சொரனையா? பதவியா?
அரசியலில் பதவி என்றவுடன் சுயமரியாதை, சொரணை போன்றவைகளெல்லாம் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு உதாரணம் தற்போது நடக்கும் ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் களம். அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஐந்து இடங்கள், அதில் நான்கு அ.இ.அ.தி.மு.கவிற்கும் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி என்று சுமூகமாக பிரித்துக்கொண்டு விட்டன, ஏறக்குறைய அவர்களது வெற்றியும் போட்டி இல்லாமலே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இப்பொழுது ஆறாவது இடத்திற்குத்தான் தி.மு.க. வும் தே.மு.தி.க.வும் போட்டியிடுகின்றன. தன்னுடைய மகளுக்கு அந்த பதவி கிடைக்கவேண்டும் என்று சுயமரியாதை சிங்கம் இன்று காங்கிரஸ், பா.ம.க என்று எல்லோர் கால்களிலும் விழுந்து கொண்டிருக்கிறது.
சொரனையா, பதவியா என்றால், அண்ணா, பெரியார் வழி வந்த தலைவர் சொல்லுவது
சொரணை அரனை எல்லாம்
இந்த கருணா முன் நின்று
கரணமிட்டாலும்
கனியின் பதவியின்முன்
அவை மரணம் நோக்கி ஓடும்.............
ஜொள்ளு
20/06/2013
அரசியலில் பதவி என்றவுடன் சுயமரியாதை, சொரணை போன்றவைகளெல்லாம் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு உதாரணம் தற்போது நடக்கும் ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் களம். அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஐந்து இடங்கள், அதில் நான்கு அ.இ.அ.தி.மு.கவிற்கும் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி என்று சுமூகமாக பிரித்துக்கொண்டு விட்டன, ஏறக்குறைய அவர்களது வெற்றியும் போட்டி இல்லாமலே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இப்பொழுது ஆறாவது இடத்திற்குத்தான் தி.மு.க. வும் தே.மு.தி.க.வும் போட்டியிடுகின்றன. தன்னுடைய மகளுக்கு அந்த பதவி கிடைக்கவேண்டும் என்று சுயமரியாதை சிங்கம் இன்று காங்கிரஸ், பா.ம.க என்று எல்லோர் கால்களிலும் விழுந்து கொண்டிருக்கிறது.
சொரனையா, பதவியா என்றால், அண்ணா, பெரியார் வழி வந்த தலைவர் சொல்லுவது
சொரணை அரனை எல்லாம்
இந்த கருணா முன் நின்று
கரணமிட்டாலும்
கனியின் பதவியின்முன்
அவை மரணம் நோக்கி ஓடும்.............
வெள்ளம்
உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம்
ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த சில
நாட்களாக கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது. இது பருவமழையின் போது பெய்யும் மழையை விட மூன்று மடங்கு
அதிகமாகும். இந்த மழை வெள்ளத்தால் ஏராளமான பகுதிகள் மூழ்கியுள்ளன ஆங்காங்கு
நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு
ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73
கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இது செய்தி. இதில் சோகம் என்னவென்றால் இது ஆரம்பம்தான், போன வருடம் பருவ மழை பொய்த்துவிட்டது. இந்த வருடம் தேவைக்கு அதிகமாகவே பெய்யும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் பொழுதும் தென் மாநிலங்களில் இதே போன்ற நிலைமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வரும் முன் காப்பவன்தான் அறிவாளி. நமது அரசாங்கம் தேவையான நடவடிக்கைகள் எடுத்து தயார் படுத்திக்கொள்ளுமா என்று பார்க்கவேண்டும்.
மழையும் பணமும் ஒன்று, ஓரிடத்தில் இல்லையென்றால் மற்றுமொரு இடத்தில் சற்று அதிகமாகவே இருக்கும்.
ரசித்த கவிதை
தாயம்
களத்திலிறங்கிய காய்
பழமாகவில்லையாம்..
விரும்பிய எண் வரவில்லையென
சபிக்கிறார் பகடைக்காய்களை,
உருட்டியதே தான்தானென்பதை
மறந்து விட்டு.
