Pages

Monday, 20 May 2013

கலக்கல் காக்டெயில்-110

சூது கவ்வும்

ஐ.பி. எல் ஆட்டங்களை சூது கவ்வும்
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்

சமீபகாலமாக கிரிக்கெட் வாரியத்திற்கு பிடித்த பேராசையினால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. ஐ.பி.எல் பணம் குவிக்கும் யுக்தி வந்தவுடன் அதில் வரும் வருமானம் அள்ள அள்ள  குறையாதது. கூடவே அந்த விளையாட்டுகளின் மீதான சூதாட்டமும் பெருகிக்கொண்டே போனது.அதன் எதிரொலியாகத்தான் ஸ்ரீசாந்த் மற்றும் இரண்டு வீர்களின் கைது.  ஸ்ரீசாந்தை தலைமேல் வைத்துக்கொண்டாடிய கேரளா ரசிகர்கள் அவரை கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் அவர் உண்மையான குற்றவாளியா?, இல்லை பலிகடா ஆக்கப்பட்டவரா? என்பதெல்லாம் நியாயமாக விசாரணை நடந்தால் தெரியவரும். இப்பொழுது ஸ்ரீசாந்தின் நேர்மை சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. அவரது லேப்டாப்பில் பல பெண்களின் நிர்வாணப்படங்கள் இருந்தன, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் போன்ற செய்திகளையும் காவல் துறை அவ்வப்பொழுது வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பொன் ஆசை, பெண் ஆசையினால் வந்த வினை.

இந்தப் போட்டிகளில் மேல் உள்ள நம்பகத்தன்மை ஒவ்வொரு போட்டியும் கடைசி  ஓவர் வரை இழுக்கப்படுவதில் தொக்கி நிற்கிறது. மொத்தத்தில் இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலுமே ஒரு செட்டப் இருப்பதாக நமக்கு தோன்றினால் அதில் ஆச்சர்யமில்லை.

ஃபைஸ்டார் பார்ட்டி

கர்நாடகாவில் தோற்ற பி.ஜே.பி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் தங்களது வியூகத்தை மாற்றிக்கொண்டால்தான் கொஞ்சமாவது தேறமுடியும். கட்சியின் தலைவரை முன்னிருத்துவதிலேயே அவர்களுக்குள் உள்ள பிரச்சினை தீர்ந்தப்படில்லை. அத்வானி, ராஜ்நாத், சுஷ்மா, மோடி, ஜெயிட்லி என்று ஐந்து பேரும் பிரதமர் கனவில் இருக்கின்றனர். யார் என்று முடிவு செய்யாமல்  தேர்தலை சந்தித்தால் எதிரிக்குத்தான் லாபம். பிறகு என்ன அடுத்த ஐந்து வருடம், ரயில்கேட், கோல்கேட், பூட்கேட், அந்தகேட், இந்தகேட் என்று புது புது ஊழல்கள் நடக்கும்.

அட போங்கப்பா

ரசித்த கவிதை 

தீவிரவியாதி 


தீதையும், நன்றையும் பகுத்தறிவதால் நான் பகுத்தறிவுவாதி
அயலானிடமும் அன்பு பாராட்ட அறிவதால் நான் கிறித்துவன்
தேவன் ஒருவனே என ஓதுவதால் நான் இஸ்லாமியன்
உண்மையை உணர என்னுள்ளே தேடுவதால் நான் இந்து
குருநாதர் சொல்வழி செல்வதால் நான் சீக்கியன்
ஆசைகளை வென்றிட விழைவதால் நான் பௌத்தன்
அகிம்சையை நேசிப்பதால் நான் சமணன்
இருப்பினும் கேள்வி ஒன்று இருக்கிறது எனக்கு

- அனைத்தும் இப்படி நம்முள்ளே இருக்க,
நான் "இவன்", நீ "அவன்" என பிரிக்க,
குண்டுகள் வெடிக்க, அவன் யார்?

நன்றி ............................புதுயுகன்

ஜொள்ளு



21/05/2013

15 comments:

  1. ஐ.பி. எல் போட்டிகள் நம்பகத்தன்மை அற்றுவிட்டது உண்மை! இதை பார்த்து நேரம் வீணடிக்கப்ப்டுவது கொடுமை!

    ReplyDelete
  2. சுரேஷ் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. இன்றைய காக்டெயிலும் கலக்கல் தல...

    ReplyDelete
  4. சௌந்தர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கவிதையை தவிர மற்றனைத்தும் "அட போங்கப்பா" தான்...! நன்றி...

    ReplyDelete
  6. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. கவிதையின் கருவும் கேள்வியும் அருமை.
    நன்றி கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  8. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. கருண் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. சம்பத்குமார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. நண்பனுடன் RCB & CSK என்று சண்டை பிடித்த எனது முட்டாள்தனத்தை நினைத்து வேதனைப்படுகிறேன். IPL = WRESTLING. (Just like some SHOW). கோடி ரூபா கொடுத்தாலும் இன்று இறுதிப்போட்டி பார்க்க மாட்டேன்.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.