சமீபத்தில் அரசியல் அரங்கில் அரங்கேறும் செயல்கள் யாவையும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே நடப்பது போல் தோன்றுகிறது. இத்துணை நாட்கள் தமிழகம் கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத காவிரி நீர், நடுவர் மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டு விட்டதனால் இனி வரும் காலங்களில் தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற கேள்விக்கு விடையில்லை.
நடுவர் மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டவுடனேயே கர்நாடக அரசு ஷட்டரை மூடிவிட்டதாக செய்திகள் வருகின்றன.
அதற்குள் தமிழகத்தில் இருக்கும் பிரதான கட்சிகளோ தேர்தலை குறிவைத்து அரசு இதழில் வெளிவர "தாங்கள் தான் காரணம்" என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.
நடுவர்மன்ற தீர்ப்பை ஒட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசு இதழில் வெளியிட்டாலும், மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு முப்போகம் விளைவிக்க வழி செய்தால் தான் இதனுடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும்.
அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
நடுவர் மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டவுடனேயே கர்நாடக அரசு ஷட்டரை மூடிவிட்டதாக செய்திகள் வருகின்றன.
அதற்குள் தமிழகத்தில் இருக்கும் பிரதான கட்சிகளோ தேர்தலை குறிவைத்து அரசு இதழில் வெளிவர "தாங்கள் தான் காரணம்" என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.
நடுவர்மன்ற தீர்ப்பை ஒட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்ட
நிலையில் காவிரி பிரச்சனை முடிந்துபோய்விடவில்லை. இனி நடுவர் மன்றத்
தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகள்
நம் முன் இருக்கின்றன.
தமிழகம்- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் விவகாரம் சுமார் 200 ஆண்டுகால
பிரச்சனையாகும். ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் இவை எதுவும் பலனின்றிப்
போல 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் பல வழக்குகளையும்
தன்னகத்தே கொண்டதுதான் காவிரி நதிநீர் விவகாரம்.
தற்போதும் கூட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிட்டப்பதுடன் இந்த
விவகாரம் ஓய்ந்து விடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கும்
கூட கர்நாடகா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
நதிநீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு எடுத்துக்கொண்டாலும் பாரபட்சம் இல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசு இதழில் வெளியிட்டாலும், மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு முப்போகம் விளைவிக்க வழி செய்தால் தான் இதனுடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும்.
அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
4 comments:
Till we nationialize rivers...we can dream Kummaachi...
உண்மை ரெவ்ரி.
அரசிதழில் வெளியிட போராடியதை விட இன்னும் கடுமையான போராட வேண்டிய நிலை வரலாம்..கர்நாடகத்தில் போராட்டங்கள் தீவரமாகியுள்ளது.
good review
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.