Pages

Tuesday, 30 July 2013

கலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)

மூ(பீ)த்த பதிவர்

பதிவுலம் வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐநூற்றி தொண்ணூற்றி ஒன்பது பதிவுகள் போட்டாகிவிட்டது. இன்னும் பிரபல ச்சீ........ ப்ராப்ள பதிவராக முடியவில்லை. அதற்குரிய வரைமுறைகள் இன்னும் பிடி படவில்லை. ப்ராப்ள பதிவராவது பற்றி எத்துணையோ பதிவர்கள் யோசனைகள் சொன்னாலும் அந்த இடம் மட்டும் (ஆமாம் பெரிய சூப்பர் ஸ்டாரு!) இன்னும் தகைய மாட்டேன் என்கிறது. ஆனால் வலைச்சரத்தில் வரும் ஆசிரியர்கள் ஒன்றிரண்டு பேர் என்னை மூத்த பதிவராக்கிவிட்டார்கள். அது வரை இந்த பீத்த பதிவருக்கு மகிழ்ச்சியே.

எது எப்படி இருந்தாலும் இந்த மொக்கை தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இதோ அறுநூறாவது பதிவு.

கருத்து கணிப்பு 

எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலுக்கு கட்டியம் கூற கருத்து கணிப்புகள் வர ஆரம்பித்து விட்டன. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எப்படியும் போனமுறை கிடைத்ததை விட அதிகம் கிடைக்கும் என்றே எல்லா கணிப்புகளும் கூறுகின்றன.

எந்த கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை வைத்துதான் மத்தியில் உள்ள கட்சிகளுடன் பேரம் பேச வசதியாக இருக்கும். காங்கிரசும், பி.ஜே.பி. யும் எப்படியும் தமிழக கட்சிகள் பேரத்திற்கு பணிந்துவிடும், அதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றன.

கால ஓட்டத்தில் தமிழகம் கண்ட ஒரே பெருமை இது தான்.

ஒத்தரூவா ஃபுல் மீல்ஸ்

முப்பத்திமூனு ரூபா இருந்தா போதும் நகரத்தில் ஒருவன் உயிர் வாழ போதுமானது என்று இந்திய பொருளாதார நிலைமையை விளக்கப்போக அவனவன் ஒரு ரூபாயே போதும் என்று காகிரசுக்கு சொம்படிக்க ஆரம்பித்துவிட்டனர். 

மணிமாறன் தன்னுடைய வலைப்பூவில் இதைப் பற்றி எழுதிய நகைச்சுவையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 

முல்லை பெரியாறு 

தமிழக அரசு வழக்கறிஞர்கள் விசாரணையில் சொதப்பினாலும் தீர்ப்பு தற்பொழுது தமிழகத்திற்கு சாதகமாகவே வந்திருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தவேண்டும், மற்றும் மேலும் புதிய அணைகட்டும் கேரளா சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதி மன்றம்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த விஷயம் இளைப்பாறும்.

கவிதை 

ரசித்தது

கதவு
முகவரி
தொலைக்காது
முகங்களை தொலைத்த ஒரு முன்னோடி
அவசர யுகத்தின்
பிடியில்
ஆளுக்கொரு திசையில்
திரும்ப வர மறந்திருக்க
ஒட்டு வாங்கிய விஸ்வாசம்
அன்னோன்யம் பகிர்ந்தவனாய்
அரசியல்வாதி
பிள்ளைகள் பேரன்களின்
நடை பயின்ற தடம் அழியாமல்
நன்றி வேண்டாது
காவல் காத்தபடி
பாட்டன் வாழ்ந்த வீட்டின் கதவு…!----------------தமிழரசி

கிறுக்கியது 

காவியக்காதல் (மீள்பதிவு)

கமலீ நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று,
கழுத்தை நோக்கி சொன்னதால்
காலணியைக் கழற்றி எறிகிறாய்
கண்களைப் பார்த்து சொன்ன
கயவனுடன் காதல் என்கிறாய்
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற
நீ இருக்கிறாய் என்றால்
கயவனைக் கழற்றிவிடவா போகிறாய்
அடுத்த முறை காதலை சொல்லும் பொழுது
நழுவும் துப்பட்டாவை பிடித்து நிறுத்து
உண்மைக் காதல் புரியும்.