கிடைத்த புதையல்
ஆணாக இல்லையாம்..
பிறந்தது பெண்ணென்று
வெறுக்கிறார்
பெற்றதே தான்தானென்பதை
வசதியாய் மறந்து விட்டு.
சபிக்கப்பட்டவர்களாய்
ஒதுங்கிக்கிடந்த காயும்
ஒதுக்கப்பட்ட பெண்ணும்
கிடைத்த துரும்பையூன்றி நகர,
தாயப்பகடையுருட்டி
சிம்மாசனத்தில் அமர்த்தியது காலம்..
உரிமை கொண்டாடி மார்தட்டிக்கொண்டும்
சாமரம் வீசிக்கொண்டும்
காலடியில்
விழுந்து கிடக்கும்
பச்சோந்திகளைத்தாண்டிச் செல்கின்றன
மேலும் சில காய்கள்,
காலம் மட்டும்
இன்னும் அதே நேர்ப்பார்வையில்..
பழமாகவில்லையாம்..
விரும்பிய எண் வரவில்லையென
சபிக்கிறார் பகடைக்காய்களை,
உருட்டியதே தான்தானென்பதை
மறந்து விட்டு.
கிடைத்த புதையல்
ஆணாக இல்லையாம்..
பிறந்தது பெண்ணென்று
வெறுக்கிறார்
பெற்றதே தான்தானென்பதை
வசதியாய் மறந்து விட்டு.
சபிக்கப்பட்டவர்களாய்
ஒதுங்கிக்கிடந்த காயும்
ஒதுக்கப்பட்ட பெண்ணும்
கிடைத்த துரும்பையூன்றி நகர,
தாயப்பகடையுருட்டி
சிம்மாசனத்தில் அமர்த்தியது காலம்..
உரிமை கொண்டாடி மார்தட்டிக்கொண்டும்
சாமரம் வீசிக்கொண்டும்
காலடியில்
விழுந்து கிடக்கும்
பச்சோந்திகளைத்தாண்டிச் செல்கின்றன
மேலும் சில காய்கள்,
காலம் மட்டும்
இன்னும் அதே நேர்ப்பார்வையில்..
-----------------------------------------நன்றி அமைதிச் சாரல்
ஜொள்ளு
11 comments:
தாயம் மனதை பிசைந்தப்படி ரசிக்க வைத்தது சகோ! பகிர்வுக்கு நன்றி
ராஜி வருகைக்கு நன்றி.
தாயம் அருமை...
சொரணை அரனை எல்லாம்
இந்த கருணா முன் நின்று
கரணமிட்டாலும்
கனியின் பதவியின்முன்
அவை மரணம் நோக்கி ஓடும்...........//அதேதான் ...
ரசித்த கவிதை// அருமை.
ஜொள்ளு // ஹி ஹி ஹி........
தாயம் கவிதை சிந்திக்க வைத்தது! கருணாவின் கவிதை சிரிக்க வைத்தது! கலக்கல் பதிவு! வாழ்த்துக்கள்!
யாரு இந்த பாப்பா
1. அரசியல்ல இதெல்லாம சகஜமப்பா...
2. மழை அதிகம் தான். இங்கே பிரான்சில் நேற்று,
உலகத்திலேயே இரண்டாவது வருமானம் வரும் கோவிலான “லுர்ர்து“ மாதாக் கோவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் அதிக பொருட் சேதம் கொண்டுள்ளது. இதனால் டூரிஸ்டுகள் வருவதை அரசாங்கம் தடுத்துள்ளது.
3. கவிதை அருமை. தாயக்கட்டையும் ஆணையும்,
காய்களையும் பெண்ணையும் வைத்துப் பின்னப்பட்ட கருத்து அருமை.
பதிவு அருமை கும்மாச்சி அண்ணா.
அமைதிச் சாரல் கவிதையை விட சொரணைக் கவிதை சுகமாக உள்ளது....
கவிதை அருமை ஜொள்ளோட பேரை போட்டால் நாங்களும் தெரிந்துகொள்ளலாமே
கவிதை அருமை ஜொள்ளோட பேரை போட்டால் நாங்களும் தெரிந்துகொள்ளலாமே
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.