Wednesday, 21 August 2013

பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்

இப்பொழுதெல்லாம் படமெடுத்து  வெளிக்கொணர படாத பாடு படவேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்களை எரிச்சல் கொள்ளும் வசனங்கள் வைத்தால் கேட்கவே வேண்டாம். மேலும் தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் இல்லையென்றால் டாஸ்மாக் மூடிய நாளில் குடிமகர்கள்(மரியாதையை கவனிக்கவும்) போல் ஆகிவிடுவார்கள் நம் கதாநாயகர்கள். ஆதலால் யாரையும் உசுப்பிவிடாத பன்ச் (பஞ்ச) டயலாக்கிற்கு  இப்பொழுது மவுசு அதிகமாகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் நம்மால் முடிந்த உதவியை தமிழ் கலையுலகிற்கு அளிக்க  ரூம் போட்டு கவுந்து படுத்து யோசித்தது.

தல, தளபதி, சுப்ரீம், சூப்பர், ஒலக்கை நாயகன் இன்னும் லிட்டில் சூப்பர், பிக் சூப்பர், புரட்சி, பவர், என்று எல்லா ஸ்டார்களும் உபயோகிக்க நம்மால் முடிந்த கலையுலக சேவை.

அதிகமா கொதிச்ச ரசமும், குறைவா கொதிச்ச சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவமே இல்லை.

இது இரண்டு வழிப்பாதை  எப்படி வேணுமானாலும் போகலாம் ஆனால் திரும்பி வரமுடியாது.

டேய் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டுன்றேயே ஆண்ட்ராய்டா உன்னைப் பெத்தது , உங்க அம்மாடா.

கண்ணா நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காமப் போனாலும் முட்டிக்கப்போறது நீதான்.

அணில் பெருச்சாளியாகலாம் ஆனா ஆமை வடையாகுமாடா?

டேய் என்னையெல்லாம் பார்க்காம இருந்தா பிடிக்கும் ஆனால் என்ன பார்க்க பார்க்க எவனுக்குமே பிடிக்காது டா.

டேய் நீங்களெல்லாம் மணலுலதான் கயிறு திரிப்பீங்க நாங்க கயிறுல கோமணம் கட்டுவோம்.

எச்ச்சச்ச்ச எச்ச்சச்ச்ச கச்ச உம்மேல துப்புவேண்டா எச்ச.

கடவுள நேரா பார்த்தவனும் இல்லை, கலக்கல கப்புன்னு குடிச்சவனும் இல்ல.

நாங்க எல்லாம் தப்பு பண்றவங்க இல்லை தப்புகள் பண்றவங்க புரிஞ்சுக்க.

நீங்களெல்லாம் கரண்டிய சாம்பார் ஊத்த தான் உபயோகிப்பிங்க  நாங்க அதால அடி, குத்து, உதை எல்லாம் வாங்குவோம்.

உன்ன பார்க்குற பிகர நீ பார்த்தா நீ தேத்தற பிகர இன்னொருவனும் தேத்துவான்.

டேய் நான் யாரு தெரியுமா எங்க அப்பா அம்மாக்கு பிள்ளைடா, அண்ணனுக்கு தம்பிடா, தங்கச்சிக்கு அண்ணன்டா.


ஐ ம் சிட்டிங்............, ஐ ம் டாக்கிங்................ நீ ஸ்லீப்பிங் ............. 

டாஸ்மாக் என்பது  உன்னை தேடி வருவதில்ல நீ தேடிப்போறது.

சாக்கடையில தலைய விட்டவனும் இல்லை டீக்கடையில பொறையை சுட்டவனும் இல்லை.

இன்னும் வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் இருபது கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவும், எ, பி, சி ஏரியா உரிமையும் தந்தால் மல்லாக்கப்  படுத்து யோசித்து கதாநாயகனின் தரத்திற்கு ஏற்ப எழுதிக் கொடுக்கப்படும்.

தொடர்புகொள்ள கொருக்குப்பேட்டை கும்மாச்சியை  அணுகவும்,

முகவரி 

பஞ்ச டயாலாக் கிங் கொருக்குபேட்டை கும்மாச்சி
டாஸ்மாக் இல்லம்
டுபாக்கூர்  குறுக்கு தெரு 
பேமானி நகர் 
பக்கிபுரம் 
சென்னை




.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஜூப்பரு....!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆதலால் பயணம் செய்வீர் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

K said...

ஹா ஹா எல்லாமே கலக்கல் பஞ்ஸ்!!

மகேந்திரன் said...

செம...

கார்த்திக் சரவணன் said...

எல்லாமே கலக்கல்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

முத்தரசு said...

பாஸ்
இதுக்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கிடுங்க..

sarathy said...

டாஸ்க் மார்க்கு நல்லாவே வேலை செய்யறது , ஓய் !

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.