நகைச்சுவை 

தொண்டன் 1:நம்ம தலைவருக்கு மொத்தம் எத்தனை மனைவிகள்?
தொண்டன் 2 : சட்டப்படி ஒன்னு , "செட்டப்" படி ஏழு

கீச்சு கீச்சு 

நரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது - ராகுல் # சும்மா போறியா இல்ல வாய்ல கத்திய விட்டு சுத்தவா ?--------கருத்து தாசன்

கவர்மெண்ட்டு விக்கிது அதனால குடிக்கிறேன்,மக்கள் குடிக்கிறானுக அதுனால கவர்மெண்ட்டு விக்கிது! திரும்பத் திரும்ப பேசற நீ...

ஜொள்ளு 



25 comments:

  1. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. // இன்னும் பிரபல ச்சீ........ ப்ராப்ள பதிவராக முடியவில்லை. அதற்குரிய வரைமுறைகள் இன்னும் பிடி படவில்லை.//

    இது ரொம்ப சிம்பிள். பிரபல பதிவராக முடியலானா 'பிரபல பதிவராக காட்டிக்கொள்வது எப்படி' என்கிற ரூல்ஸை பாலோ பண்ணலாமே.

    ReplyDelete
  3. 600 க்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. நல்ல ஐடியாதான் மணிமாறன்.

    ReplyDelete
  5. எஸ்.ரா. வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  6. //ஆளும் கட்சிக்கு எப்படியும் போனமுறை கிடைத்ததை விட அதிகம் கிடைக்கும் என்றே எல்லா கணிப்புகளும் கூறுகின்றன.//

    2004 லில் வாங்கிய அடி இன்னும் அம்மாவிற்கு ஞாபகம் இருக்கிறது. அதானால்தான் அதிரடி நடவடிக்கை எதுவுமில்லாமல் அமைதியாக இருக்கிறார். எப்படியும் 25 க்கு மேல் வர வாய்ப்பு இருக்கிறது.

    ReplyDelete

  7. காவியக்காதல் அருமை.

    ReplyDelete
  8. இந்த முறை அம்மா வைக்கும் குறி தப்பாது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. 600வது பகிர்வு - வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தினேஷ், தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. 600பதிவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போல காக்டெயில் கலக்கல்! கவிதைகள் இரண்டும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. மூத்ததோ... பீத்ததோ ....
    மொத்தத்தில் உங்களை
    மெத்தப் பதிவராக காண்கின்றேன்...
    வாழ்க வளர்க.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. வித்தியாசமான கவிதைகள்!!

    600 வது பதிவக்கு வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  16. 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. \\ராஜி said...

    600பதிவுக்கு வாழ்த்துகள்//

    ராஜி நன்றி.

    ReplyDelete
  18. \\s suresh said...

    600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போல காக்டெயில் கலக்கல்! கவிதைகள் இரண்டும் சூப்பர்! வாழ்த்துக்கள்!//

    சுரேஷ் வருகைக்கு நன்றி.


    ReplyDelete
  19. \\Advocate P.R.Jayarajan said...

    மூத்ததோ... பீத்ததோ ....
    மொத்தத்தில் உங்களை
    மெத்தப் பதிவராக காண்கின்றேன்...
    வாழ்க வளர்க.. வாழ்த்துகள்..//

    வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  20. \\அருணா செல்வம் said...

    வித்தியாசமான கவிதைகள்!!

    600 வது பதிவக்கு வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.//

    வருகைக்கு நன்றி அருணா.

    ReplyDelete
  21. \\வேடந்தாங்கல் - கருண் said...

    வாழ்த்துக்கள்...//

    கருண் நன்றி

    ReplyDelete
  22. Hey...congrats.....continue ur work.....

    ReplyDelete
  23. விரைவில் 1000த்தை எட்ட வாழ்த்துகள்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.