Pages

Wednesday, 6 February 2013

கலக்கல் காக்டெயில்- 101

நாக்குக் கடி நாராயணன், வைகை கரை வாத்து.........

நேற்று சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் பொழுது, தே.மு.தி. க தலைவரை ஆளாளுக்கு திட்டி தீர்த்துவிட்டனர். அதில் அ.தி.மு.க உறுப்பினர் விஜய பாஸ்கர் ஒரு கதை சொல்லி விஜயகாந்தை  நாக்குகடி நாராயணன் என்றும், வைகை கரை வாத்து என்று சொல்லி ஏளனம் செய்தார்.

இதை கேட்டு முதலமைச்சர் ரசித்து விழுந்து விழுந்து சிரித்தாராம்.

மக்கள் இவர்களது சொந்த பகையை தீர்த்துக்கொள்ளதான் சட்டசபைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

மெத்தப் படித்ததாக சொல்லிக்கொள்ளும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு இது அழகல்ல.

தமிழகம் விளங்கிடும்.

விநியோகஸ்தர்களின் விஸ்வரூபம்

விஸ்வரூபம் இத்துணை பிரச்சினைகளுக்குப் பின் வெளிவருவதால்,எதிர் பார்ப்பு எகிறியிருக்கிறது. வெறும் அட்வான்சை மற்றும் பெற்றுக்கொண்டு படத்தை விநியோகஸ்தர்களிடம் கமல் கொடுத்துள்ளார். விநியோகஸ்தர்களோ படத்தின் எதிர்பார்ப்பை வைத்து மினிமம் காரண்டி அடிப்படையில் தியேட்டர்கார்களிடம் கொடுத்துள்ளனர்.

கமலஹாசனின் டி.டி.ஹெச் முடிவு இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே திருட்டு வீ.சி.டிக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. கமல் எதிர் பார்த்த அளவு வருமானம் வருமா என்பது சந்தேகமே.

வடநாட்டிலும் எதிர் பார்த்த அளவு கலெக்ஷன் இல்லையாம். இத்துடன் வந்த ரேஸ் -2வே இதற்கு காரணமாம்.

ரசித்த கவிதை 

பொழுதோ விடியுது
பழுதாய் மடியுது
தொழுதா கெடுவது
அழுதா படுவது?

சென்றோர் பழமையிற்
பொன்றும் வழமையை
நன்றாய்ச் சிருடன்
வென்றார் யாரடா!

காலம் கடியது
காலன் கொடியவன்
கோலம் கொண்டதும்
ஞாலம் கண்டதும்

நிலையாய் இருந்திடக்
கலையாய் விரிந்திட
மலையாய்த் தனித்துவம்
சிலையாய் இனித்திட

அரிதாய்க் கவின்செயல்
புரிவார் புவியினிற்
பெரியோர் என்பதற்
குரியோர் மன்பதை!
-------------------------------கவிஞர் கந்தவனம்

ஜொள்ளு



06/02/2013



14 comments:

  1. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  3. காக்டெயில் ஜிவ்வுன்னு இருக்குங்கோ

    ReplyDelete
  4. முத்தரசு வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. இஞ்சி இடுப்பழகியின் பெயரைப் போட்டிருந்தால், கூகிள் உதவியோடு தேடிப் பார்த்திருப்போமே! :-))

    ReplyDelete
  6. ஹாரி, சேட்டை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. "மெத்தப் படித்ததாக சொல்லிக்கொள்ளும்.." You ARE a very funny guy!!!

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி இந்தியன்.

    ReplyDelete
  9. விஜயகாந்தை இவ்வளவு நக்கலடிக்கும் கூட்டம் ஜெயாவின் சினிமா வாழ்க்கையைப்பற்றி சட்டசபையில் பேச அனுமதிப்பார்களா...???


    //மெத்தப் படித்ததாக சொல்லிக்கொள்ளும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு இது அழகல்ல.//

    சரியான அடி..

    ReplyDelete
  10. மணிமாறன் உங்கள் கேள்வி நியாயமானது.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.