Pages

Tuesday, 19 February 2013

கலக்கல் காக்டெயில்-103

ஹெலிகாப்ட்டர் ஊழல்-அகஸ்டா வெஸ்ட்லேண்ட்

காங்கிரஸ் வரலாறு காணாத ஊழல் புகார்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த், 2ஜி அலைக்கற்றை வழக்கு வரிசைகளில் இப்பொழுது புதியதாக ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் ஆறு ஹெலிகப்டர்கள் வாங்க மூவாயிரத்து சொச்சம் கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அகஸ்டாவிற்கு இந்த ஆர்டர் கிடைக்க கிட்டத்தட்ட முன்னூறு கோடி ருபாய் வரை இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு கையூட்டு கொடுத்ததாக குற்றம்சாட்டி அதன் சி.ஈ.வோவை இத்தாலிய அரசாங்கம் கைது செய்திருக்கிறது.

அவர்கள் கொளுத்திப்போட்ட திரி இப்பொழுது டில்லியில் வெடிக்க ஆரம்பித்திருகிறது. எப்பொழுதும் வாய் திறவாத பிரதமர் இதில் மறைக்க ஒன்றுமில்லை, விசாரணைக்கு ரெடி என்கிறார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இந்த சர்ச்சையிலேயே கழியப்போகிறது, உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை.

குஷ்புவும்  கலைஞரும் மற்றும் குமுதமும்

குஷ்பு தி.மு.க வில் இருப்பதனால் குஷ்புவிற்கு ஆதாயமா இல்லை தி.மு.க. விற்கு ஆதாயமா என்ற பட்டிமன்றம் வைத்தால் நிச்சயமாக தி.மு.க விற்குதான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பார். காரணம் குஷ்புவின் ஆங்கில பேச்சுத் திறைமையை போன தேர்தலின் பொழுது நன்றாகவே உபயோகப்படுத்திக் கொண்டனர். அ.தி.மு.கவின் டாக்டர் மைத்ரேயனைவிட குஷ்பு வட இந்திய ஊடகங்களை நன்றாகவே கையாண்டார். கலைஞரும் இதை மனதில் வைத்துதான் குஷ்புவை கூட வைத்துக்கொண்டார்.ஆதலால் குஷ்புவிற்கு அங்கு கிடைத்த மரியாதை எல்லோரையும் பொறாமை படவைத்தது.

அதுதான் இப்பொழுது வினையாகிவிட்டது. குமுதம் ரிப்போர்ட்டர் இதை வில்லங்கமாக்கி குஷ்புவை அடுத்த மணியம்மை என்று அநாகரீகமாக விமர்சித்திருக்கிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்க குமுதம் இதை எழுதி காசு பார்ப்பது, நல்ல!!! பத்திரிகை தர்மம்.

ஐயோ பார்த்து தொலைச்சிட்டேன்

அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்து தொலைச்சிட்டேன் அந்த விஸ்வரூபத்தை, அப்புறம் இனி இதை பற்றி ஒன்றும் எழுதுவதில்லை என்று "பாப்பாத்தி"யம்மன் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறேன்.


ரசித்த கவிதை 

கண்ணாடிக் குவளை

தோழியுடன்
உரையாடிக்கொண்டிருந்தபோது
அருகிலிருந்த
கண்ணாடிக்குவளையைக்
கொண்டுபோய் உரிய இடத்தில்
வைத்துவிட வேண்டும்
என்பதில் இருந்த
கவனத்தைவிட
அது உடைந்த பின்
அள்ளி எடுக்கும்போது
கூடுதலாயிருந்தது.

...............................................சின்னப்பயல் 

சின்னப்பயலின் எளிமையான வரிகளுக்கு நான் அடிமை

ஜொள்ளு

19/02/2013

18 comments:

  1. கும்மாச்சி......கடைசியில் நீங்கள் போட்ட அந்த படம்தான் "கலக்கல் காக்டெயில்" என்பதற்கு முழு அர்த்தம் தந்தது. ரசனைக்கார ஆளையா நீர்......

    ReplyDelete
  2. சுரேஷ் குமார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. காக்டெயில் - நல்ல கலக்கல்...!

    ReplyDelete
  4. தனபாலன் நல்ல கலக்கலை ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  5. அளவு குறைவாக இருந்தாலும் காக்டெயில் சூப்பர் கும்மாச்சி----ரா.செழியன்.

    ReplyDelete
  6. செழியன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. காக்டெயில் சூப்பர் அண்ணா - அந்த சின்னப் பயலின் சிந்தனைக் கவிதை சூப்பர்!!

    ReplyDelete
  8. மணி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. சொல்ல நினைப்பதை வெகு சுவையாகச் சொல்கிறீர்கள்.

    தொடர்க.

    ReplyDelete
  10. பரமசிவம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. கலக்கலான பகிர்வு! குமுதம் சில்லறைத்தனமாகி ரொம்ப நாளாகிறது! விஸ்வரூபம் பற்றிய உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்! நன்றி

    ReplyDelete
  12. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. Nice Cocktail Kummachi...

    Your site does not open for me at work due to the kind of ads featured...

    ReplyDelete
  14. விஸ்வரூபம் பற்றி ஏதாவது சொல்லியே ஆகணும்... இல்லாட்டி உங்களை பதிவர் லிஸ்டிலேயே சேர்த்துக்கொள்ள மாட்டோம்...

    ReplyDelete
  15. இணைய வரலாற்றிலேயே மிகச் சுருக்கமான விஸ்வரூபம் விமர்சனம் எழுதிட்டீங்க! :-)

    ReplyDelete
  16. சேட்டை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  17. பிலாசபி ஏதாவது சொல்லியாகனும் என்று இரண்டு வரி எழுதிவிட்டேனே.

    ReplyDelete
  18. Fine mixed, kalakkal cocktail on different topics. Three pics added beauty to your writing! Keep up the tempo. Wishing you all the best and better 'spirit' for better outcome.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.