Pages

Sunday, 31 March 2013

கலக்கல் காக்டெயில்-106

சென்னையில் பலநாள்  

விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது நன்றாகத்தான் இருந்தது. பிப்ரவரி மூன்றாவது வாரம் வந்திறங்கிய பொழுது கோடை ஆரம்பமாகாமல் வெட்பநிலை மிதமாக இருந்தது. மார்ச் இரண்டாவது வாரம் தொடங்கி சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டான். போதாத குறைக்கு ஆற்காட்டாரும், நத்தமாரும் செய்த குளறுபடியில் பீசை பிடுங்கி புழுங்க வைக்கிறார்கள். தண்ணி வேறு கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறது. பேருக்குதான் இரண்டு மணிநேர மின்வெட்டு, நடு இரவில் குளிர்ச்சியாக இருக்கும் நேரத்தில் கனவில் மானை துரத்தி பிடித்து ராஜகுமாரியிடம் ஒப்படைக்க அந்தப்புரம் நெருங்கும் பொழுது வேர்த்து விருவிருக்க முழிக்க வைக்கிறார்கள். ஸ்ஸ்ஸ் அப்பா இதுக்குமேல சென்னையில் தாங்குதுராப்பா, எப்போ பிழைக்கும் ஊருக்கு கிளம்பலாம் என்று எதிர் நோக்க வேண்டியிருக்கிறது.

தனி ஈழம் 

தனி ஈழம் கேட்டு மாணவர் போராட்டங்களும், மற்ற போராட்டங்களும் வலுப் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் போஸ்டர் போராட்டங்களில் ஈடுபட்டு உண்மை காரணத்தை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மீனவர்களை சுட்ட இத்தாலிய கடற்படையினரிடம் மத்திய அரசு காட்டும் தீவிரம் நமது குரலுக்கு செவி சாய்க்காமல் மெத்தனம் காட்டுகிறது. இதிலிருந்து மத்திய அரசு தமிழகத்தை எந்த அளவிற்கு மதிக்கிறது என்று தெரிகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரசின் நிலைமை தமிழகத்தில்  தெரிய வரும்.

தமிழினத்தலைவரும், ஈழத்தாயும் செய்யும் கேடுகெட்ட அரசியல் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை.

ரசித்த கவிதை 

ரசாயண மருந்தா
பல்லிக்கு உணவா
அடித்துக் கொலையா
உயிரோடு மின் தகனமா
இயற்கையாவா
வாழ்க்கை
எப்படி முடியப்போகிறதென்று
தெரியாமலே
பறந்து வருகிறது கொசு

ஆனந்தவிகடன் சொல்வனத்தில்  த. சாந்தி "முடிவு" என்ற தலைப்பில் எழுதிய கவிதை

நகைச்சுவை 

அத மட்டும் 35ன்னு வச்சுருக்காங்களே...தேங்க்ஸ் கடவுளே!



அமெரிக்க டாலரோட மதிப்பு ஒரு டாலருக்கு 55க்கு மேல போயிருச்சு...

பால் விலையும் 40 ரூபா வர வந்துருச்சு...

பெட்ரோல் விலையும் 70 ரூபாவுக்கு மேல போயிருச்சு...

இந்த இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்... பரீட்சையில் பாஸ் மார்க்கை இன்னும் 35ன்னுதானே வச்சுருக்காங்க....!



ஜொள்ளு



31/03/2013

3 comments:

  1. அந்தப்புரம் நெருங்கும் பொழுது வேர்த்து விருவிருக்க முழிக்க வைக்கிறார்கள் ///. Haa haa ha

    அண்ணா கவிதை அருமை ... பல்லி என்று வர வேண்டும்

    ReplyDelete
  2. கவிதை அருமை...

    உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

    கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

    நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

    தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

    மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

    அன்புடன் DD
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  3. அந்தப்புரம் நெருங்கும் பொழுது வேர்த்து விருவிருக்க முழிக்க வைக்கிறார்கள் ///. SEMA

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.