Sunday, 7 July 2013

காதல், அரசியல் மற்றும் கொலை

சமீபகாலமாக ஊடகங்களையும், இணையதளங்களையும் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொற்கள் (அ) பெயர்கள் இளவரசன், திவ்யா, தருமபுரி, காதல் மற்றும் தற்கொலையா? (அ) கொலையா? போன்றவைகளே.

வெள்ளிக்கிழமை டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை இதழின் முதல் இரண்டு பக்கங்கள் இளவரசன் மரணம் பற்றியதே. இளவரசன் திவ்யா காதல் விவகாரம் அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, ரேஞ்சுக்கு இன்று அல்லோலகல்லோல படுவதற்கான காரணம் அதன் காவிய தன்மைக்காக அல்ல. நம்மூரு ஒட்டு பொறுக்கிகளின் திருவிளையாடல்களே. ஜாதிகள் இல்லை என்று ஒட்டு பொறுக்கி  கட்சிகள் கூவிக்கொண்டே ஜாதி அரசியலை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

இளவரசன் திவ்யா காதல் விவகாரம் தொடங்கி அவர்கள் ஓடிப்போன  நாள் முதல் இதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டது. இதன் விளைவாக கலவரம், வீடுகள் எரிப்பு, பொருட்சேதம் மற்றும் இப்பொழுது உயிர் சேதம் வரை போய்விட்டது.  முதலில் திவ்யாவின் தந்தை, தற்பொழுது இளவரசன். இரண்டு கட்சி தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஜாதியை வைத்து அவர்களின் அறியாமையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு ஜாதி பார்க்கும் இவர்கள் தங்களது சந்ததிகளுக்காக ஜாதியை மறக்கிறார்கள். 

இந்த உலகில் எத்துணையோ திவ்யாக்களும் இளவரசன்களும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை தகுந்த காதலா? தகாத காதலா? ஓடிப்போன காதலா? என்பதை நிர்ணயிக்கும் உரிமை அவர்களை பெற்றவர்களுக்கு உள்ளது. அவற்றை ஒட்டிவிடவோ அல்லது வெட்டிவிடவோ செய்வது அவர்களது கடமை. அப்படி அவர்கள் செய்யத்தவறினால் அவர்கள் தங்களது அடுத்த சந்ததியை நெறிமுறைப்படுத்தும்  கடமையிலிருந்து தவறுகிறார்கள்.

இதில் அரசியல் கட்சிகள் புகுந்து கும்மியடிக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் நீதித்துறையும் சரியான போக்கை கடைபிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.

இந்த ஜாதி அரசியல் ஒழியும் நாள் அதிக தூரத்தில் இல்லை.


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் இந்தக் கொடுமை தீரும்... தீரட்டும்...

”தளிர் சுரேஷ்” said...

சரியா நச்சுன்னு சொன்னீங்க! இந்த ஓட்டு பொறுக்கிங்க தொல்லை தாங்கத்தான் முடியலை!

கும்மாச்சி said...

தனபாலன், சுரேஷ் வருகைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

சரியான சாடல் ...

அருணா செல்வம் said...

“ஜாதிகள் இல்லை என்று ஒட்டு பொறுக்கி கட்சிகள் கூவிக்கொண்டே ஜாதி அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.“

சரியாக சொன்னீர்கள் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜெயராமன்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.