Pages

Thursday, 6 June 2013

கலக்கல் காக்டெயில்-112

மெய்யப்பன் அப்போ பொய்யப்பன் இல்லையா?

மெய்யப்பனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமனறத்தில் விசாரித்த கூடுதல் மாஜிஸ்ட்ரேட் எம்.என். சலீம் தனது பதினோருபக்க தீர்ப்பில் மெய்யப்பன் ஸ்பாட் பிக்சிங் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தரப்படவில்லை, விசாரணைக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டபோதும் பிராசிக்யூஷன் தரப்பில் எதுவும் நிரூபிக்கப் படவில்லை என்று அவருக்கும் வின்டூவிற்கும் ஜாமீன் அளித்திருக்கிறார். மேலும் மெய்யப்பனுக்கும் எந்த கிரிக்கட் வீரருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கிரிக்கட் சூதாட்டம் குறித்து புகார் எழுந்தவுடன் வடஇந்திய ஊடகங்கள் ஊதி ஊதி பெரிது படுத்தி சீனு மாமா தலைக்கு உலை வைத்தனர். ஆனால் அவரோ விடாமல் நான் தப்பு செய்யவில்லை, தன்னை பதவியிலிருந்து இறக்க ஒரு கூட்டம் அலைகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எது எப்படியோ பணம் அளவுக்கு மீறி புரளும் இடத்தில் முறைகேடுகள் நடந்திருக்க சாத்திய கூறுகள் இருப்பது மக்கள் உறுதியாக நம்பும் விஷயம்.இந்த விசாரனையின் போக்கை பார்க்கும் பொழுது வயலுக்கு இறைத்த நீர் புல்லிற்கும் பாய்வதுபோல் தெரிகிறது. எல்லோருக்கும் நல்ல வேட்டைதான்.

கழுதைக்குத்தான் கழுதை கதை தெரியும் 

ஸ்ரீ ரங்கத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அம்மா கழுதை கதை சொல்லி எதிரிகட்சி தலைவருக்கு மரியாதை செய்தார்.அதற்கு பதிலடியாக எதிரி கட்சி தளபதி "கழுதைக்குத்தான் கழுதை கதை" தெரியும் என்று மதுரையில் பேசுகிறார். இவர்களெல்லாம் நாகரீகம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

நல்ல வருவீங்க போங்க. அப்படியே உங்களது தொண்டர்களையும் நல்லா
தயார் செய்யுறீங்க.


ஆறு மனமே ஆறு 

ஆனந்த விகடன் படம், ஆறாம் இடம் யாருக்கு?

ரசித்த கவிதை

ஓங்கியுயர்ந்த நீரலை கண்டு
சீற்றம் தணிந்த சிற்றலை கேட்டது
வலியிற் பெரியீர்
வேதனை செய்குதீர்
விதியின் செயலால்
விளைந்ததோ இவ்வினை
சிறியதாய் இருப்பதால்
சிதறுகிறேன் அதனால்
பதறுகிறேன் நானும்
சிற்றலை சொன்னது கண்டு
பேரலை ஆர்பரித்து சொன்னது
மதியிலா மூடன் போல் மயங்கினாய்
நகைத்த பேரலை மேலும் சொன்னது
நீயும் நானும் யாதென உணர்ந்திடின்
துன்பம் என்பது எங்கே வந்திடும்
அலையாய் நான் இல்லையென்றால்
நான் யாராய் இருக்கிறேன்
குழம்பிய சிற்றலை ..
கேள்வியை தொடுத்தது
உந்தன் வடிவம் நிலையற்றதொன்று
வேகம் மறைந்தால்
நீயும் நானும் ஒன்று
கடலின் நீரில் விளைந்த நாம்
கடலில் ஒன்றாய் ஆகிப் போவோம்
என்று பேரலை சொன்ன
கருத்தினை கேட்டதும் சிற்றலையின்
கவலை தீர்ந்தது
----------------------------------ஜீவ்ஸ் (ஐயப்பன் கிருஷ்ணன்)

ஜொள்ளு



06/06/2013




16 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. சௌந்தர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ. அப்புரம் அரசியல்ல நாகரீகத்தை பத்தி பேசுறீங்களே இது உங்களுக்கு நாகரீகமா தெரியுதா?

    ReplyDelete
  4. Ellaam nanraga irukkirathu.. padam utpada...

    ReplyDelete
  5. பாவம் அந்த பொண்ணு முழுசா சட்டை பட்டன் போட்ட பின் போட்டோ எடுக்கலாம்ல ???

    ReplyDelete
  6. ராஜி உண்மை அவர்களிடம் நாகரீகம் எதிர்ப்பார்ப்பது நாகரீகமற்ற செயல்.

    ReplyDelete
  7. பி. ஆர் ஜெ வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. ராஜா சார் சட்டை போட்ட பின் எடுத்தால் ஜொள்ளில் வராது.

    ReplyDelete
  9. சுவையான பதிவு! நாகரீகம் என்பதை நம் தலைவர்கள் என்றோ மறந்து விட்டார்கள்! நன்றி!

    ReplyDelete
  10. எஸ்.றா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஜொள்ளு
    கவிதை
    ம்



    நாகரீகம் அப்படின்னா என்னாங்க ?

    ReplyDelete
  13. ///என் ராஜபாட்டை : ராஜா said...

    பாவம் அந்த பொண்ணு முழுசா சட்டை பட்டன் போட்ட பின் போட்டோ எடுக்கலாம்ல ???

    கும்மாச்சி said...

    ராஜா சார் சட்டை போட்ட பின் எடுத்தால் ஜொள்ளில் வராது.///

    இது மாதிரி படத்தை எடுத்தவருக்கு என் கண்டனங்கள்.

    ஆம். படத்தை நன்றாக மறுமுறை பாருங்கள். பாப்பா என்ன செய்கிறார் என்று? மேல் பட்டனை அவிழக்க முயலும் போது எடுத்த படம்...

    ஆக்கப் போருதவ்னுக்கு ஆறப் பொருக்கவில்லை..!
    படத்தின் கலை அம்சமே அந்த ஒரு பட்டன்; இரு விரல்கள். ஒரு தமிழ் சினிமா தலைப்பு மாதிரி இல்லை!

    இலை மறைவு காய் மறைவு என்பது இது தானோ? தம்பிகளா! நான் பழமொழியை சொன்னேன்பா...!

    ReplyDelete
  14. நம்பள்கி நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.