சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்று இருந்த பொழுது இரண்டு தொகுப்புகளை வாங்கி வந்தேன். இரண்டாம் தொகுதியும், மூன்றாம் தொகுதியும் தான் கிடைத்தது. மூன்றாம் தொகுதியில் நாற்பத்தியிரண்டு சிறுகதைகள் உள்ளன. அவற்றை படித்துக்கொண்டு வந்த பொழுது "சசி காத்திருக்கிறாள்" என்ற கதை மிகவும் ரசிக்கத்தகுந்ததாக இருந்தது.
கதையில் முதலில் டெல்லியின் போக்குவரத்து மிகுந்த தெருவில் ஒரு விபத்து. சினிமா தியேட்டரின் முன்பு போஸ்டரை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு வந்த ஒரு டாக்சி ஓட்டுனர் ஒரு இளைஞரின் மேல் மோதி விடுகிறான். இளைஞருக்கு பலத்த அடி. வழக்கம்போல் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன் அடிபட்டவனின் பையை துழாவி அவன் பர்சை எடுத்து வைத்துக்கொண்டு அவனை மருத்துவமனையில் சேர்க்கிறான். மருத்துவர்கள் இவன் பிழைப்பது கடினம் அவனது உறவினரிடம் தகவல் சொல்லி கூட்டி வாருங்கள் என்கிறார்கள்..............
வீட்டில் சசி தனியாக கணவன் வரவை எதிர் நோக்கியிருக்கிறாள். அன்று அவர்களது கல்யாண நாள். கணவன் அலுவலகத்திலிருந்து வரும் முன்பு சினிமா டிக்கட் வாங்கிக்கொண்டு வருகிறேன். இரவு சினிமா போய்விட்டு, பின்பு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நமது முதல் கல்யாண நாளை இன்று விடிவிடிய கொண்டாடலாம் என்று சொல்லி சென்றிருக்கிறான். நேரமாகிக்கொண்டிருக்கிறது. கணவன் இன்னும் வரவில்லை. அலுவலகம் முடிந்து சினிமா டிக்கட் வாங்கிவர இவ்வளவு நேரமா என்று சிந்திக்க சிந்திக்க விபரீத எண்ணங்கள் அவளை ஆட்கொள்கின்றன. கிடந்து தவிக்கிறாள். நேரமாகிக்கொண்டே போகிறது. அவளுக்கு பயம் அதிகரிக்கிறது. அப்பொழுது வீட்டின் எதிரில் டாக்சி வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கியவன் டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு அவள் வீட்டை நோக்கி வருகிறான். அவன் கிட்டே வர வர அவனது வெள்ளை சட்டையில் ரத்தக்கறையை காண்கிறாள்....................வேண்டாம் இதற்கு மேல் கதையை தொகுப்பில் படியுங்கள். சுஜாதா எப்படி வெகுவான வாசகர்களை கவர்ந்தார் என்பதற்கு இது போன்ற கதைகள் சான்று.
சமீபத்தில் விகடனில் கேள்வி பதில் பகுதியில் படித்த ஒன்று இன்றைய நீதித்துறை நடைமுறையை சிந்திக்க வைத்தது.
மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நீதித்துறை சார்ந்த வெண்பா.
வரும்வா தியரோ டுறவுபற்று
வரவு முதல்செய் குதல்விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது
காலங் கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினைநன்
குணராத் தன்மை பொது நீங்கல்
பொருவில் இவையா தியபுரைகள்
இலஞ்ச மதனை பொருவுமால்
பொருள்: வழக்காளிகளுடன் நட்பு கொள்ளுதல், கொடுக்கல், வாங்கல் விரைவில் வழக்கை தீர்க்காமை, காலம் கடுத்துதல்(வாய்தா கொடுத்து/வாங்கி), நடுநிலைமை தவறுதல் முதலிய குற்றங்கள் யாவும் லஞ்சம் வாங்குவதற்கு சமமாகும்.
நீதிபதிகளுக்கு நல்ல அறிவுரை.

10 comments:
நீதிபதிகள் பொருள் அறிந்தால் சரி...
தனபாலன் வருகைக்கு நன்றி.
கண்மூடித் தனமாக போதையில் (மது ,மாது ) வாகனங்களை ஓடி பிறர் மீது மோதிக் கொல்லும் இக் கொடிய செயல் இன்னும் நிஜ வாழ்விலும் துன்பம் தரும் வேளை தான் இதுவும் .என் செய்வது
இதற்கென கடுமையான சட்டங்களை நிறைவேற்றத் தவறுகின்றது நீதித் துறை :( சிறப்பான (கதை )தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .
அம்பாளடியாள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
சுஜாதா அவர்களின் கதை விறுவிறுப்பைக் கூட்டியது.
என்ன முடிவு எனக்காண மனம் ஏங்குகிறது கும்மாச்சி அண்ணா.
(வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் வெண்பா இல்லை. அறுசீர் விருத்தம்.)
அருணா வருகைக்கு நன்றி. கதையை படியுங்கள் அருணா, முடிவு நீங்கள் எதிர்பார்ப்பது அல்ல.
சுஜாதாவின் கதை ஆவலைத்தூண்டுகிறது.
மாதேவி வருகைக்கு நன்றி.
உங்களின் கதை ஆரம்பிக்கும் திறனும், முடிக்காமல் ஆவல் தூண்டும் / சிந்திக்க
வைக்கும் திறனும், கனம் கோர்ட்டாரவகளுக்கு நல்ல தொரு advise ம் ...... அமர்களம், ஐயா ...
சுஜாதவின் கதை ரசிக்கவைத்தது ...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.