Sunday, 28 April 2013

ஜா"தீ"

ஜாதி இரண்டொழிய வேறில்லை
யார் சொன்னது?
ஒன்றே ஜாதீ
ஒன்றே குலம்
ஒருவனே தலைவன்
"ஒன்றே" எங்கள் ஜாதீ
"ஒருவனே" எம்  தலைவன்
 விதைத்த விஷங்கள்
காற்றில் கலந்த
பல்லவன் 
கடற்கரை இன்று
கண்ணீர் சிந்துகிறது
கல்லிலேகலைவண்ணம்
பகீரதனோ
அமைதி பிரயத்தனம்
காணாத கடவுள்களுக்கு
ஜாதி சான்று,
ஜாதிக்கலவரங்கள்
வீதியெங்கும்
விதைக்கப்பட்டு
கலவரங்கள்
கட்டவிழ்க்கப்பட்டு
விளைவில் தீ
விண் முட்டுகிறது
கண்டு வாளாவிருக்கும்
அரசாங்கமோ
மே(ல்)தாவிகள்
மேசை தட்ட
முறுவலிக்கிறது.
சாராயமுடன் இணைந்த
சமுதாயம்
விலையில்லா!
அறிவை தொலைத்திருக்க
நாளைய தமிழகம்
நகைப்புடன்
காத்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Friday, 26 April 2013

சிவனும் பார்வதியும் வன்னியர்களே..........

சித்ரா பௌர்ணமி அன்று ஏதோ எல்லோரும் குடும்பத்துடன் நிலா சோறு உண்பார்கள் என்றும் தமிழர் பண்பாடு என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்ம மருத்துவர் ஐயா மகாபலிபுரத்தில கட்சிக்காரங்கள எல்லாம் வைத்து சித்ரா பௌர்ணமியன்று ஒரு பெரிய மாநாடு நடத்தி தமிழர் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். மாநாட்டில் பிரதான தலைப்பு "ஜாதி வெறி". ஜாதிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்த ஜாதி வெறியை தூண்டும் அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து ஸ்ஸ்ஸ் .......ப்பா தாங்கமுடியல.

விழாவின் ஹைலைட்டு காடுவெட்டி குருவின் பேச்சு, சின்ன ஐயா, மருத்துவர் ஐயாவின் பேச்சுகள்தான். அதை வைத்து மூஞ்சி புத்தகத்திலும் ட்விட்டரிலும் நம் தமிழ்கூறும் நல்லுலகம் கலாய்த்துக்கொண்டிருக்கிறது, இல்லை இல்லை கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறது. அதில் சில

சிவனும் பார்வதியும் வன்னியர்களே..........காடுவெட்டி குரு.

சிவனும் பார்வதியும் வன்னியர்களே #ஏதோ மாம்பழத்த வைத்து விளையாடினது தப்பா?

பெண்களெல்லாம் வன்னியர்கள் ஆண்களெல்லாம் ..ன்னியர்களே.

கடுவுள்ன்றது யாரு?! என்ன குலம்!? என்ன கோத்திரம்!? .. #சாருஹாசன் சைட் டிஷ்கள்.

தான் என்ன சாதியென அறிந்துகொள்ள சொடலைமாடசாமி,தைலாபுரம் செல்லப்போவதாக தகவல்.

கடவுளின் சாதியைக் கண்டுபிடித்து விட்டார்கள். அடுத்து மதத்தை கண்டுபிடிக்க வேண்டியதுதான் பாக்கி.

அன்பான அரசியல்வாதிகளே, ஏனைய தெய்வங்களும் தங்கள் ஜாதி தெரிய காத்திருக்கின்றன.

சிவன் பார்வதி எங்கள் சாதி; ஆதாம் ஏவாள் எங்கள் கூட்டம்.

ஒரு நார்த் இண்டியா பிகரு மூக்குத்தியெல்லாம் போட்டுகிட்டு குறுக்க மறுக்க நடக்குது.. நார்த் இன்டியா கடவுள்ஸ்லாம் நம்மசாதிதானே?

நான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி #போன் ஒயர் அந்து ஒரு வாரமாகுது.

பெரியார் உயிரோடு இருந்தால்,கேடி வெட்டி,கில்லாடி குருக்களை தடியை வைத்து நாலு போடு போட்டிருப்பார்.

எனி பகுத்தறிவாளிகள் இன் ட்விட்டர் ப்ளீஸ் ஏதாவது பேசுங்கப்பா.

தமிழ்நாட்டில் கருணாநிதியை விடவும் கேவலமான அரசியல்வாதி ஒருவர் உண்டெனில் அது மருத்துவரய்யா அன்றி வேரொருவருமில்லை!

சமீபமாய் ராமதாஸ் மீது மக்களிடையே எந்தளவுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதென்பதை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கழிவறைச் சுவர்கள் வெளிப்படுத்துகின்றன!

பார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு #முருகன் ஒய் கலப்பு திருமணம்?

பார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு # அதுசரி உங்க கட்சிக்கு இப்படி ஆள் சேர்த்தாதான் உண்டு.

நானறிந்த கட்சிகளிலே பாமக போல கேவலமானது எங்கும் கானோம்!

நேற்று பாமகவின் ஜாதிவெறி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.

நான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும் - அன்புமணி! #அட! போனுல இங்கிளீஸுல பேசுறது, பிஎஸ்என்எல் ஆளுகண்ணே!!

பார்வதியும் சிவனும் வன்னியர் தான்-காடுவெட்டிகுரு. #கடவுளோடு கூட்டணி வைக்கிறேன்னு சொல்றது இதுதானோ?.

நான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி#அமெரிக்காவே அண்ணனை நம்பித்தான் இருக்கு டோய்.

நான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்: அன்புமணி #அண்ணே அதுக்கு அவங்களும் ஃபோனை எடுக்கனும்.

பார்வதியும் சிவனும் வன்னியர் தான்! -காடுவெட்டி குரு! #அய்யாவும் சிவனும் ஒண்ணு! அத அறியாதவங்க வாயில மண்ணு! ஆங்......

ராமதாசின் பேச்சில் நல்லதைத் தேடுவதும் மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்றுதான்.

அல்லாரும் கிண்டலா அடிக்குறீங்க ,இருங்க அவங்க உறுப்பினர் அட்டைய காட்றேன் //சைண்டிஸ்ட் ,பாரெஸ்ட் கட்டர், குரு...


சிவன்=வன்னியர். பார்வதி=வன்னியர். therefore, முருகன் = வன்னியர்! ஆதி வன்னியனே கலப்புத் திருமணம் பண்ணியிருக்கான். உங்களுக்கென்ன கேடு..?

