வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த பா.ஜ.கவின் கட்சி மாநாடு கோவாவில் நடந்தேறியது. கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடிக்கு பெரும் ஆதரவு இருப்பதையே அந்த மாநாடு காட்டியது. கோவா விமான தளத்திலிருந்து மாநாடு நடக்கும் கடற்கரை வரை வைக்கப்பட்ட மோடி கட் அவுட்டுகள் இதை கட்டியம் கூறின.
கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் நெடுநாளைய கனவு பிரதமராவது. ஆனால் அவரது நிராசையாக போய்விட்டது, அவர் வளர்த்த அருண் ஜெயிட்லி அவரை முன்னிறுத்துவதில் தயக்கம் என்று தொடங்கி அத்வானியின் ஆசைக்கு குழிதோண்ட அராம்பித்தனர். கட்சியில் மோடி, அத்வானி, ஜெயிட்லி, சுஷ்மா என்று எல்லோருக்குமே பிரதமர் ஆசை கனவில் இருக்க ஒரு வழியாக கட்சி இப்பொழுது மோடியை தேர்தல் பிரச்சாரக் குழுத்தலைவர் பதவி என்று அறிவித்து அடுத்த பிரதமர் வேட்பாளர் அவர்தான் என்று ஏறக்குறைய அறிவித்து விட்டனர்.
இன்னும் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சிங்கு மட்டும் இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமைக்கு தயக்கம். (அம்மாவிற்கு தெரியாத பிள்ளையின் லட்சணம்). கட்சியில் பிரபலமாக அடிபடும் பெயர் ப. சிதம்பரம்தான். அதற்காகத்தான் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக ஆக்கப்பட்டார். சிதம்பரம் பிரதமர் என்று காங்கிரஸ் முன்னிறுத்தும் என்றால் தமிழக அரசியல் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மூன்றாவது அணியில் முலாயம் சிங்க் யாதவ் பிரதமர் கனவில் இருக்கிறார். இரண்டு பிரதான கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது அணி அமையுமேயானால் முலயம் சிங்கோ அல்லது ஜெ. வோ பிரதமர் வேட்பாளராக வாய்ப்பு உள்ளது. ஆனால் போன முறை யார் பிரதமர் வேட்பாளர்? என்று முதலிலேயே சச்சரவு தொடங்கியதால் வண்டி கிளம்பும் முன்பே தடம் புரண்டது. இந்த முறை மூன்றாம் அணி என்ன ஆகும் என்பது தெரியாது. மூறாவது அணியில் திரினாமுல் காங்கிரஸ் அணியும் வருமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் குறை இருக்காது.
தமிழக இரண்டு பிரதான கட்சிகளும் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சாயும் என்பதை தேசிய அரசியல்கட்சிகள் நன்றாகவே கணித்து வைத்துள்ளனர். மேலும் இது ஒன்றும் நமக்கு தெரியாதது அல்ல. இரண்டு கழகங்களுமே தங்களது நிலைமையையும் ஆதாயத்தையும் முன்னிறுத்தியே செயல்படும்.
தமிகழ்கத்தில் உள்ள மற்றைய சில்லறை கட்சிகள் ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. இரு பிரதான கழகங்களுக்கும் முட்டு கொடுத்து பின்பு எட்டி உதைக்கப்பட்டுவிடும்.
இனி குத்தாட்டம், தப்பாட்டம் எல்லாம் தொடங்கும், நடக்கும் கூத்தை வேடிக்கை பார்ப்போம்.

17 comments:
மானாட்டம், மயிலாட்டம் வச்சாதான் நான் பார்ப்பேன்
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜி.
இங்கே யாருனு பார்ப்போம் . . .
எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
பார்க்கத்தானே போகிறோம்!
சென்னை பித்தன் சார் வருகைக்கு நன்றி.
இப்போ தானே நாடகம் ஆரம்பித்துள்ளது... பார்ப்போம்...
மோடியின் வருகை அத்வானியை வெளியேற்றிவிட்டதே! அங்கேயும் ஒரு குழப்பம் நிலவுகிறது
சுரேஷ் வருகைக்கு நன்றி.
இங்க அவர் தோழி ராஜ்ஜியம் தான்...
ரெ வெரி வருகைக்கு நன்றி.
Congress should be kicked out............
இந்திய அரசியலா....?
நான் பறந்துவிடுகிறேன்......
ஜெயதேவ் வருகைக்கு நன்றி.
அருணா வருகைக்கு நன்றி.
காத்திருந்தே பார்த்துவிடலாம் கும்மாச்சி அண்ணே!
மணி வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.