வலை கீச்சுதே-------ரசித்த கீச்சுகள்
மதுரய சுத்துன கழுத வேறெங்கியும்
போகாதாம்! சொலவடைசொல்லுவாங்க! #ட்வீட்டரை சுத்துனாலும் அப்பிடித்தான்!!-----வேடன்
சிங்கம் 3 எடுக்க சொல்லி ரசிகர்கள் தொல்லை #பல பஞ்சாயத்துக்கள் விரும்பியே பால்டாயில் குடிக்கிறாங்க------------தில்லுதொர
பால் பொங்கறப்ப, சாம்பார் கொதிக்கிறப்போ, தோசை கருகறப்போ
நிறுத்த ஒரு ரிமோட் கண்டுபிடிக்காம செவ்வாய் கிரகத்துல என்னய்யா ஆராய்ச்சி?----ஆல்தோட்டபூபதி
தந்தி சேவை நிறுத்தம் #அப்படியே பத்தாவது இங்க்லீஷ் செகன்ட் பேப்பர்ல தந்தி அடிக்க சொல்லி
கேள்வி கேட்பீங்களே அதையும் நிறுத்துங்க----ஜூனியர் ஒல்ட்மாங்க்
முதியோர் இல்லத்தையும் அனாத
இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.பாட்டி தாத்தாவும் பேரக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்.---------விதை
சாக்கடை, சேறு,பன்னாடை, பரதேசி,மொள்ளைமாரி,முடிச்சி அவுக்கி,எல்லா கன்றாவிகளும் சேர்ந்து பந்த் நடத்துது இது எங்கே போய் முடியுமோ—பசி
தமிழக பாஜக பவர் ஸ்டார்
மாதிரி...தானொரு காமெடி பீஸ்னு தெரியாமலே வாழ்ந்திட்டிருக்காங்க #தமிழகம்தழுவியபந்த்------------------------திரு
பயந்தவன் சொல்வான் "அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்டா " துணிந்தவன் சொல்வான் "என் மச்சான் போலீஸ்டா#ரசிச்சது--------------அட்டகத்தி
ஆடி பொறந்தாச்சா? வெள்ளிக்கிழமை, அமாவாசை எல்லாம் ஜாக்கிரதையா
இருங்கப்பா! அம்மன், கூழ், ஸ்பீக்கர், பூசணிக்காய்!------------கலக்கல் கபாலி
கூடங்குளத்தில் இன்னும் இருபது நாளில்
மின் உற்பத்தி -நாராயணசாமி #சீரான வளர்ச்சில இருக்குன்னு இப்பவாவது
நம்புங்கய்யா..------மார்க் நல்லவன்
நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நான்
எதையுமே ரெண்டாவது வாட்டி சொல்ல மாட்டேன்.. #மேனேஜர் ராக்ஸ்-------------வம்புக்கு
ஊரில் வேலை வெட்டி இல்லாதவர்களுக்காகவே, வாரநாட்களில் சன்டீவியில் படம் போடுகிறார்கள்! #அவதானிப்ஸ்!---வந்தியத்தேவன்
3 comments:
நல்லா இருக்கு சார்
விதை கீச்சு சிந்திக்க வைத்தது...
ஹா ஹா ஹா ஹா சூப்பரு....!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.