அம்மா ஆட்சியில் நிறைய சாதனைகள். ஒரு மணி நேரமா இருந்த மின்வெட்டை இப்பொழுதெல்லாம் இரண்டு மணிமுதல் பதினான்கு வரை அதிகரித்து எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை செய்திருக்காங்க. இதற்கு முன்பெல்லாம் மேற்கு வங்கமும்,பீகாரும்தான் இந்த சாதனையில் முன்னோடியா இருந்தாங்க. இப்போ தமிழகம் அவங்க சாதனையெல்லாம் முறியடித்து முன்னனியில இருக்காங்க. இந்த நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்த பெருமை கிட்டத்தட்ட இருபது வருடமா மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கழகங்களுக்குமே உண்டு.
அடுத்ததுதான் மிகப்பெரிய சாதனை. டாஸ்மாக் வருமானம். இந்த மாதம் திருவள்ளுவர் தினம்,வள்ளலார் தினம், மிலாடி நபி, குடியரசு தினம் என்று நான்கு நாட்களுக்கு டாஸ்மாக்கிற்கு விடுமுறை. ஆதலால் குடிமகன்களுக்கு அந்த நாட்களில் சப்ளை கிடையாது. இதனால் அரசு வருமானம் இந்த நாட்களில் பூச்சியம்தான். ஆதலால் வரும் பொங்கல் விடுமுறை நாட்களுக்கு சரக்கு அதிகமாக விற்க ஐநூறு கோடி என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்களாம்.ஐநூறு கோடியென்ன ஆயிரம் கோடியே வரும்.
சரக்கு விற்பனை தனியார் கையில் இருந்த பொழுது ரூபாய் இரண்டாயிரம் கோடிதான் அரசுக்கு வருமானம். இதை போன முறை அம்மா ஆட்சியில் ஒரு ஆணை போட்டு அரசு எடுத்து நடத்துவதில் இருந்து கிட்டத்தட்ட வருடத்திற்கு ரூபாய் இருபத்தோராயிரம் கோடி வருமானமாம். ஆதலால் பணம் கொழிக்கும் இந்த துறையில் தட்டுப்பாடு வரக்கூடாது என்று நான்கு நாட்களுக்கு சரக்கு கொள்முதல் செய்து அடுக்கிவிட்டார்கள். இனி என்ன சரக்கு வெள்ளமாகி புரண்டு ஓடும். அரசு கஜானா ஆல்வேஸ் ஃபுல்.
பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை கிடைக்கிறதோ இல்லையோ, சரக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்.
நல்ல ஆட்சி.
இன்னும் அரசு வருமானத்தை பெருக்க மோடியிடம் இன்னும் நிறைய ஐடியா கேட்டு வந்திருக்காங்களாம், நல்லா பெருக்குங்க.அப்படியே மின்வெட்டிற்கும் ஒரு வழி பண்ணுங்க. சரக்கடிச்சிட்டு இருட்டுல வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரிய மாட்டேங்குது.

சரக்கு கொடுத்தா போதுமா? சைடு டிஷ் எவன் கொடுப்பானாம்?. |

4 comments:
வருகைக்கு நன்றி.
வேதனையான சாதனை ...
என்னத்த சொல்ல ??????
நம் அரசின் செயலை மிக மிக சரியாக சொன்னிங்க....."உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....."
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
Last word punch, I liked it. Thanks.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.