Pages

Tuesday, 23 July 2013

கலக்கல் காக்டெயில்-117

காவிரி பாட்டிக்கு பாராட்டு

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

ரத்தத்தின் ரத்தங்கள் பாட்டிக்கு புகழ்மாலை போஸ்டர்கள் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

காவிரித்தாயே, பாரதத்தின் எதிர்காலமே என்று இனி பத்தடிக்கு ஒரு போஸ்டரை தமிழகத்தில் காணலாம்.

கர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் காவிரி நதியில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன, ஆதலால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையே அணையின் நீர்மட்டம் குறையும் போதுதான் நமக்கு திறந்துவிட மறுக்கப்படுகிறது.

ஒரு வழியாக மேட்டூர் ஆணை குறைந்த பட்ச உயரமான எழுபது அடியை எட்டி உள்ளது. இந்த வருடம் ஒரு போகத்திற்கு பிரச்சினை இருக்காது என்று நம்புவோம்.

இது வருடா வருடம் நடக்கும் கூத்து.

 தாத்தா அறிக்கைகள்

சிறிது நாட்களாகவே தாத்தா அறிக்கைகள் விட்டு மெல்ல அலைக்கற்றை, குடும்ப விவகாரங்கள் போன்ற செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.

கட்சத்தீவும் கச்சடா கேள்விகளும், என்று பாட்டியும் தாத்தாவும் அறிக்கைப்போர்கள் நடத்தி ஊடகங்களுக்கு தீனி போட்டார்கள். தற்பொழுது என்.எல்.சி பங்குகள் விவகாரத்தில் காகிதப்போர்.

ஆகமொத்தம் இருகட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.

இனி கூட்டணி, என்று மக்களுக்கு அல்வாசேவை தொடங்கிவிடும்.

சட்டக்கமிஷனின் முடிவு - அப்படிப்போடு

ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள மத்திய, மாநில அரசுகள், தங்களது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து சட்டக் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இது ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்பவர்கள் ஆட்சி முடிவடையும் தருவாயில் தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்வார்கள். நாடு ஒளிர்கிறது என்றும், தங்களுடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்றும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் வீணாவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சட்டக்கமிஷன். சட்டக்கமிஷனின் இந்த திடீர் முடிவு காரணமாக காங்கிரஸ் கட்சிதான்அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது.

அப்படிப்போடு!!!!!!!!!!!!

ரசித்த கவிதை 

படைப்பாளியும் கடவுளும் 


வார்த்தைகள்
படைப்புகளாக மலர்ந்து
படைப்பாளியை பின் தள்ளியது.
வேண்டுதல்கள்
வரங்களாக இறங்கி
கடவுளை பின் தள்ளியது.
ஆயினும் -
தன்னை பின் நிறுத்திய
வார்த்தைகளுக்காகவும்
வேண்டுதல்களுக்காகவும்
யுகங்கள் தோறும்
காத்திருக்கின்றான்…..
படைப்பாளியும்
கடவுளும்!
---------------------------சரபோஜி

ஜொள்ளு

 

12 comments:

  1. சௌந்தர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. காக்டெயில் கலக்கல்...

    ReplyDelete
  3. சங்கவி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. சட்டகமிஷன் சரியான போடு போட்டிருக்கிறது! இனியாவது இந்த விரயங்கள் குறைந்தால் நன்றுதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. காவிரி பாட்டிக்கு பாராட்டு தான் நச்ச்ச்ச்.

    ReplyDelete
  6. ஆதலால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. \\ அடுத்த மாதத்திர்க்கே அவர்கள் கியாரண்டி தரவில்லை. இதற்கும் மேல் தேக்க முடியாது என்னும் நீரைத்தான் அவர்கள் திறந்து விடுகிறார்கள். இதுதான் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். மையத்தில் ஆட்சியில் இல்லாத ஊதாரி கட்சிகளுக்கு ஒட்டு போட்டால் இதே கதி தான்.

    \\ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது. \\ இவனுங்க அப்பன் வீட்டு காசு போல செலவு பண்ணுவானுங்க........

    ஜொள்ளு\\ செத்தாண்ட சேகரு..........


    ReplyDelete
  7. \\ஜொள்ளு\\ செத்தாண்ட சேகரு..........//

    சூப்பரப்பு.

    ReplyDelete
  8. தாத்தா எப்போ போவார் திண்ணை எப்போ காலியாகும்னே கொஞ்சபேர் தவிச்சுட்டு இருக்காங்க, அய்யாதான் போனபாடில்லை....

    இவங்க அரசியல்ல மண்ணை அள்ளி போடுங்கய்யா கொய்யால.

    ReplyDelete
  9. மனோ வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.