டில்லியில் ஆத்தா........
அம்மாவின் டில்லி பயணம் நிறைய செய்திகளை கொடுத்திருக்கிறது. திட்டக்குழுத்தலைவர் ஆலுவாலியாவை சந்தித்து அடுத்த ஆண்டுக்கான நிதியை கேட்டதைவிட அதிகமாகவே பெற்று வந்திருக்கிறார். தான் முப்பத்தி எழாயிறம் கோடி கேட்டதாகவும் தமிழகத்திற்கு நூற்றி இருபதெட்டு கோடி அதிகமாகவே கிடைத்ததாகவும் அம்மாவே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். 2011 ல் பதவிக்கு வந்தவுடன் இதே போலதான் செய்தார். அவர் டில்லியிலிருந்து திரும்பும் பொழுது விமானநிலையம் தொடங்கி தோட்டம் வரை "மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதிக நிதி பெற்ற அம்மாவே" என்று பேனர் வைத்தனர் ரத்தத்தின் ரத்தத்தங்கள். இருந்தாலும் அம்மா வழக்கம்போல் மத்திய அரசு நிதி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுகிறது என்று சட்டசபையில் கொக்கரிப்பார், கண்மணிகள் பெஞ்சு தட்டுவார்கள்.
இதெல்லாம் வருடா வருடம் நடக்கும் கூத்துக்கள்தான். இருந்தாலும் இந்த முறை அம்மா டில்லியில் வைத்தே ஐந்து ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்து இத்துணை நாள் சொம்படித்த பாண்டியனுக்கு உய்யலாலா பாடிவிட்டார். அறிவித்த ஒரு நபரை மாற்றியகதை வேறு. வா. மைத்ரேயன் தவிர மற்றவர்கள் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.
அம்மா எதிர்பாராம என்ன செய்வாங்க.
கேப்டன் வேட்டி துவைப்பாரா? இல்லை புடவையா?
மருத்துவர் ஐயாவை கிண்டலடித்த கேப்டன் அதே நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தமிழக அரசியல் நிலைமைய காட்டுகிறது. இரண்டு பிரதான கட்சிகளுமே ஒருவரை ஒருவர் மயிரிழையில் முந்த காங்கிரசோ, இல்லை மற்ற கட்சிகளையோ நாட வேண்டிய அவசியம். அவர்களை வைத்து மெஜாரிட்டி பெற்றவுடன் பின்னர் கண்டுக்காமல் இருப்பார்கள் ரொம்ப தொகிறினால் கழட்டி விட்டு விடுவார்கள். அதுவும் அ.தி.மு.க வுடன் கூட்டு என்றால் எட்டி உதைக்கப்படுவது நிச்சயம். அம்மாவை எதிர்த்தால் இருக்கிற எம்.எல். ஏக்களை வளைத்து கட்சியை உடைத்து அண்ட்ராயர் வரை உருவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
கேடனுக்கு தற்பொழுது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கேப்டன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்டியுடன் கூட்டணியா இல்லை வழக்கப்படி கடவுளிடமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
ரசித்த கவிதை
நூலிழைகள்
12/06/2013

கழட்டிய உடைகளின் மேல்
நிர்வாணமாய் மிதந்தேன்..
நைந்த உடையை
உருவிச் சென்றார்கள்,
நீரில் துவைப்பதற்கு,
பின் நெருப்பில் எரிப்பதற்கு.
மூன்றுநாள் நீரிலும்
மூன்றுநாள் மண்ணிலும்
மூன்றுநாள் விண்ணிலும்
உலாத்தினேன்.
தலைப்பிரட்டையாய்..
இன்னொரு உடலில்
நூலிழையாய்ப் புக.
ஜொள்ளு 12/06/2013
9 comments:
பெட்டியை பொறுத்து கூட்டணி மாறும்...
கவிதை அருமை...
உண்மை தனபாலன். வருகைக்கு நன்றி.
கவிதை சிறப்பு! எப்பவும் அம்மா அடிக்கற கூத்தை அழகா சொன்னீங்க! பாவம் விஜய காந்த்!
மிகவும் ஆழமான கருத்துடையக் கவிதையை இரசித்தேன்.
பகிர்விற்கு நன்றி கும்மாச்சி அண்ணா.
அரசியல்... ஹா..ஹா..
நல்ல கவிதை அறிமுகம்.
போனால் போகட்டும் போடா ஆஆஆஆஆஆ
கட்சியில் நிலையாய் இருப்பவன் யாரடா?
விஜயகாந்தின் தற்போதைய பாடல்
புளிசாதத்துக்கு வெண்டைக்காய் பொறியல் நல்லா இருக்காதா?
ம் ...
கட்டுரை கவிதை கீச்சுகீச்சு ஜொள்ளு படம் எல்லாம் சரியாக கலந்துள்ளன.... வாழ்த்துகள்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.