Pages

Tuesday, 19 March 2013

செய்திகளும் மைன்ட் வாய்சும்

கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: முடிவெடுக்கப்படவில்லை.

அடுத்தகட்ட தமிழ் ஈழ நாடகம் எப்படி கதை வசனம் எழுதி வெளியிடுவது என்பதைப்பற்றிய முடிவா?

மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, இத்தாலிய தூதருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

அவரு எஸ் ஆகி ஐந்து நாளாகுதாம், அங்கே அவர் பெயருல ஆபிஸ் பையன்தான் இருக்கானாம்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்- கருணாநிதி வலியுறுத்தல். 

அப்போ அலைக்கற்றை ஊழலில் உங்களையும் சேர்ப்போம் பரவாயில்லையா?

கருணாநிதியை திருப்தி படுத்துவோம்-மத்திய அமைச்சர் நாராயணசாமி பேட்டி.

இன்னும் பதினைந்து நாட்களிலா? இது கூடங்குளம் இல்லீங்க? நிருபர் வேறே கேள்வி கேட்குறாங்க, நல்ல கேட்டு பதில் சொல்லுங்க.

மத்திய அரசிலிருந்து விலகுவதாக கலிஞர் அறிவிப்பு.

போனமுறை வாங்கின ராஜினாமா கடிதமெல்லாம் பத்திரமா இருக்கா? அறிவாலயம் வாசலில் உள்ள குப்பைதொட்டியிதேடுங்க உடன் பிறப்புகளே.

 இலங்கைப் பிரச்சினை- சினிமா இயக்குனர்கள் இன்று உண்ணாவிரதம்.

இட்லி கெட்டி சட்டினி சாப்பிட்டாச்சா- மதியம் எஸ்.எ.சி. ஆயிரம் உணவுப் பொட்டலம் ஆர்டர் செய்திருக்காறாம்.

இலங்கை பிரச்சினைக்கு இன்று உண்ணாவிரதமாம்-என்ன பிரச்சினை என்று யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க.

 

 

  

 

2 comments:

  1. //இலங்கைப் பிரச்சினை- சினிமா இயக்குனர்கள் இன்று உண்ணாவிரதம்.
    இட்லி கெட்டி சட்டினி சாப்பிட்டாச்சா- மதியம் எஸ்.எ.சி. ஆயிரம் உணவுப் பொட்டலம் ஆர்டர் செய்திருக்காறாம்//
    உள்ளரசியல் இல்லாமல் ஆதரவு கொடுக்கும் போது வரவேற்க வேண்டும்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.