் படம் ரொம்ப கலக்குலுங்கோ
கலக்கல்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அண்ணா வருகைக்கு நான்றிங்னா.
பத்து ரூவாயிக்குப் பட்டாசா....?
ம்ம்ம்... ரொம்ப அதிகம் தான்!!
மாமா... தோட்டா இல்லாமலேயே சுடுபவர்ன்னு நினைக்கிறேன்.
உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.
:) :)
ஹா ஹா ஹா
Ulkuthu pola irukku.samy
anna nalla yemaathi puteengna.
பத்து ரூபாய்க்கு கேப் வெடி கூட இப்ப கிடைக்கலே! நல்ல தமாசு!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
நினச்சேன்.இப்படி ஏதாவது புஸ்வானம் ஆகிப் போகும்னு
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.