முதலில் எல்லோருக்கும் சுதந்திர தினநல்வாழ்த்துகள்........
வீட்டுக்காரம்மாவின் வேண்டுதலுக்கிணங்க அந்தப் படத்த பார்த்து தொலைச்சிட்டேன். ரொம்ப கூட்டமா இருக்கும் அதால இரண்டரை மணி காட்சிக்கு டிக்கட் எடுத்திடலாமுன்னு சொன்னதால பதினொன்றை மணிக்கு சிட்டி செண்டர் போனோம். அங்கே பதினொன்றை மணிக்கே ஒரு காட்சி இருக்கு என்றவுடன் டிக்கட் எடுத்தேன். எந்த சீட்டு வேண்டும் என்று பதிவாளர் கேட்க எங்கே வேண்டுமேன்றாலும் தருகிறேன் என்றாள்.கடைசி ரோவில் இரண்டு சீட்டு வாங்கிக்கொண்டு போய் அமர்ந்தோம்.
எங்களுக்கு முன்பே ஒருவர் வந்து வேறு ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். நல்ல அணில் குஞ்சு போலும். படம் ஆரம்பிக்கும் முன் மேலும் மூவர் வந்தனர். ஆக மொத்தம் தியேட்டரில் ஆப்பரேட்டருடன் சேர்த்து ஏழு பேர். ஆனால் படம் பார்த்தது ஆறு பேர்தான். ஆபரேட்டர் ஆட்டோவில் போட்டுவிட்டு பில்லிப்பினியுடன் கடலை போட போய்விட்டார்.
இனி தலைவா படம் பற்றி. இது விமர்சனம் இல்லைங்க்னா..................ஏன் என்றால் படத்தை இதுக்கும் முன்பே பல பேரு அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு கிழித்து தொங்கவிட்டுட்டாக. ஆதலால் இனி கிழிப்பதற்கு ஒன்று இல்லை.
படத்தில ஆரம்பத்திலே பெரிய சுதந்திர. புரட்சி வீரர்களை எல்லாம் பேக்டிராப்பில் போட்டு நல்ல மரியாதை!!!!!!!!!!!!!!!? கொடுத்திருக்கிராறு இயக்குனர்.
முதலில் இயக்குனருக்கு ஒரு கேள்வி? நாயகன், பாட்ஷா, தேவர்மகன் என்று கதையை சுட்டு உல்டா பண்ணி ஒரு கதையை ரெடி பண்ணி அடுத்த முதல்வர் கனவில் இருப்பவருக்கு அல்வா கொடுத்திருக்கீங்களே, உங்களுக்கு கூச்சநாச்சம் இல்லையா?
அவிக அப்பாவிடம் கதை சொல்லியிர்ப்பீக போல, அவரு இப்போ தலைவா, தலைவன்னு எத சொன்னாலு நாலுகாலில் குனிந்திடுவார்.
உங்க ஹீரோவிற்கு நடனம் நல்லா வரும். அதையாவது சரியாக உபயோகப்படுத்தி இருக்கலாம். அவருக்கு போட்டி என்று வைத்து ஒரு சொதப்பல் நடனம். அவர் இதை விட நல்ல நடனம் பல படங்களில் ஆடியிருக்கிறார்.
படத்தில அரசியல் கிடையாதுதான். ஓட்டுப்போடுங்க, இலவசத்தை கிண்டல் அடிக்கிற ஸீன் எல்லாம் சத்தியமா கிடையாது. ஒரே ஒரு சீன்ல "உன்னிய மாதிரி (தலையை ஆட்டிக்காட்டி) ஆடினவங்கதான் இப்போ முதன் மந்திரி" என்கிறார். இதுக்கெல்லாம் அம்மா காண்டாகமாட்டாங்க.
இடைவேளை வரைக்கும் படம் நத்தை வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. சரி இண்டர்வல் அப்புறம் பயங்கர பாஸ்டா போவும்போல என்று நினைத்தால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டுட்டாக.
