Pages

Monday, 7 January 2013

கலக்கல் காக்டெயில்-98

ஊடகங்கள் 

நாகை மீனவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள், காரணம் யாவரும் அறிந்ததே. தினந்தோறும் சிங்கள படையினரால் சுட்டு கொல்லப்பட்டு சக மீனவர்களை இழந்து செய்வதறியாது அரசாங்கத்திடம் தங்களுக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரோ அம்மா ஓலை அனுப்புவார்கள் என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். ஊடங்கங்கள் இதை ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் இன்று மத்திய அரசு சேவை வரி விதித்ததை எதிர்த்து நடிகர்கள், நடிகைகள் உண்ணாவிரதத்தை ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு நாள் முழுவதும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் டி ஆர்.பி ரேட்டிங்கும் கொழிக்கும் பணமும் செய்கின்ற வேலை.

கற்பழிப்பு சம்பவங்கள்

புது டில்லி கற்பழிப்பு சம்பத்திற்கு பிறகு ஊடங்கங்களில் முதல் பக்கத்தை ஆக்கிரமிப்பவை கற்பழிப்பு சம்பவங்களே.எந்த ஊடகத்தை பார்த்தாலும் கொட்டாம்பட்டியிலோ இல்லை கொல்கத்தாவிலோ ஏதாவது ஒரு சிறுமியையோ அல்லது பெண்ணையோ யாராவது ஒருவர் அல்லது பலர் கற்பழித்த செய்திதான். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடமும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்று ஒரு புள்ளி விவரம் கூறியதை இவர்கள் இப்பொழுதுதான் உணர்ந்தார்களா? என்பது தெரியவில்லை.

அவ்வப்பொழுது பேசப்படும் சம்பவங்கள் எதுவென்றாலும் அதற்கு தலைவாரி பூச்சூட்டுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது.

ரசித்த கவிதை

செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்
தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று
அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன
சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே
பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்
மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்.
.......................................................கவிமதி 

நகைச்சுவை

மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...? கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...



ஜொள்ளு
07/01/2013

8 comments:

  1. ஒட்டு போட மட்டும்தான் மீனவர்கள் வேண்டும் இவர்களுக்கு. எல்லாம் சுயநலவாதிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆட்சிகள் மாறினாலும் மீனவர்கள் காட்சிகள் மாறவில்லை ...என்று மாற்றம் வரும் என காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பதேன்னவோ ஏமாற்றம் தான்

    ReplyDelete
  4. உங்கள் கருத்து சரியே.

    வருகைக்கு நன்றி ராஜா.

    ReplyDelete
  5. ஊடககங்களுக்கு செய்தி மட்டும் தானே தீனி.
    அதை யார் போட்டாலும் சந்தோசமாகப் பெற்றுக்கொள்ளும்.

    பகிர்ந்த கவிதை மிக மிக அருமை கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  6. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.