காலையரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை இருளில் மரமிடுக்கில் மயங்கும்
வேலை இல்லா இளம்வயதில் தானாக
சோலை மரம் போல் தனித்தியங்கும்
காதலெனும் கலவிக்கான தொடக்கம்
ஜாதி மதம் பேதமில்லை என்று
வேதங்கள் உரைத்தாலும்
ஆதாயம் தேடும் அரசியலில்
போதிமர தலைவர்களின்
போர்குணத்தில் பொசுங்கிவிடும்
காதலினால் நற்கலவியுண்டாம்
ஜாதி அரசியலும் உண்டாம்
ஒட்டு வங்கி வேட்டையுமுண்டாம்
ஆதலினால் காதல் செய்யும்
இவ்வுலகத்தீரே
பேதமைகள் உணர்ந்து
ஜாதி மதம் அறிந்து
உனக்கும் எனக்கும் ஒரே ஜாதி
நீயும் நானும் ஒரே கட்சி
ஆதலினால் செம்புலப் பெயல் நீர்
போல அன்புடைய நம்நெஞ்சம்
ஒன்று கலக்க ஒன்றியம், வட்டம்
மாவட்டம் சூழ வலம் வந்து
தானை தலைவரின் தாள் பணிந்து
காதல் செய்வோம்.........................
(இளவரசன்களுக்கும் திவ்யாக்களுக்கும் சமர்ப்பணம்)
மாலை இருளில் மரமிடுக்கில் மயங்கும்
வேலை இல்லா இளம்வயதில் தானாக
சோலை மரம் போல் தனித்தியங்கும்
காதலெனும் கலவிக்கான தொடக்கம்
ஜாதி மதம் பேதமில்லை என்று
வேதங்கள் உரைத்தாலும்
ஆதாயம் தேடும் அரசியலில்
போதிமர தலைவர்களின்
போர்குணத்தில் பொசுங்கிவிடும்
காதலினால் நற்கலவியுண்டாம்
ஜாதி அரசியலும் உண்டாம்
ஒட்டு வங்கி வேட்டையுமுண்டாம்
ஆதலினால் காதல் செய்யும்
இவ்வுலகத்தீரே
பேதமைகள் உணர்ந்து
ஜாதி மதம் அறிந்து
உனக்கும் எனக்கும் ஒரே ஜாதி
நீயும் நானும் ஒரே கட்சி
ஆதலினால் செம்புலப் பெயல் நீர்
போல அன்புடைய நம்நெஞ்சம்
ஒன்று கலக்க ஒன்றியம், வட்டம்
மாவட்டம் சூழ வலம் வந்து
தானை தலைவரின் தாள் பணிந்து
காதல் செய்வோம்.........................
(இளவரசன்களுக்கும் திவ்யாக்களுக்கும் சமர்ப்பணம்)
6 comments:
இந்த அட்வைஸ் நல்லா இருக்கே!
ராஜி வருகைக்கு நன்றி.
நாட்டு நடப்பில் எப்படியெல்லாம்
எழுத வேண்டியுள்ளது...!!
வருகைக்கு நன்றி அருணா.
நாட்டு நடப்பை பார்க்கும்போது எப்பிடியெல்லாம் கவிதை எழுத வேண்டி வருது பாருங்க...!
புதிய கவிதை சூப்பர்! அதை சமர்ப்பணம் செய்து கலக்கிவிட்டீர்கள்! நன்றி!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.