சூதாட்டங்கள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவரின் மருமகன், விந்து தாராசிங் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் இப்பொழுது சூது வலையில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கிரார்கள். இதில் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஊடகங்களிடம் மாட்டிகொண்டு முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எங்க சென்றாலும் எப்போ ராஜினாமா? எப்போ ராஜினாமா? என்று குடைந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் பொழுதும் கோல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டிக்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வரையில் சூதாட்டம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. முதலில் சென்னைதான் ஜெயிப்பார்கள் என்றுதான் எல்லோரும் பணம் கட்டியதாகத் தெரிகிறது. பின்னர் நிலைமை மாறிக்கொண்டே வந்தாலும் புக்கிகள் சென்னை ஜெயித்தால் அதிகம் காசு என்று அறிவித்து மேலும் அதிக காசை அள்ளியிருக்கிறார்கள்.இப்பொழுது இந்த முடிவுகள் எல்லாமே கேள்விக்குறியாகிறது.
இந்த சூதாட்டங்களை தவிர்க்க முடியாது. எங்கள் வீட்டருகில் "உள்ளே வெளியே" விளையாடிக்கொண்டிருப்பார்கள். புகைவண்டி பாலமருகே ஆடுவார்கள். ஒரு நாள் போலிஸ் வந்து அவர்களை பிடித்து சென்றது. சிலமாதங்கள் கழித்து அவர்கள் இடத்தை மாற்றினார்கள், தேசிய நெடுஞ்சாலையில் ஆற்றுப்பாலம் மீது அமர்ந்து கொண்டனர். ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்கள். எதிரே வரும் வண்டியின் கடைசி எண் ஒற்றைப்படையா? இரட்டைப்படையா? என்று காசுவைத்து விளையாடுவார்கள்?
சோம்பேறிகள் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.
ரயில்கேட், கோல்கேட் எல்லாம்.............
சிலநாட்களுக்கு முன்பு வடஇந்திய ஊடகங்கள் ரயில்கேட் கோல்கேட் என்று புலம்பிக்கொண்டிருந்தன. தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த கிரிக்கெட் விஷயம் தேவைக்குஅதிகமாக செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும்பொழுது அரசியல் அரங்கில்இன்னும் ஏதோ ஒரு பெரிய தில்லுமுல்லு பின்னுக்கு தள்ளப்படுவது போல் தோன்றுகிறது.
நேபாளத்தின் யசோதா
புஷ்பா நேபாளத்தை சேர்ந்தவர். காட்மாண்டு செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியல் மாணவி. கல்லூரியில் அவர்களை சிறைக்கு பார்வையிட அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு சிறையில் சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடுவதைக் கண்டார். அவர்களது தாய்மார்கள் சிறையில் கைதிகள். குழந்தைகள் சிறையிலேயே வளரவேண்டிய சூழ்நிலை. இதை மாற்ற அரசாங்கத்துடன் போராடி "சோலோ டம்ப்" என்ற குழந்தை காப்பகத்தை தொடக்கி அந்த குழந்தைகளை நல்ல சூழ்நிலையில் வளர்க்க ஆரம்பித்தார். குழந்தைகளின் மனநிலையில் நல்ல முன்னேற்றம்.
தாய்மார்கள் விடுதலை ஆனவுடன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க ஆரம்பித்தனர். இவரை மக்கள் நேபாளத்தின் யசோதா என்கின்றனர்.வித்தியாசமான புஷ்பாவின் சிந்தனை குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வித்திட்டு இருக்கிறது. வாழ்த்துவோம்.
ரசித்த கவிதை
காதலர்க்குத்தான்
காதலிப்பவர்கள் மீது
பைத்தியம்
கணித அறிஞனுக்கு
எண்கள் மீது
பைத்தியம்
கவிஞனுக்கு
சொற்கள் மீது
பைத்தியம்
ஓவியனுக்கு
வண்ணங்கள் மீது
பைத்தியம்
பாடகனுக்கு
இசை மீது
பைத்தியம்
குழந்தைகளுக்கு
பொம்மைகள் மீது
பைத்தியம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றின் மீது
பைத்தியம்
நம் எல்லோருக்கும்
புகழின் மீது
பைத்தியம்
எந்தவொன்றின் மீதும்
பைத்தியமில்லாமல்
இருக்கிறது
பைத்தியம்.
-------------------------அ. நிலாதரன்
ஜொள்ளு
28/05/2013