டாடி எனக்கு ஒரு  டவுட்டு காடு வெட்டிங்கிறார்களே அவர் எந்த காட்டை வெட்டினாரு#சொல்லுங்க டாடி சொல்லுங்க டாடி....டிஷும்....டிஷும்



Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 25 April 2013

ஆருஷி கொலை வழக்கு

நொய்டா இரட்டை கொலை வழக்கு ஐந்து வருடம் முன்பு எல்லா ஊடகங்களுக்கும் நன்றாக தீனி போட்ட விஷயம். 2008 ம் வருடம் மே மாதம்  15ம் இரவு தேதி பதினான்கே வயதான ஆருஷி தல்வார் என்ற சிறுமி  தனது படுக்கை அறையில் கழுத்தறுபட்டு கிடந்தது தெரிய வந்தது. இவர் பல் மருத்துவர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார்,  நூபூர் தல்வாரின் ஒரே மகள். டெல்லி பப்ளிக் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதலில் இந்தக் கொலையில் அவர்கள் வீட்டு வேலைக்கார இளைஞன் ஹேமராஜ் என்பவரின் மீது சந்தேகம் விழுந்தது. அப்பொழுது அவன் தலைமறைவாகிவிட்டான் என்று எல்லா ஊடகங்களும் செய்திகள் பரப்பின, ஆனால் அடுத்த நாளே அவனது உடல் அதே வீட்டு மொட்டை மாடியில் கழுத்தறுபட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் உ.பி.மாநில போலீசார் வசமிருந்தது. அவர்கள் டாக்டர் ராஜேஷ் தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று அவரை கைது செய்தனர். ராஜேஷ்  அவருடன் வேலை செய்யும் அனிதா என்பவரிடம் தகாத உறவு வைத்திருந்தார், அது ஆருஷிக்கு தெரியவந்தது. ஆருஷி இதை ஹேமராஜிடம் சொல்ல இருவரும் அவரை கண்டித்ததால் கொன்றுவிட்டார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து ராஜேஷின் மனைவி நூபூர் முறையிட்டு, இது வேணுமென்றே என் கணவர் பெயரை கெடுக்க நடக்கும் சதி இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதன் படி நாற்பது பேர் கொண்ட சி.பி.ஐகுழு அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.அதனுடைய முடிவைத்தான் சி.பி.ஐ அதிகாரி நேற்று முன் தினம் கோர்டில் சமர்ப்பித்தார்.

இந்த கொலை எதிர்பாராமல் நிகழ்ந்தது. சம்பவம் நடந்த மே பதினைந்தாம்  தேதி இரவு ராஜேஷும் அவரது மனைவியும் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். இரவில் ஏதோ சத்தம் வரவே ராஜேஷ்  தனது ரூமில் இருந்த கோல்ப் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு முதலில் வேலைக்காரன் தங்கியிருக்கும் அறையில் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமராஜ் அங்கில்லை. பின்னர் தனது மகளின் அறைக்கு சென்ற பொழுது அங்கே படுக்கையில் தனது மகளும் ஹேமராஜும் தகாத முறையில் இருப்பதைக் கண்டு கையில் உள்ள கோல்ப் ஸ்டிக்கால் அவன் மண்டையில் அடித்திருக்கிறார், இரண்டாவது முறை அடிக்கும் அடிக்கும் பொழுது அவன் தலையை திருப்பியதால் இரண்டாவது அடி ஆருஷியின் தலையில் இறங்கியிருக்கிறது. இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த நூபூர் ஆருஷியையும் ஹேமாராஜையும் செக் செய்து இரண்டு பேரும் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.  இது தான் சி.பி. ஐ கொடுத்திருக்கும் ரிப்போர்ட். பிறகு கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து ஆருஷியின் கழுத்தை அறுத்து அந்த ரூமிலே விட்டு விட்டு ஹேமராஜின் கழுத்தையும் அறுத்து ஒரு பெட்ஷீட்டில் சுருட்டி மொட்டை மாடியில் போட்டுவிட்டு அப்புறம் அப்புறப்படுத்தலாம் என்று வந்த விட்டனர்.

அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் ஆருஷியை ஹேமராஜ் என்ன செய்துவிட்டான் என்று தங்களது ஜோடனை ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.

உ.பி.போலீசுக்கும், சி.பி.ஐக்கும் அன்று இரவு அங்கே கிடந்த விஸ்கி பாட்டிலில் இருந்த ஹேமராஜின் ரத்தக் கரைதான் கிடைத்த முதல் க்ளூ. ஹேமராஜ் தலைமறைவு என்ற ஊடகங்களின் வம்பிற்கு முற்றுபுள்ளி வைக்க கிடைத்த ஆதாரம்.

வழக்கு எப்படியோ போகட்டும். சி.பி. ஐ சொல்லுவதே உண்மையாக இருந்தாலும் பதினான்கு வயது பெண் பெற்றோராலே கொல்லப்படுவது அநியாயம். அந்தப் பெண் அந்த வயதில் வேலைக்கார இளைஞனுடன் உறவு வைத்திருந்தற்கு அவளின் தனிமையே காரணம். பெற்றோரால் கொல்லப்பட்ட அந்தப் பெண் செய்த தவறு என்ன? யார் யார் காரணம்? இதையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது இந்த பொருள் தேடும் வாழ்க்கையில் பெற்றோர்கள் கடமை தவறி நடந்தால் எதையெல்லாம் இழக்க நேரிடும் என்று தெளிவாகவே தெரிகிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 24 April 2013

மின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்

விடுமுறையில் ஆறுவாரம் ஊருக்கு சென்று விட்டு திரும்ப ஆணிபிடுங்க வந்து ஒருவாரம் கூட ஆகவில்லை மறுபடியும் ஐந்து நாட்களுக்கு ஊருக்கு போகவேண்டிய வேலை. ஏற்கனவே விடுமுறையில் சென்று விட்டு வந்து மின்வெட்டைப் பற்றி ஏகத்திற்கு புலம்பியாகிவிட்டது. இனி எனது வலைப்பூவில் இதைப் பற்றிய எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். மேலும் வலைப்பூவிற்கு வருபவர்களும் "அதான் தெரிந்த விஷயமாகிவிட்டதே வேறே ஏதாவது மொக்க போடுயா இல்லை என்றால் நடப்பதே வேறு"  என்று பின்னூட்டத்திலும் தொலைபேசியிலும் மிரட்டியதால் தற்காலிகமாக வேறு மொக்கையை தொடர்ந்தேன். ஆனால் போனவாரம் சென்று திரும்பிய பொழுது நிலைமை வேருவிதமாகிவிட்டது.

