Pages

Sunday, 9 June 2013

மீண்டும் பள்ளி...........

விடுமுறையென குதூகலிக்கும் முன்
அத்தை மாமன் வீடா பாட்டிவீடா என்று
பெற்றவர்கள் மல்லுக்கு நின்று
உற்ற வீட்டில் ஒவ்வொரு வாரம்
என்று ஒருமனதில் முடிவு கொள்ள
அத்தையும் மாமனும் விடுமுறையில்
வெளிநாட்டு பயணம்

எப்பொழுதும் திறந்திருக்கும்
பாட்டன் வீடு, கொட்டடியில் மாடு
புழக்கடையில் பழத்தோட்டம்
வயல் வரப்பு கிணற்றடி
கணினி திரை மறந்து
புது உலகில் சஞ்சாரம்

கணினி முன் விரிந்த
கோபப் பறவை துறந்து
கருவேலன் காட்டு
கரிச்சான் குஞ்சும்
நாகனவாயும்
நர்த்தனமாட நீரோடை குளியல்
கொளுத்தும் வெயிலும்
குளிர் நிலவாய்  காட்டும்
சுற்றமும் விளையாட்டும்
பாட்டனின் அன்பில் திளைத்து
கல்விமறந்த வேளையில்

மீண்டும் பள்ளி

புதிய ஆசிரியர்
பழைய தோழர்(ழி)கள்
புது புத்தக வாசனை
மற்றுமொரு வருடம்
வந்து போகும்
மீண்டும்......................






5 comments:

  1. அருமை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை... இனிய நினைவுகள் வந்து சென்றது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.