Pages

Thursday, 14 March 2013

பரதேசி பார்க்கலாமா? வேண்டாமா?

பொதுவாகவே பாலாவின் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பாலாவின் முதல் படம் "சேது" விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த படம். பின்பு வந்த நந்தா சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அடுத்து வந்த பிதாமகன் விக்ரமிற்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த படம்.


நான் கடவுள் பாலாவிற்கு தேசிய விருது கிடைத்த படம். நான் மிகவும் ரசித்த பாலாவின் படங்களில் "நான் கடவுளுக்கே" முதலிடம். அவன் இவன் பார்க்கவில்லை. ஆனால் பரதேசி பற்றிய பேச்சு எழுந்த போதே இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், அதுவும் தற்பொழுது விடுமுறையில் இருப்பதால் முதல் நாள் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். காரணம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பே. "ரெட் டீ" என்கிற பால் ஹாரிஸ் டானியல் எழுதிய ஆங்கில நாவல், இதன் தமிழ் மொழிபெயர்ப்பு "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் வந்தது. இரண்டையும் படிக்க வில்லை, படித்தால்  சத்தியமாக படம் பார்க்கும் ஆவலிருக்காது. ஏன் என்றால் நல்ல நாவல்களை படமெடுக்க தமிழில் ஆள் கிடையாது என்பது என் கருத்து. அதற்கு உதாரணம் தி. ஜானகிராமனின் "மோகமுள்".

கிட்டத்தட்ட நாற்பதுகோடி ருபாய் பொருட்செலவில் பாலவே தயாரித்திருக்கும் படம். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வேதிகா. தன்சிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வாவின் அம்மாவாக உமா ரியாஸ்கான்.

படத்திற்கு இசை இந்த முறை இளையராஜாவை விட்டு ஜி.வி.பிரகாஷிடம் கொடுத்திருக்கிறார். மதுபாலகிருஷ்ணனின் "செங்காடே"   மட்டும் கேட்டேன். "பிச்சை பாத்திரம்" அளவிற்கு இல்லை. மிருகம் பாட்டில் சூப்பர் சிங்கரில் இரண்டாவதாக வந்த பிரகதி, பிரசன்னாவுடன் பாடியிருக்கிறார், நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் கேட்கவில்லை.

சரி தலைப்பிற்கு வருவோம். படத்தை பற்றிய வந்த டீசரில் பாலா எல்லா நடிகர்களையும் சாத்து சாத்தென்று சாத்துகிறார். பின்னர் ரியல் மேகிங்  என்று கேப்ஷன் போடுகிறார்கள்.

இதை பார்த்தவுடன் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த மாதிரி ட்ரைலர் வெளியிடுவது, பாலாவும்  மலிவான விளம்பர உத்தியை தேடுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

படம் நாளை வெளிவர இருக்கிறது.



15 comments:

  1. எல்லாம் விளம்பரம் தான்...

    பணத்தை அதிகம் 'அள்ள' - யாரோ ஒருவரின் யோசனை...!

    ReplyDelete
  2. தனபாலன் உங்கள் கருத்து சரி என்றே தோன்றுகிறது, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. or mirugam (v v prasanna and pragathi) padiya padal and senneer thana (gangai amaran and priya himesh) paadiya paadalgal sevikku nalla oru thenaga erukkiradhu.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி மகி

    ReplyDelete
  5. // பாலா எல்லா நடிகர்களையும் சாத்து சாத்தென்று சாத்துகிறார்//
    Hey, He is just teaching the actors the way they have to act.. He is not beating them for the reason of bad acting. You can see every frame in the movie also.

    ReplyDelete
  6. எழிலருவி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. படம் நல்லா இருந்தா பார்த்திருவோம்! இல்ல தவிர்த்திருவோம்! நன்றி!

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. //பாலாவும் மலிவான விளம்பர உத்தியை தேடுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.// சொந்த காசுல எடுத்துருக்கார்ல ....

    ReplyDelete
  10. ஜீவன் சுப்பு வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. நீங்கள் பார்த்துவிட்டு
    உண்மையான விமர்சனம் இடுங்கள்.
    பிறகு நான் பார்க்கலாமா? வேண்டாமா?
    என்று முடிவுக்கு வருகிறேன் கும்மாச்சி அண்ணா...

    (தலைப்பைப் பார்த்ததும்.... பார்த்துவிட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன். ஏமாற்றிவிட்டீர்கள்)

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி அருணா.

    ReplyDelete
  13. ஒரு தடவை பார்ப்பதில் தப்பில்லை கும்மாச்சி...Just for the hardwork...

    ReplyDelete
  14. ரெவ்ரி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. You may be right in saying cheap publicity stunt, but I would say it is far far better than creating a scene saying "Ban" , "I will Leave".....

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.