Pages

Wednesday, 5 December 2012

சமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி

தொலைக்காட்சிகளில் ஜல்லியடிக்கும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் இந்த சமையல் நேரம் என்று ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இது பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. கொரியாவோ கொட்டாம்பட்டியோ எங்கிருந்தாலும் இது போனியாகும் நிகழ்ச்சி.

 எல்லா சீரியல்களிலும் ஒரு நோட்டம் விட்டு, அதில் வர மாமியார், மச்சினி, ஓரகத்தி, அட்டகத்தி, நாத்தனார், கொத்தனார் எல்லோரையும் அடுத்த வீட்டு அம்மனியுடன் காட்டு காட்டு என்று காட்டிவிட்டு, அசரும் நேரத்தில் பெரும்பாலும் ஏதோ ஒரு ஏராள சுற்றளவு, பரப்பளவு  கொண்ட ஆண்டியோ இல்லை, சின்னத்திரை, பெரியதிரை எல்லாவற்றிலும் ஆடி, அலுத்துப்போன நடிகைகளை வைத்து ஏதாவது ஒரு மொக்கை பார்ட்டி போடும் நிகழ்ச்சி. இதனுடைய ஸ்பான்சர்கள் மசாலா, அப்பளம், பருப்பு அல்லது நெய் விற்கும் பார்ட்டிகள் என்பது எழுதப்படாட விதி ( லாஜிக் முக்கியம்).

இதில்  சமையல் செய்யும் பொழுது, இரண்டு பார்ட்டிகளும் பேசிப்பேசியே எல்லா பண்டங்களையும் வதக்கி, வாட்டி, வேகவைத்து வடித்து விடுவார்கள். நம்ம அல்லக்கை ஹீரோக்கள் படங்களில் வரும் பஞ்ச் டயலாக் போல இதில் டிப்ஸ்களும்  உண்டு. 

சமீபத்தில் "குயா" டிவியின் "ஸ்டாருடன் சமையுங்கள்" நிகழ்ச்சியில்  நம்ம கவுண்டமணி புகழ் சொப்பன சுந்தரியின் டிப்ஸ்கள்.

  1. சோறு  வைக்கும் பொழுதே சற்று அதிகமாக வடித்துவிடுங்கள், மீறும் சோற்றை தனியாக வையுங்கள் அப்பொழுதுதான் நாளை ஷூட்டிங் முடித்து வரும் பொழுது  நமக்கு நல்ல சோறு கிடைக்கும்.
  2.  ரசம்  நிறைய நேரம் கொதிக்கக்கூடது, ஏனென்றால் அதிகமாக கொதித்த ரசமும், குறைவாக கொதித்த சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவுமே இல்லை.
  3. முறுக்கு சுட்டு, தண்ணீரில் போட்டு விடுங்கள், அடுத்த நாள் அதை மிக்ஸ்யில் அரைத்து கூழாக குடிக்கலாம்.
  4. பொறியல் செய்து போனியாகவில்லை என்றால் கவலை வேண்டாம், அடுத்த நாள் வடை சுட்டு , வடைகறியாக செய்துவிடலாம்.
  5. டிபன் செய்து டிபன் பாக்சில் போட்டு வைத்தால் பிள்ளைகளுக்கு பள்ளி நாட்களில்  கொடுக்கலாம்.
  6. இட்லி மீந்துவிட்டால் கவலை வேண்டாம், தேவயானி டிபன் செய்துவிடலாம்.
  7. கோழி வறுக்கையில் மசாலா தீர்ந்துவிட்டதே என்று கவலை வேண்டாம், குருமாவில் போட்டுவிடுங்கள்.
இனி "அஜிலி குஜிலி" பணியாரம் செய்வது எப்படி என்பதை  அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம் அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது  அந்தகால அம்பாசிடர் காரை வைத்திருந்த சொப்பனசுந்தரி.


3 comments:

  1. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அந்த அம்பாசிடர் காரும் சுந்தரியும் எங்கே இருக்கிறார்கள்?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.