சத்யராஜ் அபீட் ஆனவுடன் நம்ம தளபதி தலைவா ஆகுறாரு. தக்காளி சத்தியமா இந்தக்கதையை வேற டைரடக்கரு இன்னும் நல்லாவே செய்திருப்பாரு. ஒரு எழுச்சியோ இல்லை ஒரு பில்ட்அப்போ சத்தியமா இல்லை.
படத்தின் இறுதியில் வரும் அந்தப்பாட்டு "வாங்கன்ன வணக்கம்னா" உண்மையான விஷுவல் ட்ரீட்டுதான், ஆனால் அதுமட்டும்தான். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை.
எ.ஆர். முருகதாஸ் இளைய தளபதியை வைத்து துப்பாக்கி நல்லாவே செய்திருந்தார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் திரைக்கதை.
இந்தப்படத்த அணில் குஞ்சுகள் வழக்கம்போல் விஷுவல் ட்ரீட்டு, வசூலில் சாதனை, கோயம்பேடு கோவிந்தாவில் பதினெட்டு பேர் படம் பார்த்தாக, அமெரிக்காவில ஹிட்டு, அண்டார்டிகாவில பிச்சுகிச்சுன்னு அவங்களையே அவங்க ஏமாத்தி அவுக ஹீரோவையும் வளர விடாம பண்றானுங்க.
படத்தில் உள்ள குறைகளை சொல்றவன "புழுத்த நாய் குறுக்கே போகமுடியாத அளவுக்கு" திட்டுவானுங்க.
தலைவா விற்கு எதிரி அவரும், அவர் தந்தையும், அவருடைய ரசிகர்களும்தான். அவரு நீலாங்கரைக்கு தலைவர் ஆவதே சந்தேகம்தான்.

27 comments:
அருமையான விமர்சனம்! உண்மையை சொன்னால் பலருக்கு பிடிப்பது இல்லை! சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கு நன்றி சுரேஷ்.
பார்த்து பாஸ்.... தலைவாவுக்கு விமர்சனம் போட்டு பலர் நண்பர்களை இழந்துள்ளார்கள்!! என்ன கொடுமை இது??
பரவாயில்லை பாஸ்.
வருகைக்கு நன்றி.
இனிமே உங்க வீட்டம்மா படத்துக்குப் போகணும்னு கேப்பாங்க?
திரும்ப கேட்பாங்க பாஸ். அடுத்த விஜய் படத்துக்கு.
வருகைக்கு நன்றி.
வணக்கம் நண்பரே...
உங்களுக்கு தோன்றியதை நச்சினு
எழுதியிருகீங்க...
நமக்கு எது வருமோ அதைச் செய்யணும்
என்று இன்றைய நடிகர்கள் நினைத்தாலே போதும்
நல்ல சினிமாக்கள் வரும்...
மகேந்திரன் உண்மை. தங்களுக்கு எது வருமோ அதை செய்தால் அவர்களுக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது.
வருகைக்கு நன்றி.
வீட்டுக்காரம்மாவின் வேண்டுதலுக்கிணங்க அந்தப் படத்த பார்த்து தொலைச்சிட்டேன்//
கட்டிய கைகளுடன் தோன்றிய அந்த உருக்கமான வீடியோவை பார்த்ததினால் விளைந்த பலன் தானே இது
ஐயோ பாஸ் வீட்டுக்கார அம்மா இன்னும் அந்த விடியோவை பார்க்கவில்லை. பார்த்தா நான் அம்பேல் இன்னொரு தபா படம் பார்க்கனும்னுவாங்க.
தலைவா...நான் என் கருத்துப் பெட்டியை
சாரி...குப்பைத் தொட்டியை
நிரந்திரமாக மூடிவிட்டேன்....
இதுவும் நல்ல யோசனைதான். வருகைக்கு நன்றி பாஸ்.
