Thursday, 25 July 2013

முல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் புதிய அணை கட்டும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது. தொடக்கத்திலேயே தமிழக அரசு வழக்கறிஞர்களை காய்ச்ச ஆரம்பித்தது. முல்லை பெரியாறு ஆற்றின் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தின் நகல்கள் யாவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை என்று முதல் ஆப்பு வைக்கப்பட்டது.

மேலும்1886 ம்ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இந்திய அரசுக்கும்தானே ஒப்பந்தம் இதில் தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தரவில்லை. (தமிழ்நாடு,  கொடநாடு எங்கே இருக்குன்னு கண்பீஸ் ஆயிருப்பாங்களோ? தமிழ்நாடு இந்தியால தானேபா கீது).

பின்னர் இதற்கு பதிலாக 1935ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிக்கப்பட்டது. ஆனால் கேரளா தரப்பிலோ அணை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்து போகக்கூடிய சாத்தியம் உண்டு, ஆதலால் மற்றுமொரு தடுப்பணை கட்டவேண்டிய நிர்ப்பந்தம் கேரளா அரசிற்கு இருக்கிறது என்று வாதிடப்பட்டது. மேலும் இதே காரணத்திற்க்காக முல்லை பெரியாறு அணையின் உயரத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ( நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தினால் தான் புவியீர்ப்பு விசையிலும் நீரின் அழுத்தத்திலும் பாதாள கால்வாய் வழியாக நமக்கு உரிய நீர் பாயும்).

இரண்டாவது நாள் விசாரணையின் போதும் தமிழக அரசு நினைத்தால் தமிழக அரசுக்கு முல்லை பெரியாரில் உரிமையுண்டு என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும் ஆனால் ஏன் தமிழக அரசு அப்படி செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் 1935ஆம் ஆண்டு சட்டப்படி இந்த உரிமையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தானாகவே வந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 1858, 1915,1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது அரசாங்க வழக்கறிஞர்களின் திறமையில் சந்தேகம் வருகிறது. அரசியல்வாதிகள் தங்களின் சொந்த வழக்குகளுக்கு நல்ல திறமையான வழக்கறிஞர்களை தங்கள் சார்பில் வாதாட நியமித்துக்கொள்கின்றனர்.

ஆனால் பொது பிரச்சினைகளுக்கு டுபாக்கூர் தேங்காய் மூடிகள்தான்கிடைப்பார்கள் போலும். 
 
எங்கும் எதிலும் அரசியல்.................போங்கப்பு...............ஹூம்...........மிடில

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

சரியாக சொன்னீர்கள்! திறமையான வழக்கறிஞர்கள் வீணடிக்கப்பட்டு கட்சி வழக்கறிஞர்கள் தானே பதவிக்கு வருகின்றனர்! பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

தமிழக அரசுகளின் அக்கறையின்மை தான் முல்லைப் பெரியாறு அணை விவகார இழுபறிகளுக்கு முக்கியக் காரணம்..

திண்டுக்கல் தனபாலன் said...

ஏதோ நினைத்தேன்... வேண்டாம்...!

Jayadev Das said...

மற்ற மாநில வழக்கறிஞர்கள் அவங்க மாநில நலனுக்காக வாதிடறாங்க. நாம் மட்டும் நாதியற்றுப் போயிட்டோம்.

MANO நாஞ்சில் மனோ said...

தமிழனின் ஒற்றுமையும் தான் தோன்றித் தனமும் வாழ்க வளர்க கொய்யால...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.