கூடங்குளம்.......சொல்வது என்ன?
மத்திய அமைச்சர் நாராயணசாமி எப்பொழுது சென்னை வந்தாலும் விமானநிலையத்தில் நிருபர்கள் அவரிடம் தவறாமல் கேட்கும் கேள்வி "கூடங்குளம் மின் நிலையம் எப்பொழுது தொடங்கப்படும்?". அவரும் சளைக்காமல் இன்னும் பதினைந்து நாட்கள் என்று அதே பல்லவியை சொல்லி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓட்டிவிட்டார். இந்த முறையும் இரண்டு நாட்களுக்கு முன்பே இதையே சொன்னார்.
சமீபத்திய செய்தி, கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் மின் உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டு உலை இயங்க ஆரம்பித்திருப்பதாக இந்திய அணுசக்தி ஆணையத்தலைவர் ஆர். சின்ஹா தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டது. போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கு முறையான பதில்களை வழங்கி இருக்கலாம். குறைந்த பட்சம் அணு மினுலையில் ஆபத்து ஏற்படும் பொழுது அங்குள்ள மக்களை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பதை "மாதிரி நடவடிக்கை (Mockdrill)" செய்துகாட்டி மக்களின் மத்தியில் உள்ள பயத்தை போக்கியிருக்கலாம். அவை யாவும் செய்யாமல் தன்னுடைய மக்கள் விரோதப்போக்கை பறை சாற்றியிருக்கிறது. ஓட்டு பயத்தில் மாநில அரசும் எதிர் கட்சிகளும் மௌனம் காக்கின்றன.
வாழ்க ஜனநாயகம்.
தந்திக்கு இன்று கடைசி நாள்
இந்திய தபால்துறை நடத்தி வந்த தந்தி சேவைக்கு இன்றுடன் மங்களம் பாடப்படுகிறது. கிட்டத்தட்ட நூற்றி அறுபது ஆண்டுகள் தந்தி சேவையை வழங்கிக்கொண்டிருந்தது. வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பழைய மோர்ஸ் கோடு தந்தி முறை அவசியமில்லாததுதான். இருந்தாலும் "தந்தி" நம்மிடம் விட்டுசெல்லும் நினைவுகள் மறக்க முடியாதவை.
இன்று கடைசி தந்தி அனுப்புபவரை படம் பிடித்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மோடிக்கு நாக்குல சனி
மோடி ராயட்டர்சுக்கு பேட்டி கொடுக்கும்பொழுது அவர்கள் கேட்ட 2002 ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் உயிரழப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, காரில் செல்லும்பொழுது ஒரு நாயடிபட்டால் என்ன மனநிலையில் இருப்போமோ? அதே மன நிலையில்தான் நான் இருக்கிறேன் என்று சொல்லி புதிய சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்.
பாஸ் நீங்க இன்னும் வளரனும் பாஸ்.
ரசித்த கவிதை
விழி திறக்க வாசலே வழிவிடு
கருணை உள்ளம் கொண்டவர்கள்
மனம் கலைந்து போக காரணம் ,
மானம் இல்லா அரசியல் வாழ்வு
மட்டற்ற ஊழல் புகார்
மக்களும் திருந்தாத ஜென்மங்கள்
ஆகி விட்டனர் ...
மலைவளம் குன்றி நகர் வளம்
பெருகும் போது ,
மழை நீர் வற்றி வரப்பு குன்றி
வாழ்க்கை நிலை வறண்டு
போய்விடும் ...
வாய்ப்புகள் எல்லாம் வாசலை
அடைத்துவிடும்
----------------------------------கவிஞர் பெயர் தெரியவில்லை
ஜொள்ளு

15 comments:
தகவல்களுடன், சரியான வரிகளை சொன்ன கவிஞருக்கும் வாழ்த்துக்கள்...
அருமை
தனபாலன், சௌந்தர் வருகைக்கு நன்றி.
கலக்கல்
சக்கரகட்டி வருகைக்கு நன்றி.
கூடங்குளம்.... மக்கள் மனங்களில் பயம்தான்.
தந்தியும்....... போனானே.
விழிதிறக்கும் கவிதை...... அருமை.
மோடியை குறித்து சரியாக சொன்னீர்கள்! கவிதை அருமை! நல்ல பகிர்வு! நன்றி!
மாதேவி வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி சுரேஷ்.
A writ petition is filed to keep the telegraph service continuing....
ஜெயராஜன் தகவலுக்கு நன்றி.
அணு உலை பக்கத்துலேயே நாராயணனுக்கு ஒரு வீடு கட்டி குடுங்கப்பா...!
ஜொள்ளு - ஹி ஹி....
மனோ வருகைக்கு நன்றி.
அமைச்சர் எப்படியோ இம்புட்டு நாளா சமாளிச்சாரே... பெரிய வேலை தான் அவருக்கு...
காக்டெயில் சுவை...
ஆமாம், தங்கள் வரவிற்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.