Thursday, 20 December 2012

கலக்கல் காக்டெயில் -96

நாளை அழியப்போகுதா? கூலிய கொடுயா..............

ஏதோ மாயன் நாட்காட்டியாம், அதுல சொல்லியிருக்காங்களாம் நாளைக்கு அதாவது 21-12-2012 மதியம் 3:24 க்கு உலகம் அழிந்துவிடுமாம். எங்கே போனாலும் இதை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கம்பெனியில் இருக்கும் சக நண்பனும் இதையே சொல்லிக்கொண்டிருந்தான், அவன் மிகவும் விசனத்தில் இருந்தான்.

ஏன்டா மச்சி கவலைப் படுறே? அழிஞ்சிடுச்சினா யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. என்றால்,

இல்லைடா மாமு இத்துணை நாள் வேலை செஞ்சதற்குஇன்னும் கூலிய கொடுக்கலை தக்காளி மொதலாளி எல்லாத்தையும் ...த்துடுவானே அத நெனைச்சா ஒரே காண்டா இருக்கு என்கிறான்.

அடப் போங்கடா ......................

மோடிக்கு  கப்பு, ஆயாவுக்கு ஆப்பு

குஜராத் தேர்தலில் மறுபடியும் நாலாவது முறையாக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காங்கிரஸ் தோற்ற ஏமாற்றத்தில் போன முறையைவிட இந்த முறை பி.ஜே.பி. இரண்டு இடங்களை கம்மியாக பெற்றுள்ளது, ஆதலால் இது மோடிக்கு தோல்வியே என்று அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயா இனி தனது மகனை நம்பாமல், காங்கிரஸ் மானம் கப்பல் ஏறாமல் இருக்க உண்மையான தலைவரை தேர்ந்தெடுப்பது நல்லது.

ஓடும் பேருந்தில் கற்பழிப்பு

தலை நகரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதை வைத்து பாராளுமன்றத்தில் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் இப்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். கயவர்கள் கம்பியால் அடித்ததால் அவளது குடலில் பெரும் பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. அவள் பிழைத்தாலும் அவளால் இனி வாயால் உணவு உண்ண முடியாது.

இதையும் வைத்து அரசியல் செய்யும் நமது தேசிய அரசியல்வாதிகளை என்ன செய்வது?.

ரசித்த கவிதை

அடிமுட்டாள்
அயோக்கியன்
அதிபுத்திசாலி
ஒரு ஞானி
அனைவரும்
குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரிதான்
வட்ட வட்டமாக வந்தது.

---------------------தென்றல் 





ஜொள்ளு

20/12/2012

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Prem S said...

காக்டைலில் ஏதோ குறைஞ்ச மாதிரி இருக்கே

அருணா செல்வம் said...

நகைச்சுவை நன்றாக இருந்தது.

பேருந்து பெண்ணின் நிலைமை... கொடுமை!

கடைசி கவிதை சூப்பர் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

பிரேம், அருணா வருகைக்கு நன்றி.

semmalai akash said...

ஹா ஹா ஹா ! செம கலக்கல் பதுவு, ம்ம்ம்ம் உங்களுக்கு லொள்ளு கொஞ்சம் அதிகம்தான் அதான் ஜொள்ளு விடுறீங்க.....:-)))))))))))

கும்மாச்சி said...

ஆகாஷ் வருகைக்கு நன்றி.

NKS.ஹாஜா மைதீன் said...

ok ok

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாஜா.

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

கும்மாச்சி said...

ரெவ்ரி உங்களுக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ்+ பத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.