பணவீக்கம்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. பொருளாதார வல்லுனர்கள் மூன்று பேர் இருந்தும் ஒன்று செய்யமுடியவில்லை. மண்ணு, புரானாப்பு, செட்டியார் என்று பழந்தின்று கொட்டை போட்டவர்கள் முழி பிதுங்கி நிற்கின்றனர். ரூபாய் மதிப்பு சரிவை சமாளிக்க இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று பெட்ரோலியம் மற்றொன்று தங்கம். இரண்டும் நம்நாட்டின் அபரிமித தேவைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஓரளவுக்கு தங்கத்தைதான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு வரிவிகிதத்தை ஏற்றினாலும் இறக்குமதியை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களின் பொன்னாசைக்கு விடிவு கிடையாது.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் நம் நாட்டை சுரண்டி ஊருக்கு விற்ற "திருவாழத்தான்கள்தான்" என்பது மக்களுக்கு தெரியும்.
என்னவோ போடா மாதவா........... இன்னி தேதிக்கு சரக்கும் சோறும் கிடைத்தால் போதும்.
விசுவாசத்திற்கு வந்த சோதனை
விசுவாசம் என்றால் ஓப்பித்தான், ஓப்பி என்றால் விசுவாசம் என்று ஆத்தாவே புகழ்ந்த தேனிக்காரருக்கு அஷ்டமத்தில் சனி போல. ஆத்தா சந்தேகப்படும் படியாக ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் போட்டுக்கொடுத்து விட்டார்களாம்.
அவர் குனிந்த குனியலுக்கு இப்பொழுது குனியவைத்து கும்முவார்கள் போலும். ஓப்பிக்கு ஆப்பு ரெடி.
குனிந்தாலும் பதவி நிரந்தரமில்லை என்று புரிந்தால் போதும்.
கேப்டன் 61
கேப்டனுக்கு 61 வயசாகுதான். எல்லா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
ராகுல்காந்தியும் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறாராம்.என்ன அனுப்பித்திருப்பார், "அறுபத்தியோராவது வயதில் அடி எடுத்து வைக்கும் கேப்டனுக்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றா?
ரசித்த கவிதை
யாழ்நகரில் என் பையன்
கொழும்புவில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ஃப்ரான்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஓஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையனையா?
பாட்டனார் பயன்படுத்தி
பழமரங்கள் நாட்டிவைத்த
தோப்பை அழியவிட்டு
தொலைதேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?
-----------------------------------------------------ஜெயபாலன்
ஜொள்ளு

10 comments:
நல்லது... நன்றி...
தனபாலன் வருகைக்கு நன்றி.
61 வயதா?! நம்ப முடியவில்லை
ராஜி வருகைக்கு நன்றி.
பணவீக்கம், ஓபி, கேப்டன், ஜொள்ளு, எல்லாமே கலக்கல் பாஸ்
ஜீவன் வருகைக்கு நன்றி.
ஜொள்ளு!! where from you get these photos!! good!!
வருகைக்கு நன்றி.
Kavithai nalla kalkkal. Thannks
Kavithai - Nalla thoru kalakkal Aiya. This cocktail is really a mixture. Keep it up. Good luck.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.