ஒருவாரத்திற்குள் சென்னையில் வெயில் ஏகத்திற்கும் எகிறிவிட்டது. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஒரு வழியாக ஒப்பேற்றி ஆகிவிட்டது. அன்று ஊருக்கு திரும்பும் நாள் இரவு ஒரு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பவேண்டும். காலையில் பேங்க் வேலைகளை முடித்துவிடலாம் என்று தி. நகர் பக்கம் கிளம்புமுன் மின்சாரம் போய்விட்டது. சரி இந்த முறை சுழற்சி முறையில் நம்ம ஏரியாவில் வேலை செய்கிறார்கள் போலும் என்று கிளம்பிவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு திரும்புமுன் ஏரியாவில் மற்ற இடங்களில் மின்சாரம் இருக்கவே நம் வீட்டிலோ இல்லை தெருவிலோ பிரச்சினை போலும் என்று அடுத்த வீட்டில் கேட்டால் அவர்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லையே என்றார்கள்.இரவு ஊருக்கு கிளம்புவது பிரச்சினை ஆகிவிடுமே என்ற கவலை தொற்றிக்கொண்டது.

இது என்னடா சோதனை என்று உதவி மின் பொறியாளர் அலுவலகம் சென்றேன். அங்கு சென்றால் புகார் வாங்கும் பெஞ்சில் ஒருவர் இருந்தார். அவரை பார்த்தால் ஒரு சாயலில் ஆற்காட்டார் போலவும் மற்றொரு சாயலில் நத்தம் போலவும் "OHMS LAW" தெரியாதவர் போல் இருந்தார். அவரிடம் சார் "எங்க வீட்டில் மின்சாரம்.........." என்று ஆரம்பிக்கும் முன்னரே உதவி பொறியாளர் அறையை நோக்கி கையை நீட்டினார். அங்கு சென்றால் அவர் அலுவலகத்தில் நாய் ஒன்று இருந்தது. அது சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர் பேச நேரம் கேட்கும் பொழுது ஒரு பார்வை பார்ப்பாரே அது போன்ற பார்வையை வீசிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தது. சிறிது நேரம் அங்கு காத்திருந்தும் வேறு ஆட்களையோ அல்லது நாயையோ காணவில்லை.

பின்னர் அரை மணி நேரம் கழித்து மறுபடியும் சென்றால் புகார் பெஞ்சில் ஆளை காணவில்லை. நாய் மட்டும் தலையையே தூக்காமல் கண்ணை விழித்து "அவனடா நீயி" ரேஞ்சில் பார்த்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது. மறுபடியும் கஜினி வேலையே தொடர்ந்தேன், இந்த முறை என் அதிஷ்டம் புகார் பெஞ்சில் இருந்தவர் "சார் இந்த நோட்டுல உங்க அட்ரெஸ் எழுதிவிட்டு போங்க என்று ஆள் அனுப்புறேன்" என்றார்.  நோட்டில் அட்ரெஸ் எழுதியும் அடுத்த இரண்டு மணிநேரத்தில் யாரும் வரவில்லை. மறுபடியும் என் படையெடுப்பை தொடர்ந்தேன். இந்த முறை மற்றும் இரண்டு பேரும் இரண்டு நாய்களும் இருந்தன. அவர்களிடம் சென்று கேட்டபொழுது "தோ உங்கவீட்டுக்கு தான் சார் வரோம் நீ போ சார்" என்றார்கள். நான் போவதாக இல்லை.  பின்னர் ஒரு அரைமணி அவர்களுடனே காத்திருந்ததால் வேறு வழியில்லாமல் வந்தார்கள்.

வந்து சுவிச்போர்டை செக் செய்து "கேபிளில் பால்ட்டு கீது சார், தோ பாரு ந்யூட்ரலில் பவர் வருது" என்றார்கள். "சரிங்க அதுக்கு என்ன வழி" என்றால் "நாளைக்கிதான் சார் பகலில தெருவ நோண்டணும் நீ இன்னா செய் இன்ஜினீயர பார்த்து ஒரு கம்ப்ளைண்டு குடு அவரு ஆளு அனுப்புவாரு என்றார். "அவர நான் எங்கே பார்க்கிறது அவர் ஆபிசுல நாய்தான் இருக்குது" என்றேன்.

"சார் என்ஜினீயர என்ன வேணா சொல்லிக்க ஆனா நாய ஒன்னியும் சொல்லாத அவன் பேரு மணி சார்" என்றார் ஒரு ஒயர்மென். 

"அது சரிங்க இப்போ ஏதாவது கொஞ்சம் வழி பண்ணுங்க" என்றதற்கு "இன்னா சார் சரி பக்கத்து வூட்டு போர்டுல ந்யூட்ரல் எடுத்துக்கலாம்" என்றார்கள். சரி என்று பக்கத்து வீட்டு ஓனரிடம் பெர்மிஷன் கேட்கலாம் என்று போனால் ஒயர் மேன்களோ "நீ சும்மா இரு சார் நாங்க பார்த்துக்கிறோம்" என்றனர்.  இருந்தாலும் அவரிடம் நான் சென்று கேட்டதற்கு முடியாது என்றார். யாரு பில்லு கட்டறதாம் என்றார். அவரிடம் உங்கள் வீட்டிலிருந்து கரண்ட் எடுக்கவில்லை ந்யூட்ரலில் தான் கனெக்ட் செய்கிறேன் என்றாலும் அவருக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. பிறகு அவரிடம் வோல்டேஜ், பேஸ், ந்யூட்ரல்,எர்திங், ஒம்ஸ் லா எல்லாம் விளக்கியபின் அரை மனதாக ஒத்துக்கொண்டார்.

எப்படியோ அன்று ஒரு பேசில் கரண்டு வந்து  ஊருக்கு கிளம்பியாகிவிட்டது.  இங்கு வந்து ஊருக்கு போன் செய்தால் மனைவி மறுபடியும் மின்சாரம் இல்லை பக்கத்து வீட்டுக்காரர் அந்த ஒயரை பிடுங்கிவிட்டார்,  இப்பொழுது ஏதாவது செய்யவேண்டுமே என்றாள்.

சரி அந்த உதவி பொறியாளரைபார்த்து விஷயத்தை சொல்லு என்றேன்.

இரண்டு நாட்களாக தெருவில் நோன்டிக்கொண்டிருக்கிறார்களாம், மின்சாரம் இன்னும் வரவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 22 April 2013

கேப்டனுக்கு என்ன ஆச்சு? காதலித்து கைவிட்டதாக புகார்.

விஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கைவிட்டதாக புகார். சரிதான் இது என்னடா? கேப்டனுக்கு வந்த சோதனை, உள்ளே தள்ள ஐடியாவா என்றெல்லாம் யோசிக்க வைத்து,  இணையத்தில் இந்த தலைப்பைப் பார்த்து உள்ளே சென்று படித்தால் இது வேற கேப்டனாம். தட்ஸ்தமிழில் எப்படியெல்லாம் செய்தி போடுறாங்க. வர வர இந்துநேசன் ரேஞ்சுக்கு போய்ட்டாங்க. 
 
செய்தி இது தான்.
 
கரூரில் தன்னை கைவிட்ட காதலன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். விஜயகாந்த்தும் மாவத்துரையைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சரிதாவும்(29) காதலித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் சரிதாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சரிதா கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் நியாயம் கேட்டு மனு கொடுத்தார். சரிதாவின் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குளித்தலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விஜயகாந்த் மற்றும் சரிதா குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரிதாவை திருமணம் செய்துகொள்வதாக விஜயகாந்த் உறுதியளித்தார். ஆனால் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நேற்று முன்தினம் மாலை முதல் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சரிதாவை சமாதானப்படுத்தினர். விஜயகாந்துக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது என்றும், உங்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சரிதாவிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
 
கேப்டன் இந்த முறை தப்பித்துவிட்டார்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 21 April 2013

கலக்கல் காக்டெயில்-108

புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல் நாளா, இல்லை சித்திரை மாதம் முதல் நாளா என்பதை முடிவு செய்வது அரசியல் என்பது தமிழனுக்கு நேர்ந்த கொடுமை. உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எந்த புத்தாண்டை விமர்சையாக கொண்டாடுகின்றனர் என்று பார்த்தோமேயானால் ஆங்கில புத்தாண்டே ஆகும். அன்றுதான் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். போலிஸ் பாதுக்காப்பு எல்லாம் போட்டு நாம் குடும்பத்துடன் தெரியாமல் அந்தப் பக்கம் போனாலே ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு வந்த வழியே திருப்பி அனுப்பிவிடுவார். ஓட்டல்களில் சாப்பிட மேஜை முன் பதிவு செய்யவேண்டும். மிகவும் முக்கியமாக கொண்டாட்ட அளவை நிர்ணயம் செய்வது "டாஸ்மாக்" வருமானமே ஆகும். ஆக அந்த விதத்திலும் ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி முதல் தேதிக்கே முதலிடம்.

இந்த அழகில் சில கூட்டம் சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பு ஆரிய கூட்டத்தின் சதி வேலை என்றும், தை மாதம் முதல் தேதி திராவிடர்களின் அறிவு பூர்வமான சிந்தனை என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

தை மாதம் என்று அரசானை பிறப்பித்த தாத்தாவோ உகாதி, விஷு போன்றவைகளுக்கு உலகத்தினருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, ஆரிய புத்தாண்டில் விடுமுறை தின கொண்டாட்டத்தை தனது தொலைக்காட்சியில் "மார்பாட மயிலாட" என்று ஜொள்ளு விட வைப்பார்.

ஏதோ ஒரு புத்தாண்டில் நாடு நன்றாக இருந்தால் சரி.

அஞ்சலி புராணம் 

கடந்த சில நாட்களாகவே "அஞ்சலி அஞ்சலி" என்று ஊடகங்கள் புலம்பி தீர்த்துவிட்டன. காணாமல் போனவர் தானாகவே திரும்ப வந்துவிட்டார். இனிமேல்தான் உண்மை கதையே ஆரம்பிக்கப் போகிறது.

காசுக்காக உறவினர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் எனபது தெரியவரும். ஏற்கனவே "அட்ரா சக்க" வில் செந்தில் குமார் பொன்னியின் செல்வன் ரேஞ்சிற்கு பாகம் பிரித்து நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதலால் புதியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இந்த வாரம் முழுவதும் ஊடகங்கள் அஞ்சலி புண்ணியத்தில் நல்லாவே கல்லா கட்டினார்கள்.

போன வருடம் விஜயகுமார் குடும்பம், அதற்கு முன் நித்தி- ரஞ்சிதா, இந்த வருடம் அஞ்சலி அடுத்த வருடம் ஊடகங்களுக்கு ஒரு சுண்டெலி குடும்பம்  கிடைக்காமலா போய்விடும்.

ரசித்த கவிதை 

" பேச்சு வரணும்னு
பேச்சியம்மன வேண்டிக்கிட்டு...
டாக்டரம்மா குடுத்த
மருந்தையும் ஊட்டிவிட்டு...
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்லன்னு
நான் கேட்க...
'பேசாத' ன்னு
சொன்னாங்கங்கம்மான்னு
சொன்னா என் மக."
                                             .................க. இளஞ்சேரன்


ஜொள்ளு




21/04/2013

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 14 April 2013

பி.பி.ஸ்ரீநிவாஸ்

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ், 1930 ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி காக்கிநாடாவில் பிறந்தார். தந்தையார் பெயர் பாநிந்திரா சாமி, தாயார் பெயர் சேஷகிரியம்மாள். இவர் ஒரு பி.காம் பட்டதாரி.

இவர் முதன் முதலில் ஜெமினி பிக்சர்ஸ் ஹிந்தியில் எடுத்த மிஸ்டர் சம்பத் (1955) படத்தில் தன் முதல் பாடலை பாடினார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். தமிழ் படங்களில் இவர் ஜெமினிக்காக பாடிய பாடல்கள் மிக அதிகம். நல்ல வசீகரமான குரல். இவரை பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் இவர் பாடும் ஸ்டைலை "பேசுவது மாதிரியே பாடுவார், பாடுவது மாதிரியே பேசுவார்" என்றார். அதன் அர்த்தம் அவரது பாடலை நன்று ரசித்தவர்களுக்கு புரியும்.

நான் கல்லூரி படிக்கும் நாட்களில் பழைய படங்களை தேடிப்பிடித்து பார்ப்போம்.அதுவும் பரங்கிமலை ஜோதி, பல்லாவரம் லக்ஷ்மி, பட்ரோடு ஜெயந்தி,  ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஒரு டிக்கட்டில் இரண்டு படம் காண்பிப்பார்கள். சில இடங்களில் ஒரு புது படம் ஒரு பழைய படம் அல்லது இரண்டு பழைய படங்களாக இருக்கும். நாங்கள் பெரும்பாலும் பழைய படங்களுக்கே செல்வோம். ஜெமினி படம் என்றால் அவரது பாடல்கள் நிறைய இருக்கும். அப்படி பார்த்தவை தான் சுமைதாங்கி, காத்திருந்த கண்கள், பாதகாணிக்கை போன்ற படங்கள். நானும் என் நண்பனும் பி.பி. ஸ்ரீனிவாசின் தீவிர ரசிகர்கள். அவரை எப்படியும் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொள்வோம். கல்லூரி செல்லும் பொழுது முதல் நாள் இரவு வைத்த அவர் பாடல்களை கேட்டோம் என்று பெருமையடித்துக் கொள்வோம்.

அவரை வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் கல்லூரி நாட்களில் எனக்கு கிடைக்கவே இல்லை. பின்னர் திருமணம் முடிந்த பின்பு மனைவியுடன் அங்கு ஒரு முறை சென்ற பொழுது அவரை சந்தித்தேன். எங்களுக்கு அருகாமை மேஜையில் அமர்ந்திருந்தார். சட்டை பையில் விதவிதமான கலரில் பேனாக்கள் சொருகியிருந்தார். மேஜையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஒரே ஒரு முறை எங்களை நிமிர்ந்து பார்க்கும் பொழுது வணக்கம் செய்தேன், அதற்கு பதில் வணக்கம் செய்தார்.  அவருடன் நாங்கள் பேசவில்லை.

இருந்தால் என்ன? அவர் பாடல்கள் மூலம் என்னிடம் எத்தனை முறை பேசியிருக்கிறார்.


இன்று அவரது பாடல்கள் என்னுடைய MP3 ப்ளேயரில் ஏகப்பட்டது இருக்கிறது.

அவரது பாடல்களில் நான் விரும்பி திரும்ப திரும்ப கேட்பது

  • நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு)
  • காற்று வெளியிடை கண்ணம்மா (கப்பலோட்டிய தமிழன்)
  • காலங்களில் அவள் வசந்தம் (பாவ மன்னிப்பு)
  • நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (போலீஸ்காரன் மகள்)
  • பொன் என்பேன் சிறு பூ என்பேன் (போலீஸ்காரன் மகள்)
  • நாளாம் நாளாம் திருநாளாம் (காதலிக்க நேரமில்லை)
  • பூஜைக்கு வந்த மலரே வா (பாதகாணிக்கை)
  • நேற்று வரை நீ யாரோ நான் யாரோ 
  • யார் யார் இவள் யாரோ (பாசமலர்)
  • பூவரையும் பூங்கொடியே 
  • சின்ன சின்ன கண்ணனுக்கு 
  • இன்பம் பொங்கு வெண்ணிலா வீசுதே 
  • தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றல் ஆடிடும்
  • எந்த ஊர் என்றவனே 
  • பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

இதில் உள்ள ஒவ்வொரு பாட்டையும் அவ்வளவு ரசித்திருக்கிறேன். இன்னும் இது போன்ற நிறைய பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று அவர் உயிர் நீத்த செய்தி கேட்டு மனது மிகவும் கனக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.



Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 13 April 2013

விஜய ஆண்டே வருக

பருவ மழை பொய்த்து
பயிர்களே இங்கே நொடித்து
உழவர் குடியை கெடுத்த
நந்தனஆண்டேசெல்க
நொந்த மனம் ஆற
வந்த வழியே செல்க

விஜய ஆண்டே வருக
விம்மும் செல்வம் தருக
பருவமழை பெய்து நிலம்
கர்வம் கொள்ள செய்க

தமிழர் நலம் சிறக்க
தன்மானம் கொண்டு வருக
உழவர் நலம் சிறக்க
வெள்ளம் கொண்டு வருக

எங்கும் மனித நேயம் ஓங்க
பொங்கும் அன்பைத் தருக
மங்கும் தமிழ் மொழி தழைக்க
எங்கும் தமிழ் எனச் செய்க

விஜய ஆண்டே வருக
விம்மும் புகழ் தருக

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்













Follow kummachi on Twitter

Post Comment

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டும்

சமீபத்தில் விஜய் டி.வியில் பிரபலங்களை வைத்து நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி பிரகாஷ்ராஜ் நடத்திக்கொண்டிருக்கிறார்.



அவர் உலக்கை நாயகனிடம் கேட்ட கேள்விகளில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு கேள்வி தயாரிப்பவர்கள் எந்த லெவெலில் இருக்கிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. அதே போன்று கேணத்தனமான கேள்விகள் இதோ, விடையை பின்னூட்டத்தில் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரன் சொத்தில் ஒரு கோடி கொடுப்பதாக உறுதி அளிக்கிறோம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முதல் கேள்வி.............டொய்ங் ........டொய்ங்...............டொய்ங்...............டொய்ங்

1) கஸ்மாலம் எந்த மொழியிலிருந்து வந்தது?
a) செந்தமிழ் b) சென்னை தமிழ் c)தெலுங்கு d) சமஸ்க்ரிதம்

2) சென்னை தமிழில் குஜிலி என்றால் என்ன?
a) அட்ட பிகர் b) அழகான பிகர்  c)அடுத்த வீட்டு பிகர் d) ஒரு வகை நோய்

3) "வட போச்சே" என்ற வசனத்தில் வட எதை குறிக்கிறது?
a) மசால் வடை  b) கீரை வடை  c) உளுந்து வடை d) வேறு எதையோ

4) ஒன்று, இரண்டு மூன்றுக்கு பிறகு அடுத்து வரும் எண் எது?
a) நாற்பது  b) நானூறு   c) நான்கு   d) நாற்பதாயிரம்

5)ஜிகிரிதண்டா என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது?
a) கோவை   b) பெஜவாடா   c) மதுரை   d) பெத்தாபுரம்

6) ஆணி பிடுங்குவது என்றால் என்ன?
a) பிகரை கணக்கு செய்வது  b) பிகருக்கு கணக்கு சொல்வது    c)வேலை வாங்குவது    d) வேலைசெய்வது

7)  மெர்சல் என்ற சொல் தமிழ்நாட்டில் எந்த ஏரியாவில்  அதிகமாக பயன்படுத்தப் படுகிறது?
a) திருநெல்வேலி   b) பாப்பாரப்பட்டி    c) கொட்டாம்பட்டி    d) கொண்டித்தோப்பு

8) சட்ட சபையின் நடவடிக்கைகளில் முக்கியமானது எது?
a) பெஞ்ச் தட்டுவது    b) எதிர் கட்சி உறுப்பினர் முதுகில் தட்டுவது     c) செருப்பு வீசுவது  d) தூங்குவது

9) தமிழகத்தின் தலைசிறந்த "வெட்டு" எது?
a) கிடா வெட்டு     b) அதிர்வேட்டு      c) மின்வெட்டு   d) முடிவெட்டு

10) சாவு கிராக்கி என்ற சொல் எந்த நிலையிலிருந்து வந்தது?
 a) பிறப்பு  b) மூப்பு   c) ஆப்பு    d) இறப்பு

Follow kummachi on Twitter

Post Comment

Friday, 12 April 2013

அம்பேலான அஞ்சலி

தமிழ்கூறும் நல்லுலகமே இன்று "அஞ்சலி அஞ்சலி" என்று புலம்பிக்கொண்டிருக்கும் பொழுது நம்ம பங்கிற்கு பதிவு போடவில்லை என்றால் நமது கலை சேவைக்கு ஊறு வந்துவிடும் என்று பட்சி சொன்னதால் இந்த பதிவு.

இணையதளம், தொலைக்காட்சி என்று எந்த ஊடகங்களை தொட்டாலும் "அஞ்சலி அஞ்சலி" என்று புலம்பிக்கொண்டிருக்கின்றன. அஞ்சலியை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சித்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை செய்த "ஹேபியஸ் கார்பஸ்" மனுவின் மீதான நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது. அவரை புக் செய்த தயாரிப்பாளர்களும் என்ன ஆகுமோ? என்று வட்டி கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அஞ்சலி, ஆந்திராவில் ரசோல் என்ற கோதாவரிக்கரை கிராமத்தில் பிறந்த அவர் பாத்தாவது வகுப்பு முடிந்த  பின் சென்னைவாசியானார். பின்னர் கணித பாடத்தில் தன் பட்டப்படிப்பையும் முடித்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கு ஆசை இருந்திருக்கிறது. முதன் முதலில் மாடலிங் தொழிலில் இறங்கியிருக்கிறார், பின்னர் இவருக்கு முதலில் "ப்ரேமலேக ராசா" என்ற தெலுங்குப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் படம் சரியாகப் போகவில்லை. பின்னர் இவர் இயக்குனர் களஞ்சியம் படமான "சத்தமின்றி முத்தமிடு" என்ற படத்திற்கு ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் படம் சத்தமில்லாமல் முடங்கி முத்தமிடாமல் போய்விட்டது. பிறகு அதே இயக்குனரின் படமான "கற்றது தமிழ்" படத்தில் நடித்து படமும் வெளிவந்தது. படம் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும், இவருக்கு திரையுலகத்தில் முதல் விருதை வாங்கித்தந்தது. பின்னர் "ஹோண்கனசு" கன்னடப்படம். பிறது தமிழில் "ஆயுதம் செய்வோம்" என்று சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை "அங்காடிதெரு"

சேர்மக்கனியாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது "girl next door" சாயல் கிட்டத்தட்ட ரங்கநாதன் தெரு ரசிகர்கள் முதல் எக்ஸ்பிரஸ் அவென்யு ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. "அவள் அப்படியொன்றும் அழகில்லை"என்று அனேக ஜொள்ளர்களை நெகிழவைத்தார்.


பின்னர் கருங்காலி, கோ, ரெட்டைசுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம் என்று சுமாராக போய்க்கொண்டிருந்த வேளையில்  மறுபடியும் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வந்த "எங்கேயும் எப்போதும்" மணிமேகலை கேரக்டரில் நன்றாகவே செய்திருந்தார். எல்லா ஊடகங்களும் படத்தின் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பை சிலாகித்து எழுதின. பின்னர் கிளாமர் ரோல்களில் "சேட்டை, கலகலப்பு" என்று தமிழக ஜொள்ளர்களின் தலைவியாக இருந்தவர் தற்பொழுது காணாமல் போய் எல்லோரையும் புலம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்.

தன்னை அவரது சித்தியும், சித்தப்பாவும், களஞ்சியமும் கொடுமை படுத்துகிறார்கள் என்று ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டு "போல் பச்சன்" ரீமேக் சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்று ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தலைமறைவானது பிறகு எல்லோரும் தேடுவது செய்திகள்.

பாப்பா சீக்கிரம் வந்திடு.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 11 April 2013

அஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்

இன்று ட்விட்டரில் அஞ்சலி காணாமல் போனதை பற்றியும், "தலைவா" டீசர் வெளிவந்திருப்பதை பற்றியும் கொளுத்தும் வெயிலை பற்றியும்  கீச்சாமனிகள், கீச்சென்று கீச்சென்று கீச்சி கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அவைகளில் சில
அஞ்சலி

மேடம்.யார் கூட ஓடிப்போனீங்க ? அவசரத்துல பேரைக்கேட்கல.இருங்க கேட்டுச்சொல்றேன்.தம்பி.உன் பேரென்னப்பா ?

இன்னும் அஞ்சலி டாபிக் ஓடுதா அடங்கோ… இது அடங்கனும்னா திரீசா ஸ்கேண்டில் எதனா ரிலீசானாத்தா உண்டு போல.

தமிழர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணனங்க அஞ்சலியைக்கண்டு பிடிக்க 6 பேர் கொண்ட குழு ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு கிளம்பிட்டோம்.

டீசர்

எங்களுக்காவது டீசர் தான் ஸ்டில்லு ...பாவம் இவங்களுக்கு படமே ஸ்டில்ஸ் தானே.

தலைவன் ஊச்சா போகிறான்.

 நாயகன்-பாம்பே-தமிழர்கள், தலைவா-தமிழ்நாடு-மீனவர்கள் #தலைவா ஒன் லைனர்.

 குறும்படத்துக்கெல்லாம் டீசரா. உங்க விளம்பர யுக்திக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.

தலைவா டீசர் #திஸ் இஸ் ஃபொட்டட்டோ :-)).

தலைவா’ டீஸருக்குமட்டும் இசை ஏ. ஆர். ரஹ்மானா? #கப்பலேறிப்போயாச்சு

நான் எப்போதும் சிஎஸ்கே மற்றும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களை ஒரே தட்டில் தான் பார்ப்பேன் #எண்ணமும் செயலும் அப்படியே.

பீச்சுல கண்ணகி சிலைக்கு அப்புறம் இவ்வளவு அழ்ழ்ழ்ழ்ழகா நிக்குறது நம்ம அணிலுதான் # தளபதிடா.

 தலைவா டீசர் லிங்க் கொடுங்கப்பா.நான் பாத்ததுல்ல ஏதோ டாய்லெட் போறதுக்கு லொகேஷன் பாக்குற மாதிரி நிக்கறார்.இல்ல இதான் டீசரா?/

பல வருசத்துக்கப்பறம் ரூம கழுவி க்ளீனா பாக்றதுல இருக்ற த்ருப்தி இருக்கே, ஆஸ்கார் வாங்ன திருப்தில்லா தோத்ததுபோ.

 முன்னெல்லாம் விஜய் படம் ரீலிஸானாதான் போட்டு கலாய்ச்சு கிண்டல் பண்ணி கேவலபடுத்துவாங்க.. இப்பல்லாம் போஸ்டர் டீசர்னு முன்னேறிட்டாங்கப்பா!

டீச்சர்க்கு வாழ்வு கொடுத்த எங்கள் தலைவனே.

அணிலால ஒரு சேட்டு அழிஞ்சான்னு வரலாறு சொல்லட்டும். ;)

அங்கிட்டும் இங்கிட்டும் கத்திகிட்டிருந்த அணில் குஞ்சுகள் எங்க போய் ஒளிஞ்சுதுகள்.. ஒண்ணையுமே காணோம்

ராமருக்கு பாலம் கட்ட உதவி செய்த முற்பிறவி நினைவு வந்துவிடுகிறது அணிலுக்கு,அதனால் மீண்டும் பாலம் கட்டுவதற்காய் நோட்டமிடுகிறார் # தலைவா

அதெல்லாம் தெரியாது. விஜய்னா அடிப்போம்.

ரீசரே இம்புட்டு அடி வாங்குதே .. இன்னும ஜ சப்போர்ட் தலைவா டாக் ரெடியாகல

டீசருக்கு கலங்கவேண்டாம் கண்மணிகளே! படம் வரட்டும்.. இன்னும் ஜாலியா கலாய்க்கலாம் ;-))

1947க்கு முன்ன அணில் படத்துல நடிச்சிருந்தா,அணில் ரசிகர்களே நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கி குடுத்திருப்பாங்க! ஏன்னா அவிங்க தியாகிங்க !

புதுப்பேட்டைல தனுஷ மிகப்பெரிய ரவுடின்னு சொன்ன மாதிரிதான், விஜய் ய தலைவா ன்னு சொல்றதும்! # ஒரே தமாசு!

விஜயின் 'தலைவா' பட 'Teaser' பார்த்தவுடன் கண்ணுல 'Tears' முட்டிட்டு நிக்குது.. முடில

இதே டீசர ட்ரைலர்ல காமிச்சிடாதீங்கய்யா, அப்ப நான் இதே மாதிரி சாந்தமா இருக்க மாட்டேன், உக்கிரமா மாறிடுவேன். :))

இந்தியாலயே ஏன் உலகத்திலயே போஸ்ட்டர டீசர்னு சொல்லி உட்ட கோஷ்டி நம்ம கோஷ்டிதான். #தலைவாஆஆஆஆ

நாட்டாமை பசுபதி வைச்சிருந்த டீச்சருக்கு பிறகு சந்து அல்லோகலப்படுறது இந்த டீ(ச்)சருக்கு தான் போல

மற்றவை 


வடசட்டி இல்ல, எண்ணை இல்ல... ஆனாலும் கும்பிபாகம் நடக்குது... #இன்னும் ஒருதடவ வெயில்ல நடந்துட்டு வந்தா கருவாடு ஆயிடுவேன்..

இந்த மொட்டை வெயில்லயும் எப்பிடிடா உங்களுக்குக் காதல்லாம் வருது...? கடலை போடுறாய்ங்க யுவர் ஆனர்!.

 தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது........ காதல், கண்றாவியெல்லாம் இல்ல வெயில்.

இந்த ஐபிஎல் பாக்குற கூட்டத்துகிட்டே இருந்து கரெண்டை புடுங்கி ஒழுங்கா தூங்கறவங்களுக்கு கொடுக்க என்ன வழி?!

காட்டுப் பன்றிகள் குறித்து நேற்று சட்டசபையில் நிகழ்ந்த விவாதங்கள் நம் சூழியல் அறிவின் லெட்சணம் இவ்வளவுதான் என்பதைக் காட்டுகிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 10 April 2013

தொலைக்காட்சி, ராசி பலன்கள்

பெரும்பாலான தொலைக்கட்சிகள் காலையில் தவறாமல் ஒளிபரப்பும் நிகழ்சிகளில் ராசி பலன் கட்டாயம் உண்டு. இவர்கள் சொல்லும் ஜோதிடம் பலிக்குமா பலிக்காதா, நம்பலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சிகளுக்கு அவசியமில்லை. எப்படியும் நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும், அதை பற்றி முன் கூட்டியே தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லைதான். இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியாமல் இந்த மாதிரி நிகழ்ச்சி நம்ம வீட்டு பெருசுங்க பார்க்கும்பொழுது பார்க்க நேர்ந்தது.

அதில் எண் ஜோதிடம் சொன்னவர் அன்றைக்கு சரியான மூடில் இல்லை போலும்,  அவருக்கு என்ன பிரச்சினையோ. அன்றைக்கு எல்லா நம்பர்களுக்கும் அவர் சொன்ன ஜோதிடம் வித்தியாசமாக இருந்தது.

ஒன்றாம் நம்பர் உள்ளவர்கள் இன்று எடுத்த காரியம் எதுவும் உருப்படாமல் போகும்.

இரண்டாம் எண்காரர்கள் இன்று ரெண்டுகெட்டான் நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இன்று எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

மூன்றாம் எண்காரர்கள் செய்யும் காரியம் எதுவும் இன்று மூளியாகிவிடும். மூலையில் முடங்கிவிடுவது நல்லது.

நான்காம் எண் உள்ளவர்கள் நாய் படாத பாடு படுவார்கள்.எல்லாம் நாசமாகிவிடும்.

ஐந்தாம் எண்காரார்களுக்கு இன்று பொருள் அழிவு நிச்சயம். ஆதலால் அடுத்த வீட்டுக்காரனின் சொத்திற்கு ஆட்டையை போட யோசியுங்கள்.

ஆறாம் எண் உள்ளவர்கள் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடுங்க" இல்லை என்றால் உங்கள் சொத்து ஆட்டம் கண்டுவிடும்.

ஏழாம் எண் உள்ளவர்கள் இன்று தொழில் தொடங்கவேண்டாம் எதுவும் எடுபடாமல் போகும்.

