விஸ்வரூபம் தடைகளையும் பிரச்சினைகளையும் தாண்டி எதிர்பார்த்ததைவிட அதிக மகிழ்ச்சியையே கமலஹாசனுக்கு அளித்திருக்கிறது. மனிதர் இப்பொழுது மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்.
ஆனால் அதனை தொடர்ந்து இப்பொழுது வித்தயாசமான வழக்குகள் தொடரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதலில், தே.மு.தி.க கட்சித்தலைவர் விஜயகாந்த் இந்தப்படம் ஜெய டி.வி. க்கு தரப்படாததினால் தான் இத்துணை தடைகள் என்று அம்மாவை நேரடியாகவே தாக்கினார். அதனால் அவர் மீது தமிழக முதல்வர் தன் "நற்பெயரு"க்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்று வழக்கு தொடுத்திருக்கிறார்.
அடுத்ததாக என்.டி.டிவி, அம்மா, கமல், கலைஞர், ப.சி. போன்றோரை வைத்து கேலிச்சித்திரங்களை உண்டாக்கி அம்மாவை நக்கல் செய்தது. ஆதலால் அவர்கள் மீதும் தன் "நற்பெயரு"க்கு களங்கம் விளைவித்துவிட்டார்கள் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இன்று கலைஞர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. "பூனைக்குட்டி வெளிவந்து விட்டது" என்ற தலைப்பில் முரசொலியில் அம்மாவை ஏகத்துக்கும் புரட்டிப் போட்டிருந்தார். விக்ரம் படம் வெளிவந்த பொழுது அம்மா எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில் கமலஹாசனை ஒருமையில் திட்டியிருந்ததாக சொல்லி அதன் நகல் தன்னிடம் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஆதலால் அவர் மீதும் தன் "நற்பெயரு"க்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்று வழக்கு.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
இந்த நற்பெயர் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? அது எங்கு கிடைக்கும்? எப்படி வாங்க வேண்டும்?
அந்த "வஸ்து"வை வாங்கிய பிறகு களங்கம் வராமல் எப்படி பாதுகாக்க வேண்டும்?
விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடுங்க, ப்ளீஸ்.

11 comments:
அட போங்கப்பா...
தனபாலண்ணா வணக்குமுங்கனா.....
ஆணிய புடுங்க வேணாமா ????
சமீப காலமா தமிழ் நாட்டில மனது புண்படுதாம்,உணர்வுகள் புண்படுதாம்,கையில புண் படுதாம்,காலில புண்படுதாம்.....அதே கூட்டத்தை சேர்ந்தவிங்க தான் பிற கடவுள் பத்தியும் பிற வேதங்கள் பத்தியும் ..ஒண்டிக்கு ஒண்டி வாறியான்னு பல விவாதங்களை வைச்சாணுவ...அப்போ எல்லாம் மத்த மதத்துக்கு காரன் உணர்வு எல்லா சுருண்டு கிடந்த மாதிரியும் ,இவிங்க மட்டும் தான் மத உணர்வு உள்ளவனுக மாறியும் பேசிட்டு திரின்ஜாணுவ...இப்போ இவிங்க புண்ணியத்துல ..இன்னொரு ஹே ராம்,இன்னொரு ஆளவந்தான் ஆகா வேண்டிய படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிச்சுகிச்சு...
இப்போ இவிங்க கொடுத்த உசுப்புல ஆள்ஆளுக்கு எங்களக்கு போட்டுகாட்டிட்டு தான் படம் போடணும்னு நிக்கிறானுவ...இப்படியே போனாப்ல தமிழ்நாட்டுல இவிங்க அப்ப்ரூவல் வாங்கி தான் ஷூட்டிங் கூட ஸ்டார்ட் பாணனும் போல
விஜய் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
அம்மா ....அன்புக்கு இலக்கணம்..பாசத்தின் உறைவிடம்....குழந்தையின் தொட்டில் தாயின் மடி ...
அன்புக்கு அம்மா ...வெண்மைக்கு நிள்மா ...
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...
இப்படி எல்லாம் அம்மாவை பற்றி புகழ் பாடிய தமிழ் இனம் ...இன்று அதே அம்மா என்ற சொல்லை கேட்டால் ..."கரண்ட் கட்'இல் தவிக்கும் ஏழை நெசவாளி போல அல்லலுறுகிறது....
kummaachchi na enna??????? vilakkam please????
அடுத்ததா விஸ்வரூபம் படம் குறித்து இடுகை போட்ட பதிவர்கள் மேலேயும் வழக்குப் போடப்போவதாகத் தகவல்...கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோணும்! :-)
சேட்டை மெய்யாலுமா? பயமா கீது. எங்க ஊராண்ட ஆட்டோ உடமாட்டாங்க.
இந்த நற்பெயர் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? அது எங்கு கிடைக்கும்? எப்படி வாங்க வேண்டும்?\\LOL
வருகைக்கு நன்றி ஜெயதேவ்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.