Tuesday, 8 January 2013

விஸ்வரூபம்-புஸ்வாணமா?

கமல் என்றாலே பிரச்சினைகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்பொழுது விஸ்வரூபம் வெளிவரும் நேரத்தில் படம் வருமா வராதா? என்ற சந்தேகம் அதிகரிக்கும் வகையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமல் தரப்பிற்கும் உள்ள போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இரண்டு வாரம் முன்பு என்.டி.டிவியில் கமலின்பேட்டி வந்தது. அதில் கமல் விஸ்வரூபத்தை டி.டிஹெச் முறையில் வெளியிடப்போவதில் மிகவும் உறுதியாக இருந்தார். படத்தை பதினொன்றாம் தேதி இரவு 9:30 மணிக்கு ஆயிரம் ரூபாய் கட்டி வீட்டிலேயே பார்க்கலாம் என்று விளம்பரங்கள் வேறு தன் சொந்தக்குரலிலேயே செய்திருந்தார். படத்தை மிகுந்த பொருள் செலவில் அதாவது தொண்ணூற்றி ஐந்து கோடி மதிப்பில் தயாரித்திருப்பதாக பேட்டியில் தெரிவித்தார். மேலும் படத்தை டிவியிலும் தியேட்டர்களில் வெளியிடுவதால் நூறு விழுக்காடு லாபம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஆனால் இதற்கு தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவியில் போட்டுவிட்டால் தியேட்டர் கலெக்ஷன் அடிபடும் எனபது அவர்களது ஐயப்பாடு. மேலும் இனி கமல் படங்களை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்று அறிவித்திருந்தனர். இதனால் கமல் போலிஸ் உதவியை நாட வேண்டியதாகிவிட்டது. முதல்வரும் இதில் தலையிடுவதாக தெரியவில்லை.

அனால் தற்போதைய நிலவரப்படி கமல் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் டி.வியில் வெளியிடுவதிலிருந்து பின் வாங்கிவிட்டதாக தெரிகிறது. இதற்கு காரணங்கள் பல விதமாக சொல்லப்படுகின்றன.

டி.வியில் வெளியிடுவதில் எதிர் பார்த்த அளவு வரவேற்பில்லை என்று தெரிகிறது. இதற்க காரணம் தமிழ்நாட்டின் மின்வெட்டும் ஒரு காரணம். மேலும் வடநாட்டில் டிவியில் வெளியிட்டாலும் தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கலில்லாத நிலைமை மாறி அவர்களும் ஜகா வாங்கிவிட்டார்களாம். ஆதலால் கமல் தன் நிலைமையை மாற்ற வேண்டிய கட்டாயம்.

கமல் நல்ல கலைஞர் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அவரது படங்கள் எல்ல  ஏரியாக்களிலும் எதிர் பார்த்த அளவு போவதில்லை. மேலும் சமீபத்திய அவரது படங்கள் உன்னைபோல் ஒருவன், மன்மதன் அம்பு தயாரிப்பாளருக்கு சொம்பு கொடுத்ததுதான் மிச்சம்.

எது எப்படியோ படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைத்து விட்டது.

இனி படம் விஸ்வரூபமா அல்லது புஸ்வாணமா என்பது  சிறிது நாட்களில் தெரிந்துவிடும்.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.