Pages

Monday, 28 January 2013

கலக்கல் காக்டெயில்-100

கலக்கி காக்டெயில் ஊத்த ஆரம்பித்து எப்படியோ நூறாவது கலக்கலுக்கு வந்தாகிவிட்டது. இதுவரை கலக்கலை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

மதுரை மல்லியும், டக்கீலாவும், மற்றும் நாச்சியார் கோவில் விளக்கும்

மதுரை மல்லிக்கு GI TAG புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது. மல்லிபூ வகையிலே மதுரை மல்லிக்கு உள்ள தனிவாசமும் அதன் இதழ்களின் அடர்த்தியும் வேறு எங்கு விளையும் மல்லி வகைகளுக்கு கிடையாது. ஆதலாலே மதுரை மல்லிக்கு தனி சிறப்பு.

அந்த வகையில் மெக்சிகன் சாராயமான டக்கீலாவிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட இருக்கிறது. அது சரி இதன் சைடு டிஷ் ஸ்பெஷலான இடது உள்ளங்கை உப்பிற்கு வழங்கப்படுமா தெரியவில்லை.

நாச்சியார் கோவில் விளக்குகளும் மேற்படி புவிசார் குறியீடு வகையில் சேர்கின்றது. திருவாரூர் மாவட்ட நாச்சியார் கோவில் குத்து விளக்கு தயாரிப்பில் பெயர் பெற்றது.

சமீபத்திய அம்மா புண்ணியத்து மின்வெட்டால் இந்த தொழில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் கட்டண உயர்வு

ரயில்வே பட்ஜெட் வருவதற்கு முன்பே ரயில் கட்டணத்தை ஏற்றி சராசரி மனிதனின் தலயில் இன்னும் ஒரு டன் சுமையை ஏற்றிவிட்டார்கள். மேற்படி கட்டண உயர்வு ஏ.சி. வகுப்பிற்கு கிடையாதாம். இந்திய அரசாங்கமும், அதை நடத்தும் அரசியல்வாதிகளும் நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் முதுகில் சவாரி செய்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நல்லஅரசுடாஇது!

கடல்

மணிரத்னம் இயக்கும் ஜெயமோகன் கதையில் புது முகங்கள் கெளதம் (கார்த்திகன் மகன்) துளசி நாயர் (ராதாவின் மகள்) நடிக்க ராஜீவ் மேனன் காமெரா கைவண்ணத்தில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் "கடல்" பாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறார். "ஏலேகிச்சான்", "நெஞ்சுக்குள்ளே", "மூங்கில் தோட்டம்", "அடியே", "சித்திரை நிலா" எல்லா பாடல்களுமே சூப்பர்.  "நெஞ்சுக்குள்ளே" பாடலில் சக்தி கோபாலன் குரல் என்னவோ செய்கிறது. சர்ச்சில் வரும் பிரார்த்தனை பாட்டு வித்தியாசமான இசை.

ரொமாண்டிக் த்ரில்லரான "கடல்" பிப்ரவரி ஒன்றாம் தேதி வர இருக்கிறது.

போதை பொருட்கள் 

டைம்ஸ் ஆப் இந்தியா இந்திய பெருநகரங்களில் போதை பொருட்களைப்பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  சென்னையில் போதை பொருட்கள் விநியோகம் கல்லூரி, பள்ளி மாணவர்களை வைத்து விற்பனை செய்கிறார்களாம். போதை பெருச்சாளிகள்  இணையத்தின் மூலமாகவும் கைபேசி மூலமாகவும் மாணவர்களைப் பிடித்து விற்பனை செய்கிறார்கள். போதை தடுப்பு பிரிவு காவலர்களுக்கு  இந்த "ஹைடெக்" விற்பனையை தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படித்ததில்  ரசித்தது 

நஞ்சிருக்கும் தோலிருக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்து பற்பட்டால் மீலாது-விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன்  வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை  தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்து செட்டியாரே.

மேற்படி இரண்டு கவிதைகளும் சிலேடையில் காளமேகப் புலவர் எழுதியது.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனயில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக்கிழுச்சீங்க.

------------------------------------------பட்டுக்கோட்டையார்.

நகைச்சுவை 

மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு. 
 
 கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?
 
 மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?


ஜொள்ளு




28/01/2013


   

9 comments:

  1. 100 மில்லி சுைவயுடன் கலக்கல்

    100 வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உங்க குடும்ப விஷயம் வெளில் போகாம பார்த்துக்குறீங்கதானே?!

    ReplyDelete
  3. //மேற்படி கட்டண உயர்வு ஏ.சி. வகுப்பிற்கு கிடையாதாம்
    //

    பாவம் அதுல mp. minister போல எழைங்கதான் போவாங்க அதான்

    ReplyDelete
  4. ராஜா, முத்தரசு, ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. //மதுரை மல்லிக்கு GI TAG புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது//
    Is it true?

    ReplyDelete
  6. ஆஹா... காளமேகப் புலவரின் இரண்டு வெண்பாக்களும் அருமை.
    எனக்கு அவரின் பாடல் படிக்க மேலும் ஆசை.
    அவரின் புத்தகங்கள் எந்த இடத்தில் கிடைக்கும் என்று
    தெரிந்தால் எப்படியாவது வாங்கி படித்து விடுவேன்.

    உங்களின் 100 வது படைப்பிற்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.
    த.ம. 4

    ReplyDelete
  7. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.