இன்னும் நல்லா கும்முங்க boss அணில் தொல்லை தாங்க முடியல
அனானியா வந்து அம்சமான பின்னூட்டம் போட்டிருக்கீங்க. வருகைக்கு நன்றி.
உண்மையான சினிமா ரசிகன் இது போன்ற விமர்சங்களில் ஈடு பட மாட்டன் .. தலைவா படத்தை பற்றி தவறாக எழுதியவர்கள் இதுக்கு முந்திய விஜய்யின் வெற்றி ,நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களுக்கும் கேவலாமான விமர்சங்கலையே எழுதியவர்கள் .. இவர்கள் திரைப்படத்தை பார்த்தார்களோ யாருக்கு தெரியும்..
ஆக மொத்தத்தில் நான் சொல்ல வாறது தலைவா பாடம் நேற்று பாத்தேன் ... நகைசுவை , சஸ்பென்ஸ் , அதிரடி ... அதற்காக துப்பாக்கி படம் அளவுக்கு எதிரபார்பை தவிர்த்து ஒரு முழுமையான நல்ல திரைக்கதையுடன் ஒரு கமர்சியல் திரைப்படம் ...
நீ விஜய் ரசிகன் எண்டு கமெண்ட் அடித்து என்னை கிழிக்க போகும் நண்பர்களே ...
நான் சினிமா ரசிகன் ... நன் சினிமா ரசிகன் நான் சினிமா ரசிகன்
ரிஹம் வருகைக்கு நன்றி. நல்ல படம் எனபது ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாறுபடும். தலைவா என்னைப்பொறுத்த வரையில் ஒரு கேவலமான படம்.
ஃபர்ஸ்ட் ஹாஃப் தாறுமாறு தக்காளி சோறுன்னு என்னை ஏத்திவிட்டா அந்த ரெண்டு பேரு மட்டும் கையில சிக்குனானுங்க???
ஆனால் படம் நீங்க சொல்ற மாதிரி ரெம்ப கேவலமா லாம் இல்ல (விஜையின் கைகட்டி இன்டர்வ்யூ பாத்த பிறகு), ஆனா படம் மோசம் தான் , ஓவர் Hype தான் படத்துக்கு பெரிய MinusPoint
ரஞ்சன் மொத்தத்தில் மோசம்தான் என்கிறீங்க.
DAI NAYA PADAMA ENNUM CHENNAI LA RELEASE AGALA ADUKULLA KOYANBEDU 7 CITY CENTRE REAL VUDARA NAYA.
ஹா..ஹா.. யான் பெற்ற துன்பம் நீங்களும் பெற்றாச்சா...?
//ஆக மொத்தம் தியேட்டரில் ஆப்பரேட்டருடன் சேர்த்து ஏழு பேர். ஆனால் படம் பார்த்தது ஆறு பேர்தான். //
எல்லா வெளிநாட்டிலும் இரண்டாவது வார நிலைமை இதுதாங்க... ரிபீட் ஆடியன்ஸ் சான்சே இல்ல.
//உங்களுக்கு கூச்சநாச்சம் இல்லையா?//
நல்லா நாக்கை புடுங்கிகிற மாதிரி கேள்வி கேட்டுருகீங்க பாஸ்.
கண்டிப்பா துப்பாக்கியின் வெற்றிக்கு திரைக்கதைதான் முக்கிய காரணம். அதேபோல் தலைவா தோல்விக்கும் திரைக்கதைதான் காரணமா இருக்கும்
ஐயா வினாயகமூர்த்தி சிடிசெண்டர் கோயம்பேடு என்று எவன் சொன்னது. நான் பார்த்தது வெளிநாட்டில் டோஹா சிடிசென்டரில். மேலும் உங்களைபோன்ற ஜென்மங்களுக்கு மரியாதை எனபது துளிகூட கிடையாது. அது சரி உங்கள் தலைவன் போலதானே நீங்களும்.
It's a kitchadi but not prepared (or done) properly for the taste (of audience).
super
super
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.