தமிழ்கூறும் நல்லுலகமே இன்று "அஞ்சலி அஞ்சலி" என்று புலம்பிக்கொண்டிருக்கும் பொழுது நம்ம பங்கிற்கு பதிவு போடவில்லை என்றால் நமது கலை சேவைக்கு ஊறு வந்துவிடும் என்று பட்சி சொன்னதால் இந்த பதிவு.
இணையதளம், தொலைக்காட்சி என்று எந்த ஊடகங்களை தொட்டாலும் "அஞ்சலி அஞ்சலி" என்று புலம்பிக்கொண்டிருக்கின்றன. அஞ்சலியை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சித்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை செய்த "ஹேபியஸ் கார்பஸ்" மனுவின் மீதான நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது. அவரை புக் செய்த தயாரிப்பாளர்களும் என்ன ஆகுமோ? என்று வட்டி கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அஞ்சலி, ஆந்திராவில் ரசோல் என்ற கோதாவரிக்கரை கிராமத்தில் பிறந்த அவர் பாத்தாவது வகுப்பு முடிந்த பின் சென்னைவாசியானார். பின்னர் கணித பாடத்தில் தன் பட்டப்படிப்பையும் முடித்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கு ஆசை இருந்திருக்கிறது. முதன் முதலில் மாடலிங் தொழிலில் இறங்கியிருக்கிறார், பின்னர் இவருக்கு முதலில் "ப்ரேமலேக ராசா" என்ற தெலுங்குப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் படம் சரியாகப் போகவில்லை. பின்னர் இவர் இயக்குனர் களஞ்சியம் படமான "சத்தமின்றி முத்தமிடு" என்ற படத்திற்கு ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் படம் சத்தமில்லாமல் முடங்கி முத்தமிடாமல் போய்விட்டது. பிறகு அதே இயக்குனரின் படமான "கற்றது தமிழ்" படத்தில் நடித்து படமும் வெளிவந்தது. படம் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும், இவருக்கு திரையுலகத்தில் முதல் விருதை வாங்கித்தந்தது. பின்னர் "ஹோண்கனசு" கன்னடப்படம். பிறது தமிழில் "ஆயுதம் செய்வோம்" என்று சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை "அங்காடிதெரு"
சேர்மக்கனியாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது "girl next door" சாயல் கிட்டத்தட்ட ரங்கநாதன் தெரு ரசிகர்கள் முதல் எக்ஸ்பிரஸ் அவென்யு ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. "அவள் அப்படியொன்றும் அழகில்லை"என்று அனேக ஜொள்ளர்களை நெகிழவைத்தார்.
பின்னர் கருங்காலி, கோ, ரெட்டைசுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம் என்று சுமாராக போய்க்கொண்டிருந்த வேளையில் மறுபடியும் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வந்த "எங்கேயும் எப்போதும்" மணிமேகலை கேரக்டரில் நன்றாகவே செய்திருந்தார். எல்லா ஊடகங்களும் படத்தின் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பை சிலாகித்து எழுதின. பின்னர் கிளாமர் ரோல்களில் "சேட்டை, கலகலப்பு" என்று தமிழக ஜொள்ளர்களின் தலைவியாக இருந்தவர் தற்பொழுது காணாமல் போய் எல்லோரையும் புலம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்.
தன்னை அவரது சித்தியும், சித்தப்பாவும், களஞ்சியமும் கொடுமை படுத்துகிறார்கள் என்று ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டு "போல் பச்சன்" ரீமேக் சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்று ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தலைமறைவானது பிறகு எல்லோரும் தேடுவது செய்திகள்.
பாப்பா சீக்கிரம் வந்திடு.

6 comments:
katradhu tamil director.... ram... not kalanjiyam
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி அனானி.
சுவையா தகவலை தொகுத்து இருக்கீங்க நன்றி! நல்ல நடிகை மீண்டு வரட்டும்!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
ஐயோ... இந்தப் பெண்தான் அஞ்சலியா?
எனக்கு அங்காடி தெருவில் பார்த்ததாக ஞாபகம்....
யாரையாவது அனுப்பி அங்கே தேடிப்பார்க்கச் சொல்லுங்கள் கும்மாச்சி அண்ணா.
அருணா வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.