எட்டாம் எண் நேயர்கள் தொட்டது துலங்காது. ஆதலால் பட்டென்று உங்கள் பாட்னரிடமிருந்து விலகிவிடுங்கள்.

ஒன்பதாம் எண் நேயர்கள் ஒடுங்கிவிடுவார்கள், இல்லை முயற்சி தொடர்ந்தாலும் ஓடிவிடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அன்று மின்வெட்டு பதினாலு மணி நேரம் என்றாலும் பின்கட்டில் படுத்திருப்பதே நல்லது என்று தோன்றியிருக்கும்.




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 9 April 2013

தமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை

இணையதளத்தை திறந்தால் பெரும்பாலும் தமிழகத்தை பற்றிய செய்திகள் கீழ் கண்டவாறுதான் இருக்கிறது. அதுவும் தட்ஸ்தமிழ் தளம் இந்த மாதிரி செய்திகளுக்கு பெயர் போனது.

தர்மபுரியை உறைய வைத்த பயங்கரம்.. பஸ்சில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்
ராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறந்த கணவன்: திருப்புவனத்தில் சோகம்
மாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்
வண்டி ஓட்டியபடியே புருஷன், பெண்டாட்டி சண்டை.. குழந்தை கீழே விழுந்து பலி
இதைவிட்டால் ஓடிப்போன நடிகைகள்,மருமகளுடன் குஜாலாக இருந்த மாமனார் என்று பரபரப்பு செய்திகள் போடுகிறார்கள்.

காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா?
உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி' ஸ்டைல் ரயில் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்! 

எந்த மச்சான்ஸ் ஆக இருந்தாலும் நான் ரெடி ............நமீதாஅதிரடி 

 

பெரும்பாலான செய்திகளின் நோக்கம் பரபரப்பே. 

 

தமிழ்நாட்டில் மின்வெட்டு அடியோடு ஒழிப்பு. உபரியாக ஐயாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகிறது.

 

கர்நாடகா காவிரியில் வினாடிக்கு ஆயிரம் டிஎம்சி தண்ணீர் திறந்து விடுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.

 

சட்டசபையில் இன்று கலைஞர் வருகை தந்தார், முதலமைச்சர் அம்மா அவரை எழுந்து நின்று வரவேற்றார்.

 

இன்று தமிழக சட்டசபையில்  நிதி நிலை அறிக்கையை ஒ.பி. சமர்ப்பித்தார்.  ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெஞ்ச் தட்டவில்லை.

 

கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்த ஒப்புதல் அளித்தது.

 

நமீதா இனி தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டுதான்  நடிப்பேன் என்று பேட்டி.

 

கூடலூரில் இன்று ஒரு கணவன் மனைவி சண்டை சச்சரவின்றி  உற்சாகமாக இருந்தார்கள், ஊரார் ஆச்சரியப்பட்டு விழா எடுத்தார்கள்.

 

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்காசந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு. 

 

 



Follow kummachi on Twitter

Post Comment

Monday, 8 April 2013

கலக்கல் காக்டெயில்-107

ஸ்ஸ்ஸ் ....ப்பா தாங்க முடியல

சென்னையில் ஆறு வாரம் தங்கிவிட்டு ஆணி பிடுங்கும் கடமை அழைத்ததால் திரும்பி வந்துவிட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொளுத்திய வெயில் எப்படா திரும்பி வருவோம் என்றிருந்தது.  இங்கு வந்தால் தட்பவெட்ப நிலை குளுமையாக இருக்கிறது.  வர வர பாலைவனங்கள் சோலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம்மூரு பாலைவனமாகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

திரும்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு காலையில் ஐந்து மணிக்கே மின்சாரம் போய்விட்டது. சரி நேரத்தை மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் ஏழு மணிவரை வரவில்லை. ஒன்பது மணிக்கு இஸ்திரி முருகன் வந்த பொழுது என்ன முருகா மின்சாரம் நாம் ஏரியாவிலேயே இல்லையா என்றால், சார் உனுக்கு தெரியாதா நாலாவது தெருவில் ட்ரான்ஸ்பார்மர் எரிந்துவிட்டது என்றான். சரி யாரவது ரிப்பேர் செய்து கொண்டிருக்கிரார்களா என்றால் அடப்போ சார் இது என்ன துபாயா, பதினோரு மணிக்கு தான் வருவானுங்க என்றான். ஒரு வழியாக மின்சாரவாரிய ஆட்கள் வந்து வேலையை தொடங்க ஒரு மணியாகிவிட்டது. எப்பொழுது கேட்டாலும் அரை அவர்ல முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டே இரவு ஏழு மணியாகிவிட்டது. நான் வேறு தெரியாத்தனமாக காக்கி ட்ரவுசருடன் அங்கு நின்றுகொண்டிருந்ததால் ஏதோ மின்சாரவாரிய ஆளென்று நினைத்து என்னிடம் ஆளாளுக்கு எப்போ வரும் எப்போ வரும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயில் கசிந்து ரிசர்வாயர் காலி ஆனதால் எரிந்து விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். மின்சார வாரிய ஆட்கள் ஆயிலுக்கு அலைந்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக வந்து ஒரு பெருசு "எப்ப வரும் கரண்டு, இன்னது ஆயில் இல்லையா பின்ன இன்னா மசுருக்கு போன வாரம் காலையில் ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை நிறுத்தி வேலை செய்தீர்கள், அப்ப லீக் பார்க்கலையா" என்று என்னிடம் சொல்லிவிட்டு அம்மா ஆட்சி எதிர்கட்சி உறுப்பினர் போல் அப்பால் நகர்ந்து ஊருக்கு வெளிநடப்பிற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.

லேகிய பார்ட்டிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் "முஸ்லி"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி விற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார்.  தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா?

இவர்களுக்கு குதுப்மினார் முன்பு ஸ்தூபியைக் காட்டி சாண்டேகா தேல் (உடும்பு தைலம்) விற்கும் வியாபாரி எவ்வளவோ மேல்.

ரசித்த கவிதை 

பயனில பாராமை 

பயன்படுத்தவும் முடியாமல்
பழுது பார்க்கவும் இயலாமல்போன
பலதரப்பட்ட பொருட்களையும்
பக்குவமாக சேர்த்துவைக்கும் அம்மா
பாசத்துக்காக இல்லாவிடினும்
பழைய எடைக்கு எடுப்பதாக
இருந்தாலாவது
பாட்டியையும் தாத்தாவையும்
பக்குவமாக பார்த்திருப்பாள்

..................................நண்பன் கணேஷ்

ஜொள்ளு 




08/04/2013





Follow kummachi on Twitter